நம் நாட்டில் தொண்டாற்றிய கிருத்தவர்கள் யாரும் இந்துவாக மாறவில்லை. திருவாசகத்தால் உருகி மொழிபெயர்த்த அறிஞர போப் அவர்களும் தன் சமயத்தில் இருந்து மாறவில்லை. அதுபோல் இந்து சமயத்தினர் கிருத்துவ சமயக் கருத்துகளைப் படிப்பது தவறல்ல. ஆனால், சமய மாற்றம் என்பது ஆயிரத்தில் ஒன்றாக எப்போதாவது நடைபெறுவதாகத்தான் இருக்க வேண்டும். சமய மாற்றம் பண்பாட்டு மாற்றமாக மாறுகிறது. தமிழர்களாகஇருப்பினும் பல கிருத்துவ அமைப்புகள் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதில்லை. ஏறத்தாழ அனைத்துக் கிருததுவர்களுமே இந்துக்கள் அளிக்கும் பொங்கல் முதலான உணவினை இந்துக் கடவுளுக்கு வழிபாட்டில் அளித்திருப்பீரு்கள் என்று வாங்குவதில்லை. பள்ளிகளில் கிருத்துவர்கள் நடத்தும் கொடுமை தனி. இத்தகைய சூழலில் சமயம் மாறியவர்களுக்குச் சலுகைகள் நீடிக்கக் கூடாது. அதற்கு முதலவரும் போராடக் கூடாது. எல்லாச் சமயக் கருத்தையும் வரவேற்போம். ஆனால், சமய மாற்றத்தைக் கட்டுப்படுத்துவோம. அப்படியும் மாறினால் இப்பொழுது உள்ளதபோல் சலுகைகளை நிறுத்துவோம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 24 Dec 2010 12:21:43 AM IST
சென்னை, டிச.23: தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற போராடவும் தயார் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். சென்னையில் வியாழக்கிழமை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் மற்றும் அனைத்து திருச்சபைகள் இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் பெருவிழாவில் அவர் பேசியது: கிறிஸ்தவ சமுதாயத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. நான் சார்ந்துள்ள கட்சி மட்டுமல்ல, சமுதாய இயக்கமும் கூட. அந்த இயக்கத்தில் எங்களை வழிநடத்தியவர்களில் பலர் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதில் முக்கியமானவர் நான் பிறந்த திருவாரூருக்கு அருகில் பிறந்த ஏ.டி. பன்னீர்செல்வம். ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அப்போது, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்துகொண்டு இருந்தது. சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ராஜாஜி, பெரியாரும், சோமசுந்தரபாரதியும் மட்டும்தான் ஹிந்தியை எதிர்க்கிறார்கள் என்றார். அப்போது எழுந்த பன்னீர்செல்வம், ஹிந்தியை அந்த இருவர் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஹிந்தியை ஆதரிப்பது நீங்கள் மட்டுமே என்று பதிலடி கொடுத்தவர். ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தீவிரமாகப் போராடியவர். முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதைப்போல கிறிஸ்தவர்களுக்கும் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினோம். அதனால், அவர்களுக்குப் பாதிப்பு என்று தெரிந்ததும், அதனை நீக்கிவிட்டோம். இப்போது, என்னிடம் நீங்கள் 3 கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள். தலித் கிறிஸ்தவர்களுக்கும் இந்து தலித்துகளுக்கு வழங்கப்படுவதைப்போல இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. யாராலும் மறுக்க முடியாதது. இதுபோன்ற கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையில் என்னிடம் வைத்துள்ளீர்கள். நீங்கள் என்ன கேட்டாலும் கொடுப்போம். நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்போம். இங்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் நிறைவேற்றும் பொறுப்பை தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என்று உறுதியளிக்கிறேன். இங்கே பேசியவர்கள், நான் இந்தியாவையும், மத்திய அரசையும் ஆட்டுவிப்பதாகச் சொன்னார்கள். நான் யாரையும் ஆட்டி வைப்பவனும் அல்ல. ஆடுபவனும் அல்ல. ஆனால், நீங்கள் என்னை ஆட்டிவைத்தால், நான் ஆடத் தயாராக இருக்கிறேன். உங்கள் கோரிக்கைகளுக்கு கலை உணர்வோடு நான் தரும் பதில் இதுதான். தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கால்டுவெல் போன்ற கிறிஸ்துவ அறிஞர்கள் பெரும் தொண்டாற்றியுள்ளனர். கால்டுவெல்லின் நினைவைப் போற்றும் வகையில் அடுத்த வாரம் நெல்லையில் நடைபெறும் நினைவு விழாவில் நான் பங்கேற்க உள்ளேன். சிறுபான்மை மக்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். சிறுபான்மை மக்களுக்காக எந்தத் தியாகம் செய்யவும் நாங்கள் தயார். ஆட்சியில் இருந்தால் அதிகாரத்தைப் பயன்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றலாம். ஆட்சியில் இருந்தாலும் இன்னொரு அரசின் மூலம்தான் கோரிக்கை நிறைவேற்ற முடியும் என்றால் அறிவு, அணுகுமுறை ஆகியவற்றைப் பயன்படுத்தி நிறைவேற்றுவோம். அப்படியும் நிறைவேற்ற முடியாவிட்டால், அதற்காக கிறிஸ்தவ மக்களோடு இணைந்து நான் போராடவும் தயாராக இருக்கிறேன். நான் இப்படிச் சொல்வதால் கிறிஸ்தவர்களைப் போராட்டத்துக்கு அழைக்கிறார் என்று யாரும் தவறாக நினைக்கக் கூடாது. உங்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சியின் துணையோடு நான் நிறைவேற்றுவேன் என்றார் முதல்வர் கருணாநிதி. விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ்,பேராயர்கள் ஏ.எம்.சின்னப்பா, தேவசகாயம், எஸ்றா சற்குணம், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ், ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியின் முதல்வர் ஜெசிந்தா குவாட்ரஸ், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைமை போதகர் பால் தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இலக்குவனார் திருவள்ளுவர் அவேர்களே நீங்கள் சொல்லியது சூப்பர்.
By ulakanathan
12/24/2010 10:16:00 AM
12/24/2010 10:16:00 AM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக