ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்போரை விடுதலை செய்ய வைகோ கோரிக்கை


சென்னை, ஆக.22: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்போரை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சிறைவாசிகள், அதிலும் ஆயுள் தண்டனை அடைந்தோர் பத்தாண்டுகள் தண்டிக்கப்பட்டோர் சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி விடுவிக்கப்படாமலே சிறையில் வாடுகின்றனர். பல சிறைவாசிகள் 15 ஆண்டுகள் கடந்தும் ஏன் 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றசட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் வந்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினேன். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திருத்தத்தில் அதனை எதிர்த்து கருத்து சொன்னது நான்மட்டுமே. பொது மன்னிப்பில் குற்றப்பிரிவுகளைக் காட்டி விடுவிக்கப்படாத சிறைவாசிகளை விடுவிக்க அரசு முன்வர வேண்டும்.பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர் விடுவிக்கப்பட வேண்டும். பரோல் விடுப்பில் சென்று குறிப்பிட்ட நாளில் திரும்பாதவர்களுக்கு ஒருநாள் இருநாள் தாமதமாகிவிட்டது என்று காரணம் காட்டி அவர்கள் விடுதலை பெற முடியாத இன்னலுக்கு ஆளாக்கும் நடைமுறையை மாற்றி, அவர்களையும்மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய தமிழக அரசு முன் வரவேண்டும்.
கருத்துக்கள்

தண்டனையில் பாகுபாடு காட்டக் கூடாது. ஒருபான்மையரைத் தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்து விட்டு மற்றொரு பான்மையரை நீடித்த காலம் அடைத்து வைக்கக் கூடாது. எனவே, நன்னடததையுடன் உள்ள சிறைவாசிகளை முன்கூட்டி விடுதலை செய்யும் திட்டத்தின் கீழ் உடனே விடுவிக்க வேண்டும். வைகோ அவர்கள் குறிப்பிட்டவாறு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுவிக்க வேண்டும். கோவன் போன்றவர்கள் கத்துவார்கள். பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சக் கூடாது. எனவே, நளினி, பேரறிவாளன் உட்பட நீண்ட காலம் சிறையில் இருப்போரை விடுவித்து மனித நேய அரசாக நடந்து கொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2010 1:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக