கோவை, ஆக. 22: தமிழகத்தில் அடுத்து நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலின்போது, அனைத்து மக்களவைத் தொகுதியிலும் தலா 2 எம்.எல்.ஏ. தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:மத்திய அரசின் சாதனைகளையும், மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியையும் மக்களிடம் பிரசாரம் செய்தால்தான், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உயரும். இதை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரசார இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக பிரதிநிதித்துவம் தேவை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சி பரவலாக உள்ளது. எனவே, தமிழகத்தில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 2 பேரவைத் தொகுதிகளாவது காங்கிரஸ் கட்சிக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இளைஞர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் 10 பேருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.பேட்டியின்போது, தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., எம்.என்.கந்தசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கருத்துக்கள்
![](http://www.dinamani.com/edition/images/coma_open.gif)
![](http://www.dinamani.com/edition/images/coma_close.gif)
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 5:18:00 AM
8/23/2010 5:18:00 AM
![](http://www.dinamani.com/edition/images/coma_open.gif)
![](http://www.dinamani.com/edition/images/coma_close.gif)
By ana
8/23/2010 5:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 8/23/2010 5:01:00 AM