செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

திமுக ஆட்சியை மாற்ற வேண்டியது எங்கள் கடமை: தா.பாண்டியன் பேட்டி


வேலூர், ஆக. 23: திமுக ஆட்சியை மாற்றியமைக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறினார்.வேலூரை அடுத்த காட்பாடியில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என மத்திய அரசு அனுமதித்ததால், மீண்டும் இவற்றின் விலை இன்னும் சில நாள்களில் உயர உள்ளது.2006-ம் ஆண்டு தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழக சட்டப் பேரவையில் அறிவித்து விட்டு, இதுவரை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.1.5 கோடி பேர் குடியிருப்பு மனை இல்லாமல் குடிசையில் வாழ்வதாக தமிழக அரசு  ஒப்புக் கொண்டுள்ளது. இவர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி மனை வழங்க 7 ஆண்டுகள் ஆகும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். தற்போது குடிசையில் வசிப்பவர்களுக்கு, அவரவர் வாழும் இடங்களுக்கான பட்டாவை இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும்.தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. தமிழ்நாடு அரசு கனிம வள நிறுவனம் இப்போது செயலற்று கிடக்கிறது.மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணி தற்போதும் நீடிக்கிறது. புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்ந்து வருகின்றன என்றார் அவர்.
கருத்துக்கள்

தமிழினப் படுகொலையில் காங்.உடன் கூட்டணி வைத்திருப்பது குறித்து ஒன்றும் கூறவில்லையே! மாற்று அணியின் தூய்மை, இனப்பற்று குறித்து ஒன்றும் சொல்ல இயலவில்லையே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 3:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக