ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

சிறப்புத் தூதர் இலங்கை செல்வதால் என்ன உண்மை தெரியவரும்?


நாகர்கோவில், ஆக. 21: இந்தியாவிலிருந்து சிறப்புத் தூதரை அனுப்பிவைப்பதால் அவர் மூலம் என்ன உண்மை வெளியுலகுக்குத் தெரிந்துவிடப் போகிறது என்று உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கேட்டார். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜீவா பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கை நாடாளுமன்றத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 5 எம்.பிக்கள் தில்லிக்கு வந்து பிரதமரை சந்தித்து, இலங்கைத் தமிழர்கள் நிலைமை குறித்து விளக்கியுள்ளனர். சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியையும் சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் வேகமாக நடைபெறுகிறது. ஒரு லட்சம் சிங்கள ராணுவத்தினர் தமிழர் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினரை அங்கு நிரந்தரமாகக் குடியேற்றம் செய்ய வீடுகள் கட்டும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன என்று அந்த எம்.பிக்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், இங்கிருந்து சிறப்புத் தூதரை அனுப்பி என்ன உண்மை தெரியவரும். ஐ.நா. குழுவை அனுமதிக்காத இலங்கை அரசு இந்திய அரசின் தூதரை வரவேற்கிறது என்றால் அதன் பொருள் என்ன?இந்தியத் தூதர் வெளியிடும் அறிக்கை, ஐ.நா. குழுவை அனுமதிக்க மறுத்ததற்குப் பதிலாக காட்டப்படும். வேறு எதுவும் நடக்காது.காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளைத் தீர்க்க திமுக அரசு முற்றிலும் தவறிவிட்டது. தமிழகத்தில் நடைபெறும் ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கற்களை வெட்டி எடுத்தல் போன்றவற்றில் ஆளுங்கட்சியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும். முதல்வர் மற்றும் அமைச்சர்களின் குடும்பங்களில் இருந்து ஏராளமான அதிகார மையங்கள் உருவாகி நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கிறார்கள்.அரசு நிர்வாகத்தில் தமிழ் முழுமையாக ஆட்சி மொழியாக்கப்படவில்லை. ஆலயங்களில் தமிழ் இல்லை. நமது பள்ளிகளில் ஏறத்தாழ 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும், அனைத்து மக்களும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் ஒன்றுபட வேண்டும் என்ற சிந்தனை பரவும் இக்காலகட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மக்களைப் பின்னோக்கி தள்ளுவதாகும்.மக்களுக்குத் தொண்டாற்றுவோம் என்று நாடாளுமன்றத்துக்கு சென்ற எம்.பிக்கள், மக்களுக்காகப் போராடாமல் அவர்களது சம்பள உயர்வுக்காகப் போராடுவது அனைவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.நாகர்கோவிலில் ஜீவா சிலையைப் பராமரிக்காமலும், அவரது பெயரை சாலைக்கு சூட்டாமலும் இருப்பது அனைத்துத் தமிழர்களுக்கும் வேதனையை ஏற்படுத்துவதாகும். கட்சிக் கண்ணோட்டத்தில் அவரைப் புறக்கணிக்க முயல்பவர்கள் தியாகத்தையும், தொண்டையும் புறக்கணிக்கிறார்கள் என்பதுதான் பொருள் என்றார் பழ. நெடுமாறன்.
கருத்துக்கள்

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல! தமிழினப் படுகொலைகளை நடத்திக் கொண்டே பழியை யார் மீது எவ்வாறு போடலாம் எனக் கற்றுக் கொடுக்கலாம். சிங்களர்களை நாடு முழுவதும் பரவலாக எவ்வாறு குடியமர்த்தம் செய்யலாம் எனப் பாடம் நடத்தலாம். தமிழர்களை அவர்களின் தாய்நிலத்திலேயே எவ்வாறு சிறுபானமையராக ஆக்கிக் கொத்தடிமை முகாம்களில் பூடடி வைக்கலாம் என வழி முறை வழங்கலாம். உலக நாடுகளிடமிருந்து சிங்களர்களைக்காப்பாற்றுவதற்கான நடைமுறைகள் குறித்துக் கலந்து பேசலாம். இன்னும் எத்தனையோ! எத்தனையோ! இவையெல்லாம் தமிழ், தமிழினம், மனித நேயம், போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை, என்றெல்லாம் கூறிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியாது. தெரியவே தெரியாது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2010 5:30:00 AM
என்னய்யா பண்ணுறது? இங்கே ஒரு எட்டப்பன், மேல ஒரு சூனியக்காரி. ரெண்டு பேரோட ராஜ்ஜியம் நடந்துகிட்டு இருக்கு. ஏழை சொல் அம்பலம் ஏறாது. கொஞ்சம் சத்தமா பேசினா தேசிய பாதுகாப்பு சட்டத்துல தூக்கி உள்ளே வச்சிர்றாங்க. எல்லாரும் அவரவர் வேலையை பார்க்கப் போயிட்டாங்க. இதுக்கு இடையில பூங்கொடி மாதிரி நிறைய விஷச்செடிகளும் தைரியமா வெளியே வர ஆரம்பிச்சிருக்கு.
By மதுரைக்காரன்
8/22/2010 4:45:00 AM
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளை புனரமைக்க சீன அரசாங்கம் நிதியுதவியை வழங்கியுள்ளது. இந்தியா,வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு என்று கூறி சிங்கள அரசு மூலம் அதிக நிதியுதவியை வழங்கி வரும் நிலையில் சீனா யாழ் அரசதிபர் மூலமாக நேரடியாகவே 7 பில்லியன் ரூபாய்கள் உதவியை அறிவித்துள்ளது. ஈழ தமிழரும் சீனாவினுடைய இந்த உதவிக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.சீனா மிக பெரிய கலாச்சார மண்டபத்தினை யாழ்பாணத்தில் தமிழருக்காக அமைக்கவுள்ளது.இதனை விட யாழ் நீரேரியில் உள்ள மூன்று தீவுகளில் சீனாவின் மிக பெரும் கோடீஸ்வரர்கள் உல்லாச விடுதிகளையும் உல்லாச கப்பல் துறையையும் அமைக்கவிருக்கின்றனர் இதற்கான இடத்தினை யாழ் ஆளுனருடன் இனைந்து இடைத்தினை தெரிவு செய்து.இது தொடர்பிலான உடன்படிக்கை இன்று கொழும்பில் வைத்து கைச்சாத்தியாகியுள்ளது இந்தியாவால் புறக்கணிக்கப்பட்ட தமிழக தமிழீழ தமிழருக்கு சீனா உதவ முன்வருவதையிட்டு தமிழர்கள் பெரு மகிழ்ச்சி அடைகின்றனர்
By பூங்கொடி
8/22/2010 4:28:00 AM
எல்லாமே கருணாநிதி அடிக்கிற அரசியல் கூத்து ! யாரு செய்த தீவினையோ ...இவன் ஆட்சி அதிகாரத்துல உட்கார்ந்து குடும்பத்துடன் உண்டுக்கொளுத்து திரியும் போது....இந்த இனம் இப்படி பிஞ்சோடும் பூவோடும் கருகிக் கொண்டிருக்கிறது ! இவன் இந்த இனத்த அழிக்கப் பொறந்தவன் அத திறம்பட செய்து கொண்டிருக்கிறான் ! தமிழ் மொழி அப்படின்னு சொல்லி தின்னு அழுச்சுப் புட்டான் ! தமிழ் இனம் அப்படின்னு சொல்லி இந்த வகையில அழிய காரணமா இருக்குறான் !!! நமக்கு அரசியல் பேச புடிக்கல...விடுங்கய்யா ......@ rajasji
By rajasji
8/22/2010 3:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக