திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கி.பி. 2-ம் நூற்றாண்டிலேயே தாய்லாந்துக்கும் தமிழகத்துக்கும் வணிகத் தொடர்பு


திருச்சி, ஆக.23- தாய்லாந்தில் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கண்டுபிடித்த கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரச முத்திரைகள் உள்ளிட்ட சில பொருட்கள் தமிழகம் மற்றும் ஆந்திரத்துடன் அக்காலத்தில் தாய்லாந்துக்கு வணிகத் தொடர்பு இருந்ததை உறுதிபடுத்தியுள்ளது.
இத்தகவலை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கோயில் ஆராய்ச்சி திட்டப் பிரிவின் கண்காணிப்பாளர் டி. தயாளன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் பிராமி எழுத்துக்கள் காணப்படுவதாகவும், அங்கு கிடைத்த அரச முத்திரைகளுக்கும், தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருட்களுக்கும் ஒற்றுமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தாய்லாந்தில் கிடைத்த ஒரு தங்கத் தகட்டில் காணப்படும் எழுத்து, தமிழகம் மற்றும் ஆந்திரப் பகுதியில் கிடைத்த பழங்காலப் பொருட்களில் மட்டுமே காணப்படுகிறது என்றும் தயாளன் கூறினார்.
அந்த தங்கத் தகடு பிரகஸ்பதி சர்மா என்னும் கப்பல் மாலுமிக்குச் சொந்தமானது. இந்த பெயர் தென்னிந்தியாவில் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. இந்த தகடு தாய்லாந்தின் வெல்லஸ்லி மாகாணத்தில் உள்ள வடக்கு மாவட்டத்தில் புத்தர் கோயில் ஒன்றின் இடிபாடுகளில் கிடைத்தது.
கருத்துக்கள்

தமிழ்நாட்டிற்கும் தாய்லாந்திற்கும் இடையே கலை, பண்பாட்டு உறவுகள் மிகுதியாக உள்ளன. தாய்லாந்து மொழியில் தமிழ்ச் சொற்கள் உள்ளன. தாய்லாந்து நாட்டில் ஏறத்தாழ 1000 ஆண்டுகள் தமிழக மன்னர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். எனவே, தமிழகத்தின் பங்களிப்பு தாய்லாந்து நாட்டின் வளர்ச்சியிலும் வரலாற்றிலும் மிகுதியாக உள்ளது. ஆனால், தமிழர்கள் இந்தியார்களாக மாற்றப்பட்டதால், தமிழகம் தொடர்பான வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 6:46:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக