கலைஞர் டி,வி.யில் மிக விரைவில்!
திரைப்படத் துறையினருக்கு வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட (இடமிருந்து) நடிகைகள் ரோஜா, ராதிகா, குஷ்பூ, நடிகர் கார்த்திக், நடி
சென்னை, ஆக.22: என்னுடைய பேரன் திரைப்படத் துறையில் ஈடுபடக் கூடாதா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.திரைப்படத் துறையினருக்கு குடியிருப்புகள் கட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. இந்தக் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:இந்த விழாவுக்கு வரும் நேரத்தில், காலைப் பத்திரிகையில் விகடத் துணுக்கு பார்த்தேன். அதில், கலைஞர் வரலாற்றிலேயே முதல் முறையாக... கலைஞர் கதை வசனத்தில்... கலைஞர் பேரன் தயாரிப்பில்... கலைஞர் பேரன் இயக்கத்தில்... கலைஞர் பேரன் நடித்த... புத்தம் புதிய திரைக்காவியம்... கலைஞர் டி.வி.வியில் மிக விரைவில்! காணத்தவறாதீர்கள் என்று விளம்பரம் போன்ற துணுக்கு."அடடே...!' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? பேரன், பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசு இருந்து அவர்கள் இந்தத் துறையிலே ஈடுபட்டதே கிடையாதா?மகத்தான நடிகர் பிருத்வி ராஜ் கபூரின் மகன் ராஜ் கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்தானே? ராஜ் கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசி கபூர், அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரணதீப் கபூர் - இந்தக் கபூர்கள் எல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா?கலைஞர் வீட்டில் மாத்திரம் உதய நிதி, கலா நிதி, தயா நிதி, அருள் நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. இதற்காகப் பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக்கொள்ளவில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை. ஆனால், உண்மையை நீங்கள்தான் உணர்ந்துகொள்ள வேண்டும்.பிருதிவிராஜ் கபூரின் பேரன், கொள்ளுப் பேரன், பேத்தி வரை கலைத்துறையில் இருக்கலாம். சிவாஜி கணேசனின் மகன் பிரபு இருக்கலாம். அவரது மகன் துஷ்யந்த் இருக்கலாம். ஆனால், கருணாநிதி மட்டும் இருக்கக் கூடாது.ஏனென்றால், கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். அதை ஒழிக்க வேண்டும், வீழ்த்த வேண்டும் என்ற குறுகிய நோக்கமே அவர்களுக்கு உள்ளது. அதைத் தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்துக்கு வரும்போது பிருதிவிராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டும்.அதேபோல், ரஜினிகாந்தின் மருமகனும் நடிப்பதால் அவருடைய பெயரும் ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டும். ரஜினி முழுநேர அரசியலில் இல்லாத காரணத்தால், அவரை விட்டு விடுகிறார்கள் என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்
துணுக்கைப் படித்ததும் சிரித்துவிட்டு மறந்துவிட வேண்டியதுதானே! ஏன், கலைஞர் அதைப் பொருட்படுத்திப் பேசுகின்றார். கபூரின் குடும்பத்தினர் ஆரியரல்லர். இரசினியின் மருமகன் நடிகனான பின்புதான் மருமகனானார். அவரும் ஆரியரல்லர். பிறகு ஏன், ஆரிய- திராவிட வேறுபாட்டைப் புகுத்த வேண்டும்? திராவிடம் திராவிடம் என்று தமிழ்நாட்டில் மட்டும் சொல்லித் தமிழர்கள் தாழ்ந்தது போதாதா? இன்னும் ஏன் திராவிட இயக்கத்தைக் கட்டிக் காக்க வேண்டும்? ஒரு கருத்தைப் புறக்கணித்தால் மறக்கடிக்கப்படும். பொருட்படுத்தினால் மக்கள் உள்ளத்தில் நிலைத்துவிடும். பாசநோக்கத்தில் பார்ப்பதால் வருகின்ற தீவினையே இது. எனவே, மூன்றாம் மனிதர்போல் படித்து மறந்து விடுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 4:54:00 AM
8/23/2010 4:54:00 AM
இந்தக் கரு்த்தில் என்ன தவறு உள்ளது என்று நீக்கியுள்ளீர்கள்?
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 7:24:00 PM
8/23/2010 7:24:00 PM
கொடுமை ..கொடுமை ..இது பெரும் கொடுமை !....இனி ரஜினிகாந்தைப் போல ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் ..தன திறமையால் முன்னேறி சூப்பர் ஸ்டார் என்று புகழ் பெற முடியாது !..திறமையுள்ள எந்த தமிழ் இளைஞனும் இனி சினிமாதுறையில் வளர வாழ முடியாது !!! நசுக்கப் போகிரானையா தமிழனை ! நசுங்கப் போகிரானையா தமிழன் !!! @ rajasji
By rajasji
8/23/2010 3:02:00 AM
8/23/2010 3:02:00 AM
This is another eye wash from MK family!
By srini m
8/23/2010 2:52:00 AM
8/23/2010 2:52:00 AM
ayyo ayyo unga peran kollu peran arasiyalukku,sinimakku,t.v.kku,pressukku,medicinukku,cable t.v.kku,innum enna thurai indiavil undo attunai thurakkum ungal varisu mattume varalam poooooodumaaa
By tubukku
8/23/2010 2:36:00 AM
8/23/2010 2:36:00 AM
உன் வீட்டுப் பெண்கள் மஞ்சள் அரைத்துக் குளிக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை !...மக்களின் இரத்தத்தை உறிஞ்சி அதில் குளிப்பது காட்டுமிராண்டித் தனம் என்கிறோம் !!! உன் மகன் நடிப்பதிலோ...உன் மகள் துடிப்பதிலோ... பேரன் அதைப் படம் எடுப்பதிலோ எங்களுக்கு ஆட்சேபனை இல்லை ! மக்கள் வியர்வை சிந்தி உழைத்து ...அரசுக்கு செலுத்திய காசினைக் கொள்ளையடித்து ...அதை வெள்ளைப் பணமாக மாற்ற உன் குடும்பம் ஆடும் நாடகம் அநாகரீகமானது ! கண்டிக்கத்தக்கது !!! @ rajasji
By rajasji
8/23/2010 2:36:00 AM
8/23/2010 2:36:00 AM
dai Mad munusamy ??????Mind yours words!!!!!!
By Yesurajan Chettikulam Pannaiyoor
8/23/2010 2:09:00 AM
8/23/2010 2:09:00 AM
Dai MK Fraud, problem is why Tax Free for all the tamil junk movies, when they can spend 2 crores just to fly to Malaysia to release a Audio CD,
By SN
8/23/2010 1:45:00 AM
8/23/2010 1:45:00 AM
...
By Munusamy
8/23/2010 1:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்8/23/2010 1:10:00 AM
8/23/2010 4:23:00 AM
8/23/2010 4:20:00 AM
8/22/2010 10:05:00 PM
8/22/2010 9:45:00 PM
8/22/2010 9:30:00 PM
8/22/2010 9:11:00 PM
8/22/2010 8:29:00 PM
8/22/2010 6:32:00 PM
8/22/2010 5:19:00 PM
8/22/2010 3:51:00 PM
8/22/2010 2:32:00 PM
8/22/2010 1:33:00 PM
8/22/2010 1:09:00 PM
சரியான மின்னஞ்சலைக் கொடுக்கவும் சரியான மின்னஞ்சலைக் கொடுக்கவும்