திங்கள், 23 ஆகஸ்ட், 2010

Front page news and headlines today
சென்னை : ''டில்லியில் சோனியாவும், அத்வானியும் திருமண விழாவில் பங்கேற்கும் போது, அருகருகே அமர்ந்து, ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டு, அன்போடு பழகுவதைப் பார்க்கும் போது, தமிழகத்தில் இந்த நிலை இல்லையே என்ற பொறாமை ஏற்படுகிறது,'' என முதல்வர் கருணாநிதி பேசினார்.

தி.மு.க., அரசு பதவியேற்று ஐந்தாம் ஆண்டு துவக்கம் மற்றும் 19வது ஆண்டாக முதல்வர் பதவியில் கருணாநிதி தொடர்வதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுதர்சனம், பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., சிவபுண்ணியம் ஆகியோர் சட்டசபையில் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர். ஆளுங்கட்சியின் சார்பில் நிதியமைச்சர் அன்பழகன் மற்றும் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் வழங்கிய ஏற்புரை: எந்த பண்பாடும், நாகரிகமும் அரசியலில் தலை காட்ட வேண்டுமென தமிழகத்தின் மாபெரும் தலைவர்கள் பாடுபட்டார்களோ, அவர்களின் எண்ணம் சட்டசபையில் இன்று ஓரளவுக்கு ஈடேறியிருக்கிறது. அது முழுமையாக ஈடேற வேண்டுமென்ற கருத்து எனக்கு எப்போதும் உண்டு. கோர்ட்டில் எதிரெதிரே வாதாடி விட்டு, கோர்ட்டுக்கு வெளியே வந்தவுடன் எப்படி இரு வக்கீல்களும் தோழமையோடு கைகோர்த்துக் கொண்டு செல்கின்றனரோ, அந்த நிலைமை அரசியலிலும் வர வேண்டும். டில்லியில் சோனியாவும், அத்வானியும் ஒரு திருமண விழாவில் பங்கேற்கும் போது, அருகருகே அமர்ந்து, ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டு, அன்போடு பழகுவதைக் காண்கிறோம். இதைக் காணும் போது மகிழ்ச்சி ஏற்படுவதோடு, எனக்கு பொறாமை தான் ஏற்படுகிறது. அத்வானியோடு சோனியா பேசுகிறாரே என்ற பொறாமையால் அல்ல; இந்த நிலை தமிழகத்தில் இல்லையே என்ற காரணத்தால் எழுகின்ற பொறாமை.

காமராஜரை நான் சாடாத கூட்டங்கள் இல்லை; எழுதாத கட்டுரைகள் இல்லை. ஆனால், அவர், 'பெருந்தலைவர்' என்பதற்கேற்ப, எப்படி நடந்து கொண்டார் என்பதை அவருடைய வரலாறு விளக்கும். அண்ணாவால் தமிழ் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டபோது, அதன் முதன் விழாவை துவக்கி வைத்தவர் காமராஜர். எம்.ஜி.ஆர்., இருந்த போது, அவருக்கும், எனக்கும் எத்தனையோ பூசல்கள்; எத்தனையோ கடுமையான வாக்குவாதங்கள் இந்த சபையில் நடந்ததுண்டு. நான் அடுக்கடுக்காய் எடுத்து வைத்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அவர் வேகமாக அளித்த பதில்கள் இன்றும் என் நினைவில் உள்ளன.

அண்ணா மறைந்தபோது, நான் முதல்வர் ஆக வேண்டாம் என என் வீட்டில் உள்ளவர்கள் தடுத்தபோது, 'இவர் தான் முதல்வர் ஆக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது' என்று அவர்களை சமாதானப்படுத்தி, என்னை முதல்வர் பதவியில் உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர் எம்.ஜி.ஆர்., அந்தப் பண்பாடு சிதறாமல், செத்துப் போகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை, தமிழகத்தில் உள்ள நம்மைப் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.






நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து

 EVERA அண்ணாதுரை United states அவர்களின் மனம் குமுறுவது போலவே DMK, ADMK ஆட்ச்சிகளைப் பற்றி நன்கு அறிந்த தமிழர்களின் மனது குமுறுகிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒழிந்தால் தான் தமிழகம் ஒளிரும்..Mohammed Ali,Trichi அவர்களே விழித்துக்கொள்ள வேண்டியது நீங்களும் தான்..  
by Mr Anniyan,Chennai,India    15-05-2010 10:47:38 IST

 இன்னும் ஜெயாவையும் MGR யும் makkal ஏன்தான் சப்போர்ட் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை. கவர்ச்சி அரசியலிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை என்றே தோன்றுகிறது. அப்படி என்னதான் அவர்கள் ஆட்சியில் கிழித்தார்கள் ? தமிழ்நாட்டில் ஏதாவது DEVELOPMENT நடந்திருந்தால் அது தி மு க ஆட்சியில்தான் இல்லை என்று சொல்ல முடியுமா ? நல்ல சாலைகள் தொழிற்சாலைகள் என்று பல துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் கண்டது தி மு கா ஆட்சியில்தான். இந்த ADMK ஆட்சியில் எல்லாமே MGR பெயரிலும் jaya பெயரிலும் போக்குவரத்து கழகங்களும் மற்ற நிர்வாகங்களும் தவிர வேறு எதையும் செய்யவில்லை. தமிழா விழித்துக்கொள். இந்த ADMK கொள்ளை கும்பலை ஒருபோதும் ஆழ விடாதீர்கள். பின் குறிப்பு: நான் தி மு க காரன் இல்லை. 
by Mohammed Ali,Trichy,India    15-05-2010 01:23:23 IST

 உன் வாரிசுகள் சண்டை போட்டதால் மூன்று பேர் உயிர் போனதே, உன்னால் வரவைக்க முடியுமா ? மக்கள் பிரச்சனைக்கு லெட்டர் குடும்பத்திற்கு சீட் வேன்டும் என்றால் டெல்லி போய் பிச்சை எடுக்க வேண்டியது, அதுவும் தீவிரமாக, மிக கொடுரமான தமிழ் இன அழிப்பு நடந்த பொழுது. இந்த பதவி வெறி, பண மோகம், அதிகார ஆணவ ஆசையால்தான் அந்த தமிழ் மக்கள் கொலைகள் நடந்தன. தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயாரை திருப்பி அனுப்பியது வரலாற்றில் மன்னிக்க முடித்த குற்றம்.பெண்களை மதிப்போம் என்று மட்டும் இனிமேல் சொல்ல உனக்கு தகுதி இல்லை.மக்கள் திலகம் கட்சி ஆரம்பித்த போது இந்த படம் 100 நாள் ஓடாது என்று சொன்ன ஆள் தானே நீ. மாறாக நீ தான் 15 வருடங்கள் வீட்டில இருந்தே 'புரட்சிதலைவர் எம்ஜியார் அன்னிக்கே உன்னை பத்தி சொன்னார், இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை, இதயமற்ற மனிதருக்கு இதுல்லாம் வாடிக்கை. Shakespeare said people's after 70 is a childwood stage. நிலக்கரி, ச்பெக்ட்ரம், சேது, பாலங்கள், மணல்,அரிசி கடத்தல் என்று ஏகப்பட்ட கொள்ளை, .யாரை கேட்டு உன் புள்ளலைய துணை முதல்வர் ஆக்கினே ? மக்களை கேட்டியா ? நீ என்ன ராஜாவா? ????????? அண்ணாவும் பெரியாரும் இதைத்தான் செய்ய சொன்னார்களா ?இந்த லட்சணத்துல எழவு வீட்டுல உலகத் தமிழ் மாநாடு, உன் புள்ளை, பேரன், பேத்தி, மனைவி, இணைவி, துணைவி, கொள்ளு பேரன் மொத்தம் கிட்டதட்ட 200 பேரை வேர்ல்ட் லெவெல்ல போகஸ் பண்ண மக்கள் பணம் எவ்வளவு செலவு பண்ண போறியோ. மக்கள் மறந்தாலும் இயற்கை மன்னிக்காது.  
by Evera அண்ணாதுரை,Cupertino,UnitedStates    15-05-2010 00:56:44 IST

 கரண்ட் தயார் பண்ண துப்பு இல்லை, விலை வாசியை கட்டுபடுத்த வக்கு இல்லை, மக்களுக்கு இப்பவே நிறைய இடங்களில் தண்ணீர் இல்லை, வரும் மாதங்களில், வருடங்களில் இன்னும் இயற்கையின் சூடு தீவிரமாக இருக்கும். பிள்ளைகள் படிக்க முடியலை மக்கள் மதிய வேளைகளில் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருக்க முடியலை, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையில்லாத, காலச்சார சீர் கேடு மாநாட மயிலாட கலாவுக்கு ஹை கரண்ட் ரொம்ப முக்கியம் , கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த முடியலை, நதி நீர் இணைப்பு முடியலை விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லை ஒரு நாள் ரேஷன் கடைக்கு போய் பாரு அதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு. கதை எழுதி படம் எடுக்கவே நேரம் பத்தலே. மக்கள் பிரச்சனை விலை வாசியை பற்றி பேசதானே சட்டசபை. இல்லேன்னா என்ன ம???? க்கு 450 கோடியில் சட்டசபை, நீர், நமீதா, குஷ்பூ எல்லாம் விளையாடுவதற்கா? வக்கீல்கள் மீது இரண்டு முறை தாக்குதல், பத்திரிக்கை காரர்கள் மீது தாக்குதல், எதை பற்றியும் கவலை இல்லை. கடந்த 20 நாட்களில் மட்டும் எத்தனை கொலைகள் (குறிப்பாக பெண்கள்) தமிழ்நாட்டில். தினமும் பாராட்டு விழா, விருது வழங்கும் விழா, நன்றி விழா, சினிமா காரர்களின் மற்றும் ஜால்ரா சுயநல, மக்கள் பணத்தை ஏமாற்றி சுருட்டும் அரசியல்வாதிகளின் நெஞ்சை நக்குற விழா, அசிங்கமா இல்லை, பார்த்தாலே எரிச்சல தூண்டி சீ என்று சொல்ல வைக்கிறது நாட்டுல தினமும் காலை விடிஞ்சா மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். பசிக்கு 100 திருடினா அடி உதை. 4 வருடங்கள் முன்பு சில பல ஆயிரங்கள் வைச்சு இருந்தவன் இன்னிக்கு எத்தனை ஆயிரம் கூடி டாலர் வைத்து உள்ளான் என்று அமெரிக்க பத்திரிக்கை ஒன்று சொல்லுகிறது.  
by Evera அண்ணாதுரை,Cupertino,UnitedStates    15-05-2010 00:55:34 IST

 To P.சித்தார்த்தன் .. mgr jj is far better than RAMDASS.M.K.. dont talk rubbish .. shut your dirty mouth jj fan  
by sams,coimbatore,India    15-05-2010 00:31:48 IST

 ஒரு காலத்தில் கூவம் நதி எப்படி நன்னீர் ஆதாரமாக இருந்ததோ அப்படிதான் ராஜாஜியும், காமராஜரும் மற்றும் எம்.ஜி. ஆர், அவர்களும். ஆனால் இப்பொழுது எப்படி கூவம் ஆறு சாக்கடை ஆகிவிட்டதோ அப்படித்தான் கருணாநிதியும். ஒருவேளை இவரின் குணத்தைப் பார்த்துதான் அப்போதே அறிஞர் அண்ணா கூறினாரோ 'அரசியல் ஒரு சாக்கடை என்று'. கண்ணியம் பற்றி பேச கருணாநிதிக்கு எந்த யோக்கியதையும் இல்லை. அன்பழகனுக்கும் முதுகெலும்பில்லை. இந்த தமிழ் நாட்டு அரசியலில் இவ்வளவு கீழ்த்தரமான குணங்களை விதைத்த விவசாயி நம் கருணாநிதி அவர்களே என்று இந்தியர்கள் அனைவருக்கும் தெரியும். கருணாநிதி அவர்களே, 'உங்கள் கண்ணில் இருக்கும் பெரிய உத்திரத்தை நீக்கிவிட்டு பிறகு அடுத்தவர் முதுகில் இருக்கும் துரும்பை அகற்றுங்கள்'.  
by vm sivaramakrishanan,mumbai,India    14-05-2010 23:41:02 IST

 அய்யா M வீராசாமி ,yanmangsang,Indonesia அவர்களே விஜய் மேல என்ன காண்டு அவரு இப்ப போன்ல நான் இல்லங்கன்ன, நான் இல்லங்கன்ன னு பொலம்ப உட்டிடிங்க. இதுதான் இந்தோனேசியா குசும்போ!  
by Mr. மொக்கை சாமீ ,chennai,India    14-05-2010 23:27:10 IST

 அம்மா பக்கத்துல உட்கார உமக்கு தகுதி இல்லை. BY அம்மாவின் விசுவாசி LJS .Ayyappan 
by ljs Ayyappan,Thiruvarur,India    14-05-2010 23:15:31 IST

 தஞ்சாவூர் MP க்கு இப்ப எவ்வளவு கோடி சொத்து? எப்படி வந்துச்சு  
by M ப,chennai,India    14-05-2010 22:34:59 IST

 dear tamil people, ippathaan muthalvarukku anbu wanthirukku jaya case innum mudiyavillai aanaal tamil makkal alredy second chance kodththuttaanga aana kaduwarai uravu kadaisivarai yaaru pondru ippa uravu kettkkuthu namma muthalvarukku gud luck! 
by H shahul,brunei,India    14-05-2010 21:37:20 IST

 இந்த கமெண்ட் எல்லாம் பார்த்துவிட்டு அவர் என்ன ராஜினாமாவா செய்ய போறார் ? அவர் தமிழ்நாட்டுக்கு விடுக்க பட்ட சாபம். எனக்கு ஒரே ஒரு கவலைதான். இவர் காலத்திற்கு பிறகு தி மு க வின் பிளவை இவரால் பார்க்க முடியாமல் போய் விடுமே என்று..  
by J Vinoj,Woodlands,Singapore    14-05-2010 21:31:23 IST

 தமிழ் நாட்டு மக்கள், உங்களின் வயது மற்றும் அனுபவம் காரணமாக தான் உங்களை ஏற்கிறார்களே தவிர , தாங்கள் நல்ல அரசியல் தலைவனோ - நல்ல மனிதனோ , நல்ல நிர்வகியோ அல்ல. அது எப்படி ஒரு அரசியல்வாதி தான் இறுதிக்காலம் வரை மனசாட்சி இல்லாம இருக்க முடியும்? 
by s Sivan,chennai,India    14-05-2010 20:12:03 IST

 பத்தொன்பது ஆண்டா இருந்து என்னத்தே செஞ்சே. ட்வென்டி இயர் பின்னாடி இருக்கோம். உனக்கு அடுக்கு தமிழ் ல டயலாக் பேச தெரியும். 
by R NANDHU,SINGAPORE,India    14-05-2010 20:06:08 IST

 1956ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அறிஞர் அண்ணா, “தம்பி வா, தலைமையேற்க வா“ என்று அழைத்தது நாவலர் நெடுஞ்செழியனை அன்றோ ? கருணாநிதியைத் தன் வாரிசாக என்றுமே கருதியதில்லையே அண்ணா. எம்.ஜி.ஆரின் உதவியோடு, எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று, சதித்திட்டத்தால் 1969 பிப்ரவரி 10ல் முதல்வரானார் கருணாநிதி. அத்தனை எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று தன் முதலமைச்சராக ஆக்கிய எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியவர் அல்லவா கருணாநிதி ? 1984ல் எம்ஜிஆர், உடல் நலம் குன்றி, அமெரிக்காவில் உள்ள ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது நடந்த பொதுத் தேர்தலில், “எனக்கு வாக்களியுங்கள், எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து வந்ததும், அவரிடம் முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைக்கிறேன்“ என்று கூறியவர் கருணாநிதி. அதிமுகவை துவக்கிய பிறகு எம்ஜிஆர் இறக்கும் வரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லையே ?  
by சுவாமிஜி,bhavani,India    14-05-2010 19:42:49 IST

 டாபிக் மாற்றி எழுதாதீர் ஐயா சித்தார்த்தா.. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.. இது.  
by சிவகுமார் நாகராஜன்,K.Sennampatti,MaduraiDistrict,India    14-05-2010 19:36:02 IST

 சாத்தன் வேதம் ஓதுது. அரசியல் நாகரிகம் தெரியாத நீ எதை வேண்டுமானாலும் எழுதுவாய் சொல்லுவாய். ஏனென்றால் ஆட்சி அதிகாரம் பத்திரிகை எல்லாம் உன் கையில் இனி ஆண்டவன்தான் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் காப்பாற்றவேண்டும். இருக்கும் அனைத்தையும் சொரண்டு நாளை தமிழன் வடக்கு இந்தியாவை நோக்கி பிச்சை எடுக்க செல்வது நிச்சயம் நீ இருக்கும் வரையில்.  
by s suresh,doha,qatar,India    14-05-2010 19:09:34 IST

 Dear Mr Jopet, Dont bluff about MGR. He is a legend.. if u dont know dont talk... how dare u can say that Karuna bring chances to MGR. MGR came to power on his own not like your bullshit leader karuna... Still after MGR death also M.K uses his name for vote... where you people went when MGR was alive...  
by M வினோத்,chennai,India    14-05-2010 18:32:58 IST

 Singapore Mr. Jopet posting is correct.  
by M Mohd,riyadh,India    14-05-2010 17:55:25 IST

 நம்மளையெல்லாம் எவ்வுளவு கேனையனுங்கனு நெனைச்சி இப்படியெல்லாம் பேசுறாரு பாத்திங்களா......? தமிழக அரசியல் என்றால் 1988 க்கு பிறகுதான் நம் நினைவில் இருக்கும் என்று!!!!! இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள்.....1967 இல் உங்களை (தி மு க)--- நீங்கள் சொல்லுவதை ---- நம்பி ஏமாந்து வோட்டு போட்ட என் பாட்டன்மார்கள்.  
by M Kamaraj,Delhi,India    14-05-2010 17:52:10 IST

 கலைஞரே! க க க போ ! 
by S ரமேஷ்,CHENNAI,India    14-05-2010 17:32:14 IST

 சும்மா இருப்பா லூசு  
by R Gopinath,Mumbai,India    14-05-2010 17:22:10 IST

 T JOPET,singapore,Singapore ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது..  
by J NIRAJAN,singapore,Singapore    14-05-2010 16:51:11 IST

 கருணாநிதி நீ வந்து தான்யா தமிழ்நாட கெடுத்த. அண்ணா வோட அரசியல் நாகரிகம் எல்லாம் முடிஞ்சு போச்சு. அண்ணாவுக்கு அப்புறம் நெடுஞ்செழியன் வந்துருந்தார்னா அரசியல் நாகரிகம் இருந்துருக்கும் . அதான் அவர முதல்வர் ஆக விடாம நீரும் ராமச்சந்திரனும் சேர்ந்து கெடுத்துடீன்களே. இப்ப போய் அரசியல் நாகரிகத்த எதிர் பார்க்காத . போய் வீட்டுல தூங்கு . முதல்வர் பதவிய எங்க அண்ணன் இளைய தளபதி விஜய் கிட்ட கொடுத்துட்டு மரியாதையா போயிருங்க  
by M வீராசாமி ,yanmangsang,Indonesia    14-05-2010 16:35:36 IST

  up to j.jayalalitha president of Admk this is not going to happend. she is how ever next election win.for that anything going to do. 
by Ebi Ebi,alkhor,Qatar    14-05-2010 16:18:47 IST

 Dear C.M. dont utter your 'Neele Kanneer' It is immposible for you and other real D.M.K. people to behave like advani and soniaji WHY? even like congress,cumunist.and other parties leaders in tamil nadu ( as they praised you in assembly) your party is selfish andcunning.kks. 
by k.k. shanmugam,chennai,India    14-05-2010 15:57:06 IST

 நானும் பொறுத்து பொறுத்து பார்கிறேன்....ரொம்ப பேசுறீர் .. நீர் மொதல்ல ADMK ஆட்சில இருக்கும் போது சட்ட சபைக்கே போகலையே ஏன்..  
by r செல்வன்,madurai,India    14-05-2010 15:53:27 IST

 தமிழ் கலாசாரத்தை விட வட நாட்டு கலாசாரம் தான் உயர்ந்திருக்கிறது என்று முத்தமிழ் காவலரே சான்று அளித்திருப்பது, மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அவர் அடிக்கடி சொல்லிக்கொள்வதை நினைவூட்டுகிறது. 
by K Dhandapani,Cuddalore,India    14-05-2010 15:33:45 IST

 இந்த வயசிலே ஜெயலலிதா பக்கத்தில் உக்கார முடியல என்ற ஆசை இருக்கிறதா? அடப் பாவி, வெட்டு தீர்மானம் கொண்டுவந்து, அதற்க்கு எதிராக ஓட்டு அளிக்கும் போது ஆதரவாக ஓட்டளித்த லல்லு, முலாயம் போன்றவர்கள் மதிய அரசை மிரட்டுவதுர்க்கும், பிறகு தங்கள் காரியத்தை சாதித்து கொள்ளுவதற்கும், மக்களை முட்டாள்களாக்கும் நாகரிகமா? நாம் இரண்டு பேரும் வெளியே அடித்து கொள்ளலாம் உள்ளே தழுவி கொள்ளள்ளலாம் அப்போ தான் கொள்ளை அடிக்க முடியும் என்ற எண்ணம் தானே? இப்போ அடித்திருக்கும் கொள்ளை பத்தலையா? 
by M Muhammed,Riyadh,India    14-05-2010 15:21:22 IST

 மிக்க நன்று. வாசகர் கருத்து படிக்கும்போது சந்தோஷம். இன்னும் நம் தமிழகம் தலைவர்களை நம்புகிறார்களோ என்று ஒரு ஐயம் இருந்தது. எல்லா தமிழ்நாடு மக்களும் இப்படி விழிப்புடன் இருந்தால் தமிழகம் பிழைத்துகொள்ளும். ஆனால் தேர்தல் வந்தால் மக்கள் காசுக்கு அலைகிறார்கலே, அப்புறம் என்ன மற்றவர்களை பற்றி பேச்சு. காமராஜர், அண்ணா, MGR போன்றவர்கள் வாழ்நதார்கள் என்பதை மட்டுமே கேட்க முடியும். அரசியல் வாதிகளை சொல்லுமுன் நாம் என்ன செய்கிறோம் என்றும் நமக்கு நாமே கேட்டுகொள்ளுங்கள். இவர் இப்படிதான் என்று தெரிந்தும் அரியணையில் உட்கார வைத்தது யார் குற்றம்.  
by v ராம்,Tokyo,Japan    14-05-2010 15:15:31 IST

 காமராஜ் - மேதை, MGR மக்கள் திலகம் . ஆனா நீர் ஒரு ........தமிழ்நாடு மக்களுக்க தெரியும் . 
by r உதயகுமார்,Udumalpe,India    14-05-2010 15:13:42 IST

 ஹொவ் இஸ் இட். திஸ் இயர் சூப்பர் ஜோக். கீப் இட்  
by k kumar,thanjai,India    14-05-2010 15:12:56 IST

 ௦ சூப்பர் action 2010 
by ram raman,chennai,India    14-05-2010 15:02:53 IST

 The political party came into effect spreading hatred against fellow brethren in our state.Hatred should be buried.Treat all people alike. Do not marginalize any section. if we do that at first step,I hope our friendship will blossom,  
by agasthyan,Chennai,India    14-05-2010 14:10:04 IST

 அரசியல்ல இது எல்லாம் சகஜம் பா  
by S ஜானகிராமன்,Chennai,India    14-05-2010 13:46:07 IST

 எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள், வஞ்ச புகழ்ச்சியினை தாங்கும் உள்ளம் உள்ளவர்கள் வேண்டுமானால் நீங்கள் பங்கேற்கும் அரசியல் கூட்டங்களில் பங்கேற்கலாம். நேற்று வரை அண்ணாவை புழ்ந்து வந்த உங்களையே சாய்க்கும் விதத்தில் உங்களை அண்ணா போன்றவர்களை விட உயர்வான புத்தி உள்ளவர் என்று அன்பு+அழகன் கூறி விட்டார். இதை போன்ற சங்கடங்களை தவிர்ப்பதற்காகவும், எம் ஜி ஆரை கட்சியிலிருந்து நீங்கள் நீக்கியதற்கு காரணமான சம்பவம் போன்றவற்றை தவிர்ப்பதற்காகவும் கூட உங்களுடன் பழகுவதை பலர் தவிர்க்கலாம். செந்தமிழில் பல முறை உங்கள் முரசொலியில் பலரையும் வறுத்தெடுத்து விட்டீர்கள்.இருந்தாலும் யார் வருவார் என்று நினைக்கிறீர்கள். டீ கடை பெஞ்சியில் சொன்னது போல் உங்கள் பிறந்த நாள் அன்று உங்கள் வீட்டுக்கு குடும்ப சகிதமாய் ஒருவர் சிரித்து கொண்டே வந்தாலும் வருவார். கலங்காதிருங்கள் தானை தலைவரே... 
by R Rameshbabu,salem,India    14-05-2010 13:27:42 IST

 மேடை பேச்சு அநாகரிகத்தில் இருந்து காசுக்கு வோட்டு என்ற கலாசாரம் வரை மிகவும் மோசமாக நடந்தேறிவுள்ளது யாரால் என்று சற்று திரு.கலைஞர் அவர்கள் சிந்தித்து பார்த்துக்கொள்ளட்டும். அவருடைய கவலையை தூக்கி குப்பையில் போடுங்கள். 
by சிவகுமார் நாகராஜன்,K.Sennampatti,MaduraiDist,.,India    14-05-2010 13:24:13 IST

 அவர் இப்படி பேசி கொண்டு இருக்கும் பொழுது நிதின் அங்கே லாலுவை நாய் என்றும், மத்ய பிரதேஷ் சட்டமன்ற உறுபினர்கள் பாஜாகா பெண் உறுப்பினரை மது சாப்பிட்டு விட்டு வந்தார் என்றும் சொல்கின்றனர். இதுதான் எல்லா அரசியல் கட்சி தலைவர்களின் நாகரிகம்  
by R Raja,coimbatore,India    14-05-2010 13:12:02 IST

 நீலிக்கண்ணீர் வடிப்பது என்பது இதுதான் போலும்! அத்வானி, வயதில் குறைந்த சோனியாவை சோனியாஜி என்றுதான் அழைக்கிறார்; இங்கு ஜெயலலிதாவை 'அந்த அம்மையார் ' என்றுதான் கருணாநிதி அழைக்கிறார்; புதிய சட்டசபை வளாக திறப்பு விழாவிற்கு, சோனியா போன்ற தலைவர்களை ஸ்டாலின் நேரில் சென்று அழைத்தார்; அப்போதாவது எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் ஜெயலலிதாவை கருணாநிதி நேரில் சென்று அழைத்து அரசியல் நாகரிகத்தை அலங்கரித்திருக்கலாம் அல்லவா!மாறாக, ஜெயலலிதாவை தலைமைசெயாளர் தானே அழைத்தார்! அதனால் தானோ என்னவோ அவரும் விழாவில் பங்கேற்கவில்லை. .இப்படி எதையுமே செய்ய முன்வராது, 'ஏங்கினால்', ஏக்கம் மட்டும்தான் மிஞ்சும்! 
by K. Thirumalairajan,Rajakilpakkam,Chennai600073.,India    14-05-2010 13:07:16 IST

 அதிமுகவையும் தங்களோடு இணைத்துவிட்டால் இனி தமிழ்நாட்டில் எக்காலத்துக்கும் எங்களுடைய குடும்ப ஆட்சிதான் எகபோக ஆட்சியாக இருக்கும் என்று மனப்பால் குடிக்க துடிக்கிறார் கருணாநிதி அவர்கள்.  
by t அன்பரசு,chennai,India    14-05-2010 12:56:28 IST

 காமராஜரை அண்டங்காக்கை, எம் ஜி ஆர் ஐ மலையாளி, ராஜாஜி ஐ குல்லுக பட்டர் மற்றும் ஜெ வை .. .. .. .. .... என்றெல்லாம் விமர்சித்த இவர்களெல்லாம் பேசு வதை எல்லாம் பார்த்தால், , நமக்கு இதெல்லாம் வேணும்  
by PR பால சுப்ரமணியன்,KeelaPattamudaiyarPuram,India    14-05-2010 12:50:42 IST

 சாத்தான் வேதம் ஓதுது......... 
by p mohan,chennai,India    14-05-2010 12:36:44 IST

 சாத்தான் வேதம் ஓதுகிறது. அரசியல் நாகரிகத்தை பற்றி கருணாநிதி பேசுவது கசாப்பு கடை காரன் ஜீவ ஹிம்சையை பற்றி பேசுவதை போல் உள்ளது. 
by R. Muniyasamy,Madurai,India    14-05-2010 12:35:28 IST

 காமராஜை அண்டங்காக்கை என்று கூறிய கருணாநிதி காமராஜை பற்றி பேச யோக்யதை இல்லை. 
by Mr பிரகாஷ்,Chennai,India    14-05-2010 12:30:26 IST

 அத்வானி போன்ற நல்லவர்களிடம் பெண்ணாகிய சோனியா மேடம் நல்ல விதமாக பேசிக்கொள்வார்கள். ஆனால் பெண்ணை கேவலமாக பார்க்கும் நீங்கள் இந்த கருத்தை சொல்லவதற்கு முன் உங்களை நீங்கள் திரும்பி பாருங்கள்  
by j ரமேஷ் babu,madurai,India    14-05-2010 12:25:37 IST

 என் அன்பு தலைவரே! ஒரு பேச்சுக்காக நீங்கள் MGR ஐ குறிப்பிட்டிருப்பிர்கள். நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்க முடியாது அவன் செய்த அக்கிரமத்தை. ஒரு சுவற்றில் கருப்பு சிவப்பு வண்ணம் இருந்தால் கூட அந்த கட்டிடத்தையே தரை மட்டம் ஆக்கியது. ஏன் சினிமா வில் கூட கதாநாயகன் கருப்பு சிவப்பு வண்ணம் சட்டை போடக் கூடாது எங்களால் மறக்க முடியாது. அப்புறம் இந்த ஜெயலலிதா கூடல்லாம் நீங்க அமர நினைச்சாலும் நாங்க விட மாட்டோம். இன்னும் எனக்கு நினைவிருக்கிறது, ஒரு முறை நீங்க சாலையில் அமர்ந்து போராட போவதாக சொன்ன பொது, அதற்கு டிவி பேட்டி கொடுத்த ஜெயலலிதா உங்களை அப்படியே குண்டு கட்டாக தூக்கி வர போலீஸ்க்கு உத்தவிட்டதாக சொல்லி ஒரு கேலி சிரிப்பு சிரித்த காட்சி இன்னும் எனக்கு நினைவிருக்கு. அப்படிப் பட்ட சாடிஸ்ட் ஜெயலலிதா வுடன் நீங்கள் அமர்ந்தால் உங்களை கொல்லக் கூட துணியமாட்டார். அப்புறம் உங்களை MGR தான் கூப்பிட்டாறுன்று எழுதினிர்கள். அது எதற்கு என்று முழுவதும் சொல்லவில்லை. ஒவ்வொரு தயாரிப்பாலரிடமும் MGR க்காக சான்ஸ் வாங்கி கொடுத்து அவரை பெரிய ஆளாக ஆக்கிவிட்டவர் நீங்கள் தானே. அதற்காக இருக்கும். ஐயா,அதிமுக அனுதாபி இலக்குவனாரே! உம்ம கமெண்ட்ஸ் புடிக்கிரப்பயெல்லாம் உம்மை ஒரு தமிழறிஞர் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீர் ஒரு டுபாக்கூர் என்று இன்று தான் தெரிந்தது. பல குட்டிகளோடு கூத்தடிச்சு புரட்சி செஞ்ச மலையாளத்தான் MGR ஐ நீர் மக்கள் திலகம் ன்னு அடைமொழியில எழுதினபோது.  
by T JOPET,singapore,Singapore    14-05-2010 12:24:11 IST

 ஆடை அவிழ்ப்புகள் அரங்கேரியதே உமது அவையில்தானே...துச்சாதன துரைமுருகன், வக்கிர புத்தி தீபொறி ஆறுமுகம் (முன்பு), அரைவேக்காடு வெற்றிகொண்டான் போன்ற நல்ல மனிதர்கள் இருப்பதும் உமது படை தளபதிகள்தானே... திருமணமாகாத பெண்களை திருமதி என்று வாஞ்சையோடு அழைத்த வரலாறு உமது வரலாறுதானே....ராசாவின் விஷயமென்றால் கனிவோடு மொழிவீர்...மற்றபடி உமது பண்பாடென்றால் பண்பாடுதான்.... 
by R M,chennai,India    14-05-2010 12:07:07 IST

 Mr.Karunanidhi claims that Mr.MGR was instrumental in his becoming CM after Mr.Annadurai's death. But what he in turn did to MGR. Within couple of years, he ensured that MGR was humiliated and driven out of the party. No body could forget the indecent sobriquets with which he used to call the tall leaders like Rajaji, Kamaraji who were the most clean and honest political leaders TN ever produced. Further in the very recent past he called Ms.Jayalalaitha as Thirumathi Jayalaitha and he still expects that leaders who have been humiliated by him should have talking terms with him. If he changes his style of polictics, the others would respond in the same breadth.  
by R வெங்கட்,Chennai,India    14-05-2010 11:53:06 IST

 MGR ஒன்றும் பெரிய தியாகியோ அல்லது பொருளாதார மேதையோ , சிறந்த நிர்வாகியோ அல்ல . முதல்வராக வந்தது தமிழ் நாட்டின் கேடு காலம். மகர் என்ற நடிகரை ஒரு பொருட்டாக எழுதியது, பேசியது, புகழ்ந்தது எல்லாம் அப்போது சினிமா மோகத்தில் வாழ்ந்தவர்கள். ஒவ்வொரு ஆட்சியிலும் ஒரு கும்பல் கொள்ளையடித்து சுருட்டுவார்கள். அப்படி சுருட்டியவர்கள் சில பத்திரிக்கையும், சினிமாகாரர்களும். அப்படி கொள்ளையடித்த கும்பல்தான் MGR ஒரு பெரிய வள்ளல் போல் படம் காட்டுகிறார்கள். கர்நாடகாவில் , கேரளாவில், ஆந்திராவில் ஒரு தமிழன் முதல்வராக வந்ததில்லை . ஆனால் ஜெயலலிதா-கர்நாடக, MGR - மலையாளி, இப்படி தமிழ்நாட்டின் தலைஎழுத்து . இப்பவும் ரஜினி கர்நாடக, விஜயகாந்த் தெலுங்கன், சீமான் -இலங்கை . ஆனால் திருநாவுகரசர், இல கணேசன், கார்த்திக்,வாண்டையார், சேதுராமன்,ராமதாஸ், திருமாவளவன் போன்றோரை ஏன் மக்கள் ஏற்று கொள்ள கூடாது.  
by P Siddharthan,Doha,Qatar    14-05-2010 11:52:15 IST

 some people have got good memories from the various letters written about earlier out bursts of kalaignar about, rajaji,kamaraj,MGR!!PERIAR was a true friend of RAJAJI unlike m.k.! i am reminded of ugly pictures\slogans raised by DMK AGAINSTSMT.INDIRA GANDHI, in a procession headed by honbleM.K., in coimbatore!ofcourse he was arrested after this incident!!  
by s natarajan,chennai,India    14-05-2010 11:46:55 IST

 இன்றைக்கு 'கொத்துபுரோட்டா வறுவல்' நமது முதல்வருக்கு. மனம் போல விழுந்துருக்கு, தினமலர் இதை பத்திரமாக வைத்தால் நல்லது 'வாய் கூசாமல் பொய் சொல்லும் நமது அரசியல் வாதிகளுக்கு இது ஒரு பாடமாகும்' 
by S மனோகர் ,Chennai,India    14-05-2010 11:43:28 IST

 அய்யா கருனநிதியாரே முதலில் நீங்கள் முன் மாதிரியாக இருந்திருக்கலாமே. ஜெ.முதலமைச்சராக இருந்த பொது, அவர் கலந்துகொண்ட நிகழ்சிகள் ஏதாவது ஒன்றில் நீங்கள் கலந்துகொண்டதுண்டா, கிடையாது. நீங்கள்தான் முதலமைச்சராக இல்லாவிட்டால், ஜெ.யைப்பார்க்க பயப்பட்டு சட்டசபைக்கே போகமாட்டீர்களே. வாசலிலேயே கையெழுத்து போட்டுவிட்டு ஓடிவிடுவீர்களே. முதலமைச்சர் பதவியில்லை என்றால் சட்டசபை உள்ளே போகக்கூடாது என்ற நடைமுறையை கொண்டு வந்தவரே நீங்கள்தானே. நாகரிகத்தை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு. அரசியலில் எம்ஜியார் செய்த பெரிய தவறு ,முதலமைச்சராக உங்களை சிபாரிசு செய்தது தான். தமிழ்நாடு இந்த அளவுக்கு கேவலப்பட்டு போனதற்கும் ,குடும்ப ரௌடி ராஜ்ஜியம் நடப்பதற்கும் கருணாநிதிதான் காரணம். 
by P.R RAMESH,Madurai,India    14-05-2010 11:42:39 IST

 அரசியல் என்பது தொண்டாக இருந்த பொது கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்தது. தனி நபர் காழ்ப்பு இருந்ததில்லை. அரசியலை எந்த சட்ட திட்டங்களும் இல்லாத கேவலமான வியாபாரமாக மாற்றியதே இவர் தான். நீர் நாட்டை கொள்ளையடிக்கும் திருடன், தேச துரோகி என்பது நன்றாய் தெரிந்தபின் நான் எப்படி உனம் அருகே அமர்ந்து குசலம் விசாரிப்பது? அதை செய்பவர்கள் நாணயமில்லாதவர்கள் தாம். 
by N.S. Sankaran,Chennai,India    14-05-2010 11:34:01 IST

 History is very important CM. (வரலாறு மிக முக்கியம் முதல்வரே ) 
by D sathya,Chennai,India    14-05-2010 11:30:00 IST

 ஹலோ P. Sekar .......இதே தினமலர்ல முற்றொரு செய்தி ....'கோவை ல ஹைடெக் பஸ் ஸ்டாண்ட் ....ஜெயா பண்ண முடியல ...இப்போ கருணாநிதி பண்ணியாச்சு .......இத பத்தி நீ பேச மாடியா ??? 
by A ஆனந்த் ,Singapore,Singapore    14-05-2010 11:22:19 IST

 'அந்த (திருமணமான) நடிகை பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை' எனச்சொல்லி நாகரீகத்திற்கு இலக்கணம் வகுத்துக்கொடுத்த்தே உங்கள் குருதானே! ஏன் 'சோபன்பாபுவைப் போய்க்கேள்' என சட்டசபையில் 'உளறியது தாங்கள் திருவாய் இல்லையா? இன்னொரு முறை அந்த 'ஊத்த வாயால்' நாகரீகத்தைப் பற்றி பேசாதீர்கள். இந்த வயதில் நாகரீகம் என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளவா போகிறீர்கள்? கசாப்புக்கடைக்காரன் அஹிம்சையைப் பற்றி பேசலாமா?ஆண்டவா MGR ஐ பேச முடியாமல் ஆக்கி இந்த ஆளை மட்டும் பெனாத்த விடுகிராயே இது நியாயமா? 
by V மணி,Chennai,India    14-05-2010 11:19:12 IST

 இப்படிப்பட்ட தனி விரோததன்மையை உருவாக்கியது கருணாநிதிதான். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஒரு தடவையாவது சட்ட சபைக்கு வந்தாரா? ஜெயலலிதாவை ஒரு பெண்ணாக மதித்து நடந்தாரா? கண்டபடி இழிவாக பேசுவது எதிர் கட்சியை எதிரிக்கட்சியாக பார்ப்பது எல்லாம் இவர் சொல்லி கொடுத்த பாடம் தான். அதுதான் இப்படி பூமராங் ஆகி விட்டது இப்போது கவலைப்பட்டு என்ன பயன்?  
by K Sanckar,Bangalore,India    14-05-2010 11:15:13 IST

 ஐயா வள்ளுவரே , எப்போதும் போல் பிரசங்கம் பண்ணாமல் உங்கள் அமைச்சர்களையும் மற்றும் உங்கள் குடும்பத்தயும் அவ்வாறு இருக்க சொல்லுங்க. தயவு செய்து பழைய பொய்யான விஷயத்தை நினைவு கூறுறத நிறுத்துங்க மற்றபடி செயல் படுங்க. 
by S சுதாகர்,Singapore,Singapore    14-05-2010 11:14:53 IST

 .....நீண்ட நாட்களாக ஒசாமா பின் லாடனுக்கும் ஒரு ஏக்கம் !...எப்படியாவது அமெரிக்க அதிபருடன் கைகுலுக்கி...இறுக கட்டித் தழுவி... நெஞ்சோடு நெஞ்சை உரசி ...கன்னத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் முத்தங்களை பொழிந்து ..அப்படியே இதயம் விம்மி ...கண்ணீர் சொரிந்து....இது நடந்தாலும் நடக்கும். கருணாநிதி காலத்துல எந்த ஒரு நாகரீகமான அரசியல் நிகழ்வுகளும் சமூகத்துல நடக்காது ! ..ஜெயலலிதா தங்கும் சிறுதாவூர் பங்களாவை ஆர்ஜிதம் செய்ய அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி காலையில் உத்தரவிட்ட கருணாநிதி மதியம்..அரசியல் நாகரீகம் பண்பாடு பற்றி பேசுவதற்கு மட்டும் அல்ல...கனவு காண்பதற்கு கூட அருகதை அற்றவர் !!!  
by rajasji,münchen,Germany    14-05-2010 10:57:33 IST

 வெட்கம் கெட்ட கருணாநிதி எப்படி இதை எல்லாம் எதிர்பார்க்கலாம். சட்டசபையில் ஜெயலலிதாவை அசிங்கபடுத்தியவர் கருணாநிதி. முதலமைச்சர் பதவியை பிச்சையாக போட்ட எம் ஜி ஆர் அவர்களுக்கே துரோகம் செய்தவர் தானே இந்த கருணாநிதி. ஊழல் எப்படி செய்வது என்று கற்று கொடுத்த இவரே ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு போட்டவர். எதோ வயதானவர் என்பதற்காக எல்லோரும் வயதுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். இவர் அந்த மரியாதையை காப்பாற்றி கொண்டால் நல்லது. இவர் கூவத்தைவிட மோசமானவர்.  
by v Vaithianathan,muscat,Oman    14-05-2010 10:55:08 IST

 சாத்தான் வேதம் ஓதுகிறது. அதனால தான் இன்று குடும்பமே மந்திரி பதவியில் மிதக்கிறது.  
by A Krishnan,Mumbai,India    14-05-2010 10:51:35 IST

 Pesum, pesum it will help us to give motivation to remove your power in the next election 
by E Eddie,Bangalore,India    14-05-2010 10:51:05 IST

 ஜெயலலிதா அவர்களே, அய்யனின் ஆசையை திர்த்து வையுங்கோ  
by பாலாஜி.a,vallioor,India    14-05-2010 10:33:41 IST

 தமிழ்நாடு குட்டிசுவர் ஆகியதே இந்த கேடு கெட்ட கருனாவால்தான் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. லஞ்சம் என்பதை தமிழ்நாடு அறிந்ததே இவரால்தான் .காசை காட்டி ஏழை மக்களின் ஓட்டை வாங்கி பதவியில் அமர்ந்து கொண்டால் மட்டும் இவர் யோக்கியன் ஆகிவிடுவாரா என்ன? 
by tamilan,chennai,India    14-05-2010 10:25:40 IST

 19 வருடம் முடிவடைந்த நிலையில் அ.தி.மு.க. விலிருந்து யாரும் பாராட்டவில்லையே என்று அவருக்கு வருத்தம். அதனால சீக்கிரம் ஒரு பாராட்டுவிழா எடுங்கப்பா. முக்கியமா நமீதா குத்தாட்டம் இருக்கணும்.  
by G கணேஷ்,Ahmedabad,India    14-05-2010 10:21:38 IST

 MK is worried because there is no understanding between the ruling party and the opposition party in TN. He is to be blamed for this state of affair in TN. He will attack all in very bad language when they are not in good terms with them. He is intelligent, but he is not a good human being. MK should be held responsible for this state of affair in Tamil Nadu.  
by NN Subramanian,Chennai,India    14-05-2010 10:12:02 IST

 கடைசியில் மஞ்சள் துண்டு சொன்னதை பார்த்தீர்களா? அண்ணாதுரை அவர்கள் மறைந்த பிறகு இவர் முதல்வர் ஆக வேண்டாம் என்று இவர் குடும்பம் தடுத்ததாம். இவர் சதி செய்து முதல்வர் ஆன பிறகு அண்ணாதுரையின் சமாதியில் உண்மையாக முதல்வர் ஆகவேண்டிய நாவலர் நடந்த சதியை நினைத்து அழுதுகொண்டிருந்தார் தெரியுமா? வைகோ தன் மகன்களை விட மேலே வந்துவிடுவார் என்று சதி செய்து கொலைபலி சுமத்தி கட்சியை விட்டே துரத்திய மனிதன் தான் இந்த பெரியவர். அக்கரையில் மக்கள் கொத்து கொத்தாக சாகடிக்கபட்டபோது ஆட்சியை காப்பாற்ற நாடகம் ஆடியவர் தானே இவர். வோட்டுக்கு காசுகொடுக்கும் கீழ்த்தரமான பழக்கத்தை அறிமுகப்படுத்தியதும் இந்த பண்பாளர்தான். இவர் அரசியல் பண்பாடு குறித்த பேசுகிறார். உம்மை பற்றி நாடறியும்.  
by G கில்மானந்தா ,Amman,Jordan    14-05-2010 10:09:30 IST

 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை' - வேறு நல்ல தலைவர் இல்லாதவரை உம் பாடு கொண்டாட்டம்தான். பெரியார் இல்லை என்பதால் anna...அண்ணா இல்லை என்பதால் நீர்...M G R இல்லை என்பதால் நீர்.... மத்தபடி நீர் உம்மை ஒரு பெரிய தலைவர் என்று எண்ணிவிடாதீர். சாதாரண சினிமா வசனகர்த்தா. உண்மையான இலக்கியம் தெரியாத போலி எழுத்தாளன். அரசியலை வியாபாரமாக்கிய இடைதரகன். சமூக அக்கறை இல்லாத சுயநல சேவகன்.  
by M Kamaraj,Delhi,India    14-05-2010 09:59:33 IST

 கருணாநிதி இன்றுவரை தான் பேசிய பேச்சுகளை ஒருகணம் நினைத்துவிட்டு இதுபோன்ற டிராமாவை நடத்தட்டும். எதிர் கட்சி தலைவர்களை குறிப்பாக ஜெயலலிதாவை ஒரு பெண் என்றும் பாராமல் கொச்சையாக இவரும் இவர் கட்சியினரும் பேசிய பேச்சுக்களை மூளை மழுங்கிப்போன தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தங்களது வேலைகளை செய்துகொண்டு அடுத்த தேர்தல் எப்போது வரும் வோட்டுக்கு காசு எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டு கிடக்கின்ற காரனத்தால், நீங்கள் ரொம்ப பெருந்தன்மையானவர் போல் காட்டிக்கொண்டும், பேசிக்கொண்டும், வார்த்தை ஜாலங்களால் அரசியல் பண்ணிக்கொண்டும் வாழலாம். உங்களை யார் கேள்வி கேள்விகேட்க்கப்போவது? உங்கள் கைத்தடிகள், உங்களால் அரசியல் பிழைப்பு பிழைக்கும் அரசியல் வியாபாரிகள், உங்களின் துதிபாடும் அரசியல் கூலிகளை, வைத்துக்கொண்டு அரசியல் பண்பாடு பேசும் உங்களை பார்த்து என் போன்றவர்கள் இந்த மக்களை நினைந்து மனம் வேம்பிபோவதை தவிர என்ன செய்துவிட முடியும்? நடக்கட்டும் உங்கள் தர்பார். எதற்கும் முடிவு என்ற ஒன்று உண்டு! 
by R பாலசுப்ரமணியம் ,Madurai,India    14-05-2010 09:54:17 IST

 வாய் கிழிய பேசும் கருணாநிதியே எதிர் கட்சித் தலைவர் என்று மரியாதைக் கொடுத்து செம்மொழி மாநாட்டிற்கு ஜெயலலிதாவை நேரில் அழைக்க உம்மால் முடியுமா? வயசாயிடுச்சு பெனாத்தாதீர். சசிகலாவின் பின்புற ஆதரவு இருப்பதால் அதிமுக பின்னடைவு காண்கிறது. இது எத்தனை நாள் நடக்கும், நீர் எழுதிய பாட்டு ஞாபகம் வருது 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே' அருமையான வரிகள். நீர் எழுதியது உமக்கே ஒத்து வருகிறது.  
by GK SIVRAMKRISHNAN,DUBAI,UnitedArabEmirates    14-05-2010 09:41:57 IST

 ஜெயலலிதாவிற்கு பிறகு வேண்டுமானால் இது சாத்தியமாகலாம் இகோவிஸ்ட்டான ஜெஜெ ஒருபோதும் இணங்கமாட்டார் she is one of the worst politician ever seen in world politics  
by HJ Kannan,Chennai,India    14-05-2010 09:40:31 IST

 திரு.காமராஜர் ஓர் தெய்வம் .... நீ அவரை பற்றி பேச என்ன தகுதி உண்டு ..அவர் இல்லை என்றால் தமிழ் மக்கள் இன்று 0 தான்..... நான் தினமும் வணங்கும் தெய்வம் காமராஜர் ........... I never ever saw such a fellow like Mr. kamarajar after mr. kamarajar corruption introduced in TN political that still continues no one does right things for tamil people ....  
by P vijayakumar ,Coiambtore,India    14-05-2010 09:38:02 IST

 தமிழ்நாட்டுல அரசியல் அநாகரிகத்த உண்டாக்கியதே அல்லிராணி .எம்.ஜி.ஆர் .கருணாநிதியும் எதிர் எதிர இருந்தபொழுதும் இருவரும் பேசிக்கொண்டனர். ஆனால் இந்த பட்ச புடைவைக்கரி என்னைக்கு அரசியலுக்கு வந்தாலோ அன்றிலுருந்து தமிழ்நாடு அரசியல் அநாகரிகம ஆகி போய்விட்டது. தன் கட்சிக்காரன் எவனாவது தி.மு.க. கட்சி நபர்களுடன் பேசினால் போதும் உடனே அவனை கட்டம் கட்டி கட்சியைவிட்டு நீக்கிவிடும் .இந்த அல்லி அரசியலில் இருக்கும் வரை அரசியல் நாகரிகம் தமிழ்நாட்டில் வராது.நடிகை நாடகமாடி சட்டசபைல் நாடகத்த என்னைக்கு அரங்கேற்றியதோ அன்று தொலைந்தது அரசியல் நாகரிகம் .  
by n suresh,tirupur.,India    14-05-2010 09:35:40 IST

 இப்பொழுது இருக்கும் தமிழகத்தில் இது நடக்கக் கூடிய காரியம் இல்லை. தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களும் இதை ஏற்க தயாராக இருக்கிறார்கள் ஜெயலலிதாவைத் தவிர. ஜெயலலிதாவுக்கு பெரிய மக்கள் செல்வாக்கு இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா ஒரு கட்சி ஆரம்பித்து ஒரு தேர்தலை சந்தித்து இருந்தால் அதற்கு பிறகு தமிழக அரசியலில் அவர் காணாமல் போயிருப்பார். அவர் தமிழ்நாட்டில் அரசியல் நடத்துவதே M.G.R. அவர்களின் மக்கள் செல்வாக்கால்தான். அவர் தன்னைப் பற்றி மிக உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா தொழில்முறை அரசியல்வாதி இல்லை. கருணாநிதி சட்டசபைக்கு போகும்பொழுது ஜெயலலிதாவுக்கு வயது 9 . இப்பொழுது பார்த்துக் கொள்ளுங்கள் யார் எப்படி நடந்துக் கொள்ள வேண்டு என்று. வாஜ்பாயும் அத்வானியும் மனித உருவில் இருக்கும் தெய்வங்கள். அவர்கள் கலியுக ராம லக்ஷ்மணர்கள். அவர்கள் இருவரையும் யாரோடும் ஒப்பிட முடியாது. தமிழ்நாட்டு மக்களுக்கு நேரம் சரியில்லை. எல்லாவற்றிலும் தோல்வி ஏற்படுகிறது. இங்கு இருக்கும் சூழ்நிலையை தெரிந்துக் கொண்டுதான் மத்திய அரசாங்கம் நமக்கு 20 ஆயிரம் கோடியும் பக்கத்துக்கு மாநிலத்திற்கு 36 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்குகிறது. 
by R. கோதண்டபாணி ,Chennai,India    14-05-2010 09:18:33 IST

 தமிழ் நாட்டையே பின்னோக்கி கொண்டு சென்றது இந்த கருணாநிதிதான் என்பதில் அய்யமே இல்லை  
by mm மேதாவி ,chennai,India    14-05-2010 08:44:46 IST

 திருவள்ளுவன் அவர்களே உங்கள் கருத்தும் உவமையும் மிக அருமை.. பால் தயிரான பிறகு பாலுக்கு மாற்றாகா பயன்படுத்த முடியாது.. அனால் இந்த அரசியல்வாதிகள் சாக்கடை ..இதை எதற்குமே மாட்ட்ராக பயன்படுத்த முடியாது..இவர்கள் இந்தியா வின் கான்செர் கட்டி..வளர்ந்து வளர்ந்து இந்தியா வை அளித்து விட்டு தான் இந்த விஷக் கிருமிகள் அழியும்..  
by m saravanan,singapore,Singapore    14-05-2010 08:36:15 IST

 இந்த கருத்தை நமது நாட்டு அரசியல் வாதிகள் சொல்லவேண்டாம் குறிப்பாக நமது முதல்வர் சொல்லவேண்டாம் எம் ஜி ஆர் இருக்கும்போது இருந்தார் என்று கொஞ்சம் நினைத்து பர்க்கசொல்லுங்கள் போட்டி இருக்கலாம் பொறாமை வேண்டாம் தலைவரே. 
by N விஜய ராசு ,AbuDhabi,UnitedArabEmirates    14-05-2010 08:36:00 IST

 அரசியலை அசிங்கம் செய்து அரசியல் மேடையை அநாகரிக மேடையாக்கியது நீர்தான். காமராஜரின் நல்ல பண்பு எங்களுக்கு நன்றாகவே தெரியும். நீர் ஒன்றும் ஓத வேண்டாம். அந்த தேச பக்தரின் மனம் ரணமாகும்படி செய்ததும் மேல்நாட்டு வங்கிகளில் கோடி கோடியாக சேர்த்து வைத்துள்ள இவரா ஏழைப்பங்காளர் என்று சேற்றை வாரி இறைத்ததும் நீரல்லவா? 
by துரை செல்வராஜூ ,Thanjavur,India    14-05-2010 08:01:38 IST

 மாற்றம் மற்றவர்களிடமிருந்து வரத்து முதலில் நாம் அதாவது முதல்வர் மாற வேண்டும்.  
by H Kumaran,Chennai,India    14-05-2010 07:47:03 IST

 ஐயா திருவள்ளுவரே, ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து விரிவுரையாளர் ஆகி விடுங்கள். இங்கு வந்து சொதப்பாதீர்கள் ப்ளீஸ் !!! 
by G பன்னாடை பாண்டியன் ,chennai,India    14-05-2010 07:34:36 IST

 mgr''s himalayan blunder tamilnadu''s destruction 
by r karunganni,chennai,India    14-05-2010 07:33:00 IST

 MGR காமராஜ் காலங்களில் அரசியல் தொண்டாக இருந்தது. இப்போது அரசியல் ஒரு பெரிய வியாபாரம். இதன் முதலீட்டை விட லட்சம் மடங்கு லாபம் தருகின்ற தொழில். இது க வுக்கு தெரியாத ஒன்ன என்ன.  
by ms மீனா ,chocago,India    14-05-2010 06:44:41 IST

 He started this bad culture. Political parties should fight on their policies and idealogies and not at personal level. Due to his freebies, killing the opposition by false cases etc., he has brought the Tamilnadu politics to a very low level. Hopefully, Stalin and Jayalalitha will not do this.... 
by C Suresh,Charlotte,UnitedStates    14-05-2010 04:31:40 IST

 3/4)அதிமுக உறுப்பினர்களும் மதிமுக உறுப்பினர்களும் தங்கள் முந்தைய தலைவர் என்ற முறையில் வாழ்த்தியிருக்க வேண்டும். 4)தேவைக்கேற்ப அரசியல் பண்பாட்டைப் பேசுவதைவிட எப்பொழுதும் இதனைக் கட்டிக்காக்க வேண்டும். அதிமுக உறுப்பினரைக் கொண்டு அரசு விழாவை நடத்திய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுத்தது இவர் ஆட்சிதானே. வைக்கோ பங்கேற்ற பழ.கருப்பையா நூல் வெளியீட்டு விழாவில் தலைமை தாங்க இருந்த தமிழறிஞரை அவ்விழாவில் பங்கேற்காமல் செய்ததும் இவரது ஆட்சியில்தானே. அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் திமுகவினர் கலந்து கொள்ள இயலுமா? அடுத்த தலைமுறை ஆட்சியின்பொழுதுதான் தமிழகம் கலைஞர் குறிப்பிடும் அரசியல் பண்பாட்டை மீட்டெடுக்கும். விரிவாக எழுத வேண்டிய இச் செய்தியைச் சருக்கமாக முடிக்கின்றேன். அரசியல் பண்பாடு குறித்துப் பேசாமல் தாமும் தம் கட்சியினரும் முன் மாதிரியாக இருக்குமாறு செயல்படட்டும்.  
by I. Thiruvalluvan,chennai,India    14-05-2010 04:02:42 IST

 1/4)முதல்வர் பதவியில் மூவெட்டு ஆண்டை முடித்த முத்தமிழறிஞருக்கு மனம் கனிந்த பாராட்டுகள். இனிமேல் தமிழ் நாட்டில் இப்படிப்பட்ட அருந்திறலை யாரும் நிகழத்த முடியாது. இனி, முதல்வராகக் கட்சிநிலைக்கு அப்பாற்பட்டுச் செயலாற்றவும் தமிழ்இனநலப் பாதைக்குத் திரும்பவும் தமிழர் தாயகத்தை மீட்டெடுக்கவும் தொண்டாற்ற வாழ்த்துகள். வரலாற்றில் படிந்த கறையைத் துடைக்க அண்மைய நிலைப்பாடுகளில் இருந்து மாறுபட்டுத் தம் செல்வாக்கை மத்திய அரசில் தமிழ் ஈழ ஏற்பிற்காகச் செலவிட்டு வெற்றி காண வேண்டும். இல்லையேல் நாளைய வரலாறு அவர் பற்றி என்ன சொல்லும் என்பது அவர் அறிந்ததே. 2/4) பால் தயிரான பின்பு அதைப் பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்தக் கூடாது. மக்கள் திலகம்தான் அவரை முதல்வர் ஆக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.அந் நன்றி மறந்து அவரையே ஓரம் கட்ட எண்ணிச் செயல்பட்டதால் உருவானதே அதிமுக என்பதும் அனைவரும் அறிந்ததே.எனவே. தேவைக்கேற்ப கடந்த காலச் சுவடுகளைப் பயன்படுத்தும் போக்கை நிறுத்த வேண்டும். மக்கள் நலத்திட்டங்களில் முன்னோடியாகச் செயல்பட்ட தம் சொந்தக் காலில் நிற்க வேண்டும். அல்லது மக்கள் திலகத்திற்கு எதிராகச் செயல்பட்ட தம் கடந்த காலத் தவறுகளுக்கு வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும்.  
by I. Thiruvalluvan,chennai,India    14-05-2010 04:01:55 IST

 அட பாவி, இப்படி நாகூசாமல் பொய் சொல்றீரே, இந்த மாதிரி பக்கத்து பக்கத்துல ஒக்காராம போனத்துக்கு உன்னோட தரம் தாழ்ந்த 'செயலும்' காரணம்ன்னும் புரியவே புரியாதா?, ச்சே எப்படி வெக்கம் கெட்ட அரசியல்வாதியாகி விட்டீர். தமிழ்நாட்டுல ரெண்டு கழகமும் அடிப்படையில ஒரு நாகரீகம் இல்லா நிலைய நோக்கி போயிகிட்டு இருக்குங்கறது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நிலை கெட்ட மாந்தரால் மக்களுக்கு என்ன பயன் என்பது புரியவே இல்லையே, 
by k சஞ்சீவ்,bangalore,India    14-05-2010 03:52:29 IST

 அன்று எந்த அரசியல்வாதியும் தன் குடும்பத்திற்கென இவ்வளவு சொத்து சேர்த்ததும் இல்லை. தன் மனைவி மக்களுக்காக அரசியல் நடத்திக்கொண்டு இப்படி நடித்ததும் இல்லை. 
by k mani,london,UnitedKingdom    14-05-2010 03:45:33 IST

 ௧) சோனியா மற்றும் அத்வானி போன்றோர்,எதிர் கட்சி தலைவர்கள் மேல்,பொய் கேஸ் போடுவதில்லை. மு க,காழ்ப்புணர்ச்சி உடன், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியும், சிறப்பு கோர்ட் அமைத்து, பொய் கேஸ் போட்டார்.பிறகு எப்படி நேசக் கரம் நீட்ட முடியும். ௨) மு க பொய் சொல்ல்கிறார்,அவர் குடும்பம்,முதல்வர் பதவி வேண்டாம் என்றது,1969 ல்.எம் ஜி ஆர் ரின் முயற்சியால்,மு க முதல்வர் ஆனார்.  
by R Karuppiah சத்தியசீலன் ,Kinshsa,Congo(Zaire)    14-05-2010 03:17:40 IST

 பணம், பதவிக்காக என்ன வேணும்னாலும் பேசுவாரு இவர். முரண்பாடான பேச்சுக்கு இவர் தான் ஒரு நல்ல எடுத்து காட்டு. திடீர்னு MGR மீது இவருக்கென்ன இவ்வளவு பாசம். அய்யா கருணாநிதி மஞ்சள் துண்டே MGR பற்றி பேசாதீர்கள் ஏன் என்றால் ஜோபெட் சிங்கபூர் பிடிக்காது. அடடா முதல்வராக வர காரணமாக இருந்தவரை தான் கட்சியிலிருந்து வெளியேற்றினீர்களா? எல்லா மேடையிலும் MGR உங்களை பற்றி பேசின பேச்சுக்கள் உங்கள் மீது அவர் எவ்வளவு வெறுப்பாக இருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும், நீங்கள் வேண்டும் என்றால் பதவிக்காக தெருவுல குட்டிகரணம் அடிக்க சொன்னாலும் அடிப்பார் மஞ்சள் துண்டு. இவர் நடத்துற அரசியலும், பேசுற பேசும், விடுற அறிக்கையும் ரொம்ப கேவலமா இருக்குது. 
by g சந்தோஷ்,vellore,India    14-05-2010 03:09:01 IST

 பெரிசு, ரொம்ப நல்ல பேசுறருப, இதே சட்டசபைல் ஜெயlaலிதாவின் chellaiyai uruviyavargal தானே இவர்கள். 
by POO கருத்து KANDASAMY,b0-bo,BurkinaFaso    14-05-2010 03:05:20 IST

 எங்க ஊர்ல 'தங்கம் போட்டு தேச்சாலும் எரும நிறம் வெளுக்காது'-ன்னு சொல்லுவாங்க தலைவா. என்னிக்கு உங்கள மாறி முதிர்ந்த மூங்கில்கள் எல்லாம் போய் இளைய மூங்கில்கள் ஆட்சியில் அமருதோ அன்றைக்குதான் இதெல்லாம் நடக்கும். இளைய மூங்கில்தான் காற்றோடு ஒத்து போகும், வளைய வேண்டிய நேரத்தில வளைந்து கொடுத்து, நிக்க வேண்டிய நேரத்தில் நின்று காற்றோடு ஒத்து போகும். உங்களை மாறி முத்திய மூங்கில்கள் தங்களுக்குள்ளே ஒன்றோடு ஒன்று உரசி தீப்பிடித்து காட்டை அழிக்கும், அந்த தீயோடு சேர்ந்து மற்ற செடி கொடிகளும் அழியும், காற்றோடு சண்டை போட்டு போட்டு சடசட என்று முறிந்து போகும். ஆமா இதை எதுக்கு இப்போ சொன்னேன்? கருமம்... தலைவர நல்லா நாலு வார்த்தை கேக்கனும்ன்கிற ஆசைல என்ன பேசினேன்னு எனக்கே புரியல. உங்க யாருக்காச்சும் எதாச்சும் புரிஞ்சுதா?  
by k கைப்புள்ள,nj,India    14-05-2010 03:01:47 IST

 Hello CM first start this deacent culture in your family among your children and then talk about it in tamilnadu. 
by A sahai,Trichy,India    14-05-2010 02:58:31 IST

 கடைசியாக சொன்ன வரிகளை படித்துப் பாருங்கள். ...................... வேண்டாம் நிப்பாடிக்கோ ஆட்டத்தை. 
by pc மனசாட்சி ,paris,France    14-05-2010 02:12:14 IST

 மத்த நாடுகளை பார்க்கும்போதும் மத்த நல்ல ரோடுகளை பார்க்கும்போது எங்களுக்கும் தான் பொறாமையா இருக்கு தமிழ்நாட்டில் இலையேன்னு. என்ன பண்ண ? எங்க நேரம் நாங்க யார்கிட்ட புலம்ப. பொய் வேலைய பாருங்கையா  
by P Pandian,Florida,UnitedStates    14-05-2010 01:49:49 IST

 கருணாநிதியின் ஆதங்கத்தில் நியாயம் இருந்தாலும் அதை சொல்லும் தகுதி அவருக்கு கிடையாது. 
by K Rajasekaran,chennai,India    14-05-2010 01:38:40 IST

 விடை தெரிந்த கேள்வி. தூங்குவது போல் நடிப்பவரை எப்படி எழுப்புவது? ஆரம்பித்து வைத்தவர்தான் முடித்து வைக்க வேண்டும், தண்டனை தாங்கும் பக்குவம் உண்மையில் இருந்தால், இவர் தொடங்கிய கலாச்சாரத்தை இவரால் நிச்சியம் முடித்து வைக்க முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. 
by H ராம்,London,UnitedKingdom    14-05-2010 01:33:07 IST

 பாவாடையின் நாடாவை அவிழ்த்தால் எல்லாம் புரியும் என்று அன்றைக்கும் அத்வானி சொனியாவை பார்த்துச் சொன்னது இல்லை. மேலும் அவரது ஜாக்கெட்டயோ சாரியையோ பிடித்து இழுத்ததும் இல்லை. அத்வானி என்றைக்கும் கீழ்த்தரமாக எவரைப்பற்றியும் பேசியதும் இல்லை. அவர் ஒழுக்கத்துக்கும் கண்ணியத்துக்கும் ஒரு இலக்கணம்.  
by kv raman,newdelhi,India    14-05-2010 01:22:25 IST

 இந்த அரசியல் நாகரீகம் நீர் இருக்கும்வரை நிச்சயம் நடைபெறாது என்பது திண்ணம். பெண்மையை மதிக்க தெரியாத உன்னருகே எந்த பெண்மணி அமர்ந்து நிகழ்ச்சியினை சிறப்பேற்க முடியும். துச்சாத எண்ணம் கொண்ட கூட்ட தலைவனல்லவோ நீர். தமிழகமே உமது திருவிளையாடலை நன்றாக அறியுமே.பண்பாடு என்பது தலைவர் காமராஜருக்கு எப்போதுமே உண்டு..ஆனால் நீர்தான் அவர் உயிரோடு இருக்கும் வரை 'கருப்பட்டி'தலையன் என்றும் அவர் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் அவர் தங்கியிருந்த தெருவில் அவர் மகளுக்கு நிகரான வயது ஒத்த நடிகையை சம்பந்த படுத்தி பேசி எழுதி கேவலமாக்கியத்தை அதனால்தான் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று அரசியல் சாடலை செய்த பாவி நீர். எம்.ஜி.ஆர் அவர்களை நீர் திட்டாத திட்டா..மஞ்ச பத்திரிக்கை அளவுக்கு முரசொலியிலே தீட்டாத கட்டுரையா? யாரை நீர் கேவலமாய் பேசவில்லை..? உன் மகள் வயது ஒத்த முன்னாள் முதல்வர் என்றும் பாராமல் அம்மா அவர்களை பழிவாங்க நீர் செய்த அடாத காரியங்கள் எவ்வளவு? அதை படித்த, கேட்ட எங்களுக்கே உன்னை கண்டால் 'விஷமாய்' தெரிகின்றபோது சம்பத்தப்பட்டவர்களின் மனநிலையை நீர் யோசித்தீரா? இத்துனை காலம்தான் நீர் அதுபோன்று பேசினீர்..அட இனியாவது 'போகும் வழிக்கு'புண்ணியம் தேடும் விதமாய் நல்லதோர் நாலு வார்த்தை பேசுவீர் என்று பார்த்தால்..அதே சாக்கடை வாயிலிருந்து தாங்க முடியாத துர்நாற்றம் கொண்ட வார்த்தை ஜாலங்கள்..'சாத்தான்' வேதம் ஓதுகின்றது என்ற வாக்கு உமது இந்த 'ஆதங்க'(?) பேச்சு தெளிவாக்குகின்றது..அரசியலை அசிங்கம் செய்தது நீர்தான்..உமது பேச்சை கேட்டு செயலை கண்டு எல்லோருமே ஒதுங்கி செல்வதால் நீர் தனிக்காட்டு ராசா என்று எண்ணிக்கொண்டு மீண்டும் மீண்டும் உளற...  
by P சேகர்,SINGAPORE,Singapore    14-05-2010 01:21:31 IST

 thani manitha thaakuthal started from karuna only.... now he telling like this... 
by a dennis,london,UnitedKingdom    14-05-2010 01:18:51 IST

 கர்ம வீரர் காமராஜரை - அண்டங்காக்கா என்றும்... பக்தவத்சலம், ராஜாஜி ,எம் ஜி ஆர் , ஜெயலலிதா , ஆகியோரை தர குறைவாக பேசிய கருணாநிதி இதை பற்றி பேச தகுதியற்றவர்.  
by c subbu,Lagos,Nigeria    14-05-2010 01:15:46 IST

 1. மேடைப் பேச்சு அநாகரிகத்தை தமிழகத்தில் அறிமுகப் படுத்தியது யார்?. 2. வாரிசு அரசியலுக்கு அரிச்சுவடி எழுதியது யார்?. 3. தனது வாதத் திறமையினை பயன்படுத்தி இரு பொருள்படி மேடைகளிலும் சட்டமன்றத்திலும் பேசுவது யார்?. 4. திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சி மேடைகளை அரசியல் மேடைகளாக மாற்றியது யார்?. 5. அரசியல் நிரந்தர நண்பர் மற்றும் எதிரிகள் இல்லை என கூறி முரண்பாடான கொள்கைகளை கொண்டவர்களுடன் கூட்டணி அமைத்தது யார்?. 6. காலத்திற்கேற்ப அவ்வப்போது தங்கள் கொள்கைகள் மற்றும் நிலைகளை மாற்றிக் கொண்டது யார்?. 7. எல்லாவற்றுக்கும் மேலாக 1989ம் ஆண்டு சட்டசபையில் ஒரு பெண் எதிர்க்கட்சி தலைவரை ஒருமையில் பேசி, வன்முறை கோலத்தை அரங்கேற்றியது யார்?. 
by M Amanullah,Dubai,UnitedArabEmirates    14-05-2010 00:54:17 IST


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக