செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் எச்சரிக்கை: கருணாநிதி வரவேற்பு


சென்னை, ஆக.24: திமுகவுடனான உறவு குறித்து வெளிப்படையாக விமர்சித்துவரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அக்கட்சி மேலிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதை முதல்வர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.தமிழகத்தில் திமுக அரசை காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இது திமுக-காங்கிரஸ் இடையிலான உறவை பாதிக்கும் என முதல்வர் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தமிழக காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆஸாத், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும், திமுக அரசை விமர்சிக்க மாநில காங்கிரசார் யாருக்கும் அதிகாரம் தரப்படவில்லை என்றும் தில்லியில் நேற்று தெரிவித்தார். அவ்வாறு விமர்சிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.இதுகுறித்து இன்று நடைபெற்ற திமுக எம்பிக்கள் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, ஆஸாத்தின் கருத்துக்கள் கூட்டணி தர்மத்தை வலுப்படுத்துகிறது என்றும் அதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
கருத்துக்கள்

1.)நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்போம்.அல்லது மேலிடப் பொறுப்பாளரையே மாற்றினாலும் மாற்றலாம். ஆனால், உண்மையிலேயே கூட்டணி நிலைக்க வேண்டும் என்றால் கோவனை இடைநீக்கம் செய்து விளக்கம் கேட்க வேண்டும். அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. கார்த்தி 1/3இடம்தான் கேட்பதால் கோவனுக்கு எதிர்ப்பாட்டுதான் பாடுகிறார். எனவே, தானாக அடங்கி விடுவார். 2.) மாநிலக் காங்கிரசாருக்கு அதிகாரம் தரவில்லை என்றால் மத்தியக் காங்கிரசாருக்கு அதிகாரம் தரப்படுமோ? 3.)தான்தோன்றித்தனமாகப் பேசுபவர்களை அடக்காவிட்டால் கட்சி அடக்கமாகிவிடும் என்பதை உணர வேண்டும். எனவே, சொன்னதைச் செய்க! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 5:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக