ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஓணம் பண்டிகை: முதல்வர் வாழ்த்து


சென்னை, ஆக. 21: ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு தனது வாழ்த்துகளை முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:கேரள மாநில மக்கள் அறுவடைத் திருநாளாகப் பெரிய அளவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டும் ஓணம் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.சாதி, மத, வேறுபாடு கருதாமல் எல்லா மக்களும் கொண்டாடும் ஓணம் திருநாள் ஆணவம், அகம்பாவம் ஆகிய கொடிய குணங்கள் மனித சமுதாயத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதையும், அன்பு, அமைதி, சகோதர நேயம் ஆகியன மண்ணில் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.ஓணம் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் மலையாள மொழி பேசும் மக்கள் நிறைந்து வாழும் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு சிறப்பு விடுமுறை விடப்படுகிறது. ஓணம் திருநாள் கொண்டாடும் மலையாள மொழி பேசும் அனைவரின் வாழ்விலும் அன்பும் அருளும், அமைதியும் தழைத்து வளம் பெருகிட தமிழ்ச் சமுதாய மக்கள் சார்பில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். 
கருத்துக்கள்

1.ஓணத்திருநாள் பழந்தமிழர் விழா. பின்னர் இவ்விழா திருமாலின் பிறந்த நாள் எனக் கொண்டாடப்பட்டது. மதுரைக் காஞ்சியில், மக்கள் சேர்ந்து வாழ்வதால் சேரி என அழைக்கப்படும் பகுதி மக்களுக்கிடையே திருவோணத் திருநாளில் யானைப்போர் நடைபெற்றது பற்றிக் குறிப்பிடப்படுகிறது. 2. பிற மாநிலத்தவர் விழாக்களுக்கும் பிற மொழியினர் விழாக்களுக்கும் விடுமுறை விடும் பெருந்தன்மை மிக்க கலைஞர் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் தமிழர் விழாக்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பிற அரசுகளை வேண்டி ஆவன செய்ய வேண்டும். 3. தமிழர்களின் பெருந்தன்மைகளைப் புரிந்து கொண்டு மலையாளிகள் தங்கள் மூல இனமும் மூல மொழியும் தமிழ் என்பதால் தமிழ்ப் பகையாளிகளாக நடந்து கொள்ளாமல் மூதாதையர் இனத்தையும் மொழியையும் போற்றும் நன்றி மிக்கவர்களாக நடந்து கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2010 5:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஓணம் பண்டிகை: ஜெயலலிதா வாழ்த்து
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%u0b93%u0ba3%u0bae%u0bcd+%u0baa%u0ba3%u0bcd%u0b9f%u0bbf%u0b95%u0bc8%3a+%u0b9c%u0bc6%u0baf%u0bb2%u0bb2%u0bbf%u0ba4%u0bbe+%u0bb5%u0bbe%u0bb4%u0bcd%u0ba4%u0bcd%u0ba4%u0bc1&artid=291187&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest


ஓணம் பண்டிகை: ஆளுநர், ஜெயலலிதா வாழ்த்து

First Published : 23 Aug 2010 02:52:39 AM IST


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக