திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தொல்பொருள் ஆய்வுச் சட்டத்தை திரும்பப் பெற வைகோ கோரிக்கை


சென்னை, ஆக.23: மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள தொல்பொருள் ஆய்வுச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதால் அதை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க தொல்பொருள் ஆய்வுத் துறை உருவாக்கப்பட்டு, தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன. ஆனால், இந்த அமைப்பு உருவாவதற்கு முன்பு அப்பகுதியில் வாழ்ந்தவர்கள்தான் பாதுகாத்து வந்தனர்.அப்படிப் பாதுகாத்த மக்களை, அவர்களது வாழ்விடங்களில் இருந்து அகற்றி, உள்நாட்டு அகதிகளாக மாற்றுகின்ற வகையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு புதிதாக ஒரு தொல்பொருள் ஆய்வுச் சட்டத்தைக் கொண்டு வந்து உள்ளது. இச்சட்டம் குறித்து, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க அளவில் விளம்பரப்படுத்தி உள்ளது.புதிய சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் இருந்து 1000 அடி வரை எந்த கட்டுமானமும் கட்ட அனுமதி இல்லை. மீறுவோருக்கு ஒரு லட்சம் அபராதத் தொகையுடன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை.குடும்பத்தினர் எண்ணிக்கை பெருகி இட நெருக்கடி ஏற்படும் நிலையில் தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டை விரிவாக்கம் செய்யவோ, கூடுதல் அறையோ, தாழ்வாரமோ, கழிப்பு அறையோ கட்டினால் கூட இச்சட்டத்தின்படி வீட்டின் உரிமையாளரும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள்.ஏற்கனவே வாழ்ந்து வரும் வீடுகள் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு இருப்பின், அவற்றை இடிப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் புதிதாக மின் இணைப்புகள் இனி வழங்கப்பட மாட்டாது.இந்தப் புதிய சட்டம் சுதந்திர இந்தியாவில் வாழ்வதற்கு வழங்கப்பட்டு உள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதுமீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை எதிர்த்து, மீனவ மக்கள் கிளர்ந்து எழுந்து போராடியதைப் போல, தொல்பொருள் ஆய்வுத்துறை கொண்டு வந்து உள்ள சட்டத்தையும் எதிர்த்து மக்கள் போராட வேண்டும்.
கருத்துக்கள்

வைகோ அவர்கள் கூறுவது சரிதான். ஆனால், மாற்றுக் கருத்தையும் தெரிவிக்க வேண்டும்.ஏனெனில் நகர வளர்ச்சியை இது தடுக்கின்றது. சான்றாக மதுரையி்ல் அங்கயற்கண்ணி கோயில கோபுரங்களை விட உயர்வாக வேறு கட்டடம் கட்டக்கூடாது என்று சொன்னதால் உயர்அடுக்கு மாடிக் கட்டடங்கள் உருவாகாமல் போயின. பொதுவாகக் கோயிலைச் சுற்றி உள்ளவர்கள் அல்லது அவர்களின் மூதாதையர்கள் பயன்பாட்டுரிமை பெற்றுக் கோயில் சொத்தைத் தவறான முறையில் பயன்படுத்துபவர்களாகத்தான் உள்ளனர். பொதுமக்கள் சொத்தை ஏய்த்துப் பயன்படுத்தும் அவர்களது கட்டடங்களை இடித்துத் தள்ளினால் தவறில்லை. எனவே, இதனையும் கருத்தில் கொண்டு நகர வளர்ச்சியால் மக்கள் பெற உள்ள பயன்களையும் எண்ணிப் பார்த்து தொல்பொருள் பாதுகாப்பிற்கு மாற்றுத் திட்டத்தை வைகோ அவர்கள் தெரிவிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 6:30:00 PM
வைகோ அவர்களே!! நீங்கள் மக்கள் கவனத்துக்கு வராத விஷயங்களையெல்லாம் வெளியே கொண்டு வருகிறீர்கள்!!! உங்களை மாதிரியான தூய்மையான, பகுத்தறிவாதி,சிந்தனைவாதிதான் நம் தமிழகத்துக்கு தேவை!!! ஆனால் ஒரு சிலர் நீங்கள் இலங்கைத்தமிழர் பிரச்னையை மட்டும் பேசுகிறீர்கள் என்கிறார்கள்!!! நம் தமிழகத்தில் இந்த தொல்பொருள் சட்டத்தில் இருக்கின்ற ஓட்டையை எத்தனை அரசியல்வாதி மக்கள் முன் வைத்து நியாயம் தேடி போராடுகிறார்கள்!!! உங்கள் திறமையை மக்களுக்கு எடுத்துக்காட்ட உங்களுக்கு ஒரு தொலைக்காட்சியை கொண்டு வாருங்கள்!!! அதன் பின்னர் உங்கள் அரசியல் வாழ்வில் பெரிய மாறுதல் வரும்!!! இப்படிக்கு உங்கள் அபிமானி!!
By Kumar
8/23/2010 4:56:00 PM
Unfortunately , Vaiko is fighting for a wrong cause now. If he is peeved that 1000 feet is too much, let it be say, 500 feet. India has many unattended and uncared for monuments, neglected over the years. Now, Centre has woken up to protect them for posterity. 500 feet of no-construction/ encroachment on any grounds is quite good. There was talk of raising ex-servicemen force to protect these ancient monuments from anti-social elements that destroy and pose danger to visitors & ever present Laila-Majnu who have an urge to indelibly mark their love. It should act.
By ASHWIN
8/23/2010 4:43:00 PM
பெரும்பாலும் தொல்பொருள் தொன்மங்கள் எல்லாமே இந்து மத தொடர்புடையவையே. வைகோ ஒரு கிறித்துவர். கூட்டிக் கழித்துப் பாருங்கள், புரியும்.
By தமிழன்
8/23/2010 4:30:00 PM
அட பாவத்தே ஒரு நாதி கூட இல்லியா இந்த ஜெயாவின் எடுபிகிடிக்கு எழுதுவதற்கு, கட்சியில்தான் யாரும் இல்லாமல் தொலைத்துவிட்டார் எழுதுவதற்கும் எந்த நாதியும் இல்லாமல் போய்விட்டார், நேற்றுத்தான் ஜெயா சொன்னார் கவுன்ட் டௌன் ஆரம்பித்துவிட்டது என்று, அவர் சொன்னது கைபில்லைக்கும் (வைகோ ) ஜெயாவிற்கும் பொருந்தி விட்டது. கைபிள்ளை (வைகோ ) மானம், மரியாதையை இழந்துவிட்டாய், இனிமேலாவது கொஞ்சம் சூடு சொரனையுடன் இருக்க பாரு . நான் ஒரு MDMK தொண்டன்.
By MDMK தொண்டன்
8/23/2010 3:49:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
புதிய தொல்பொருள் ஆய்வுச் சட்டத்துக்கு வைகோ எதிர்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக