ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

சென்னை பொது மருத்துவமனைக்கு பெரியார் பெயர்: கி. வீரமணி கோரிக்கை


சென்னை, ஆக.21- சென்னை பொது மருத்துவனைக்கு பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 17ம் தேதி பெரியாரின் 132வது பிறந்தநாள் வரவுள்ளது. சென்னை பொது மருத்துவமனையை பெரியார் அதிகமாக பயன்படுத்தியவர். மேலும், அவரை அண்ணா, காமராஜர், லோகியா போன்ற தலைவர்கள் அங்கு தான் சந்தித்து பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜாஜி பொது மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், பெரியார் பல காலம் தங்கி சிகிச்சை பெற்ற சென்னை பொது மருத்துவமனைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தொண்டர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள பெரியார் பற்றாளர்களின் சார்பில் தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கி. வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

இனிமேல் யாராவது அயலவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தாய்நில மக்களுக்கு எதிராகப் போராடினால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் பாதுகாப்பாகச் சிறையில் வைக்க வேண்டும். முத்துக்குமார் ஈகம் வெல்க! 
வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2010 5:11:00 AM
மதுரை எர்சுகின் அரசு மருத்துவமனைக்கு இராசாசிபெயர் சூட்டப்பட்டதால் சென்னை மருத்துவமனைக்குப் பெரியார் பெயர் வைப்பது பொருத்தமே. ஆனால், சீமான் கூறியது போல் வீரப்போராளி முத்துக்குமார் பெயர்தான் வைக்க வேண்டும். பெரியார் பெயர் பல்கலைக்கழகம், அரசு கட்டடம் முதலானவற்றிற்கு முன்னரே சூட்டப்பட்டுள்ளது. முத்துக்குமாரின் ஈகத்தை - தியாகத்தை-நாம் போற்றும் வகையில் அவர் பெயரைச் சூட்டுவதே முறை. ஆனால், அவர் தன் இறுதி முறியல் அரசின் / ஆளுங்கட்சியின் கையாலாகாத தன்மையைச் சுட்டிக்காட்டியதால் அரசு அது குறித்து எண்ணிப் பார்க்காமல் இருக்கலாம்.எனினும் கலைஞர் எண்ணினால் முடியும். ஆசிரியர் வீரமணி அவர்களுக்கும் பெரியார் பெயர்தான் வைக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருக்காது. இராசீவ் பெயரைச் சூட்ட வலியுறுத்தும் கோவனின் கோரிக்கைக்கு எதிராகத்தான் அவ்வாறு சொல்லியிருப்பார். எனினும் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குத் தந்தை பெரியார் பெயரையும் அரசு பொது மருத்துவமனைக்குத் தமிழர் தாயக உரிமைக்கு உயிரளித்த உத்தமர் முத்துக்குமார் பெயரையும் சூட்ட வேண்டும். பொதுவாக இனிமேல் யாராவதுஅயலவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தாய்நில மக்களுக்
By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2010 5:10:00 AM
தமிழினத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட தந்தை பெரியார் பெயர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வைப்பது மிகப்பொருத்தம்.வரும் செப்டம்பர் 17 இல் பெரியாரின் பிறந்தநாளில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயலைச்செய்ய உலகத் தமிழர்களின் சார்பில் வேண்டுகிறேன்.
By வேந்தன்,புதுச்சேரி
8/22/2010 1:15:00 AM
"endrum tamizhan" you quoted "வந்தேறிகள்" who is that? - Akash
By Akash
8/21/2010 10:18:00 PM
PERIYAR PLAYED A VITAL ROLE IN BRINGING THE TAMIL TO THIS LEVEL. SO IT IS BETTER TO NAME THE HOSPITAL ON HIS NAME
By SURYAPRAKASH
8/21/2010 8:11:00 PM
திரு கே. வீரமணியின் வேண்டுகோள் நிராகரிக்க பட வேண்டியது. சென்னை பொது மருத்துவ மணைக்கு திரு பெரியாரின் பெயர் பொருத்தமானது அல்ல. பொதுவாக மருத்துவமணைக்கு வருபவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவரவர்கள் வழி படும் கடவுளை நம்பித்தான் வருகிறார்கள். கடவுளை நம்புவன் முட்டாள் கடவுளை வழிபடுகிறவன் காட்டு மிராண்டி என்று உபதேசம் பெயரை வைப்பது அந்த பொது மருத்துவமனையை இழுத்து மூடுவதற்கு சமம். டாக்டர் ரங்காச்சாரி அவர்கள் பெயரை வைப்பதே பொருத்தம்.
By S.Radhakrishnan
8/21/2010 7:50:00 PM
Generally I do not support naming University and Hospitals in the name of politicians. But EVR is a great Indian Leader and life long worked for the upliftment of Dravidians, women, harijans, etc. His self respect and self confidence movements help increase people confidence and progress. He brought Tamil letter revision. I SUPPORT ANYTHING NAMED AFTER PERIYAR INLCUDING CHENNAI GENERAL HOSPITAL. DO NOT NAME ANYTHING IN TAMIL NADU IN THE NAME OF RAJIV, SONIA, ETC. BECAUSE THE NORTH INDIANS DON'T CARE TN LEADERS LIKE KAMARAJ, RAJAJI, ETC.
By MANIMARAN
8/21/2010 6:22:00 PM
தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகால பாரம்பரிய விழுமியங்களை கொச்சைப்படுத்தி வந்தேறிகள் தமிழ்மக்களின் அடையாளங்களை மாற்ற வழிகோழிய ஈரோட்டு இராமசாமியின் பெயரை மார்ச்சுவரிக்கு வேண்டுமானால் வைக்கலாம்.
By என்றும் தமிழன்
8/21/2010 6:07:00 PM
சென்னை பொது மருத்துவனைக்கு ராசாத்தி அம்மாள் பெயர் சூட்ட வேண்டும்.
By Chidambaram
8/21/2010 5:51:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக