திங்கள், 23 ஆகஸ்ட், 2010

சிறந்த நாடுகள் பட்டியல்: இந்தியாவை முந்தியது இலங்கை!

First Published : 23 Aug 2010 03:33:03 PM IST

Last Updated : 23 Aug 2010 03:42:37 PM IST

நியூயார்க், ஆக.23: உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க பத்திரிகையான நியூஸ்வீக், உலக நாடுகளில் சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய அம்சங்களை அடிப்படையாக வைத்துத் தொகுத்ததில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 59வது இடத்தையும், இலங்கை 66வது இடத்தையும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முறையே 88 மற்றும் 89வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆசிய நாடுகளில், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே முதல் 20 இடங்களுக்குள் உள்ளன. இந்தப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த நாடுகள், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா அகியவை. அமெரிக்கா 11வது இடத்தையும், ஜெர்மனி 12வது இடத்தையும், இங்கிலாந்து 14வது இடத்தையும் பிடித்துள்ளன. நியூஸ்வீக் இதழ் சார்பில் முதல் முறையாக நாடுகளைப் பற்றிய கருத்துக் கேட்பு மூலம் நடத்திய சர்வேயில் இந்த முடிவுகள் தெரியவந்தன. வாசகர்களிடம் ‘உலகில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் நல்ல முறையில் வாழவும் தகுந்த நாடாக நீங்கள் கருதும் எந்த நாட்டில்  பிறக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கான பதிலாகக் கிடைத்ததில் இந்த முடிவுகள் தெரியவந்தன என்று அந்தப் பத்திரிகையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதே சர்வேயில், ’அதிகம் நேசிக்கப்படும் உலகத் தலைவர்கள் யார்?’ என்ற கருத்துக் கணிப்பில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்துக்கள்

குற்றம் புரிந்தவனைவிட அக்குற்றத்தைச் செய்யத் தூண்டியவனே கடுந்தண்டனைக்குரிய குற்றவாளி. எனவே, தமிழினப் படுகொலைக்க உடந்தையாக இருக்கும் இந்தியா இலங்கையைவிடப் பின்னுக்கு இருப்பது சரிதான்.ஆனால், உண்மையில் இலங்கை கடைசியாக எண்ணக்கூடத் தகுதியற்ற நாடு. எனவே, இந்த ஆய்வு நல்ல முறையில் நடந்திருக்காது. எனவே,இது குறித்து வருத்தப்படவோ பெருமைப்படவோ வேண்டியதில்லை. ஒரு வேளை ஈழத் தமிழர்கள் மீண்டும் ஈழத்தில் பிறக்க வேண்டும் என்று கூறியதை இலங்கை எனத் தவறாகக் கணக்கில் எடுத்திருக்கலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 6:38:00 PM
MANMOHAN SINGH COME FIRST AMONG ALL WORLD LEADERS.BUT YOUR NEWS IS NOT GIVING IMPARTANCE TO IT.
By SURYAPRAKASH
8/23/2010 6:16:00 PM
... What a comment is this? When so called Tamil Protectoris unperturbed by Tamils fate ,why should world?
By R.Krishnamurthy
8/23/2010 5:10:00 PM
... What a comment is this? When so called Tamil Protectoris unperturbed by Tamils fate ,why should world?
By R.Krishnamurthy
8/23/2010 5:10:00 PM
SO TAMIL LIFE IS NOT ANY THING, ANY BODY CAN KILL TAMILS AND BE APPRECIATED. NOW INDIA SHOULD KILL INDIAN TAMILS TO COME BEFORE SRILANKA.
By vis
8/23/2010 4:03:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக