புதன், 13 ஜனவரி, 2010

நஞ்சு ஊசியின் மூலம் வீரத்தந்தையைக் கொன்ற மகிந்த

பதிந்தவர்_கனி on January 12, 2010
பிரிவு: கட்டுரைகள், செய்திகள்

சோகங்கள், இழப்புக்களென பலவகையான வலிகளை அனுபவித்த எமக்கு வீரத்தந்தை எமது தேசிய தலைவரை எமக்களித்த எமது தலைவரின் தந்தையின் இழப்பு மிகப்பெரும் இழப்பாக தமிழீழ மக்களால் அனுபவிக்கப்பட்டது. தமிழினத்துக்காக எமக்காக நாம் தலைநிமிர்ந்து உலகத்தில் தமிழன் என உரத்துக் குரல்கொடுக்கவும் அதை உலகம் கேட்கவும் எம்மை உலகிற்கு அடையாளம் காட்டிய அந்த மாமனிதனை எமக்களித்தது மட்டுமல்லாது அந்த குடும்பமே இன்று எமக்காக அனுபவித்த அனுபவித்து வருகின்ற வேதனைகள் மிகவும் கொடியது.

தலைவரைப் பற்றி அவதூறாக பேசவும் துரோகம் செய்யவும் துணிந்த ஒவ்வொரு தமிழனும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டி தருணம் தான் இந்த இரண்டு மூன்று நாட்களும். இதிலும் சிந்திக்காதவனை அதாவது தமிழின எதிரி கூட இந்த குடும்பத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பானாயின் கண்ணீர் விட்டு கண்கலங்கக்கூடிய நிலமையே இன்று காணப்படுகிறது.

ஆரம்பகாலத்தில் அதாவது தலைவர் சிங்கள இனவெறியர்களிற்கு எதிராக செயற்படுவதென முடிவெடுத்த காலத்தில் இருந்து தலைவரை தேடி வீட்டிற்கு காவற்துறை வீட்டிற்கு வர ஆரம்பித்தது. தலைவரை பிடிக்க முடியாத சமயங்களில் தலைவரின் சகோதரனை பிடித்து சித்ரவதை செய்வதும் சிறையில் அடைப்பதும் தாய் தந்தையரை தாக்குவதுமென இனவெறியர்களது அட்டுழியம் தொடர்ந்தது. அந்த கொடுமையிலிருந்து மீள்வதற்காக ஒவ்வொரு உறவுகளும் பெற்றோர்களும் நாட்டைவிட்டு வெளியேறி பல்வேறு பகுதிகளிலும் பரந்து வாழ்ந்து வந்தனர்.

அப்படி வாழ்ந்து வந்த சூழலில் தான் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த சமாதானத்தைப் பயன்படுத்தி தமது கடைக்குட்டியும் தமிழீழ தலைவனுமான மேதகு. வே.பிரபாகரன் அவர்களை பார்ப்பதற்காக அவர்களின் பெற்றோர்களும் உறவுகளும் தமிழீழம் வந்தனர். தமிழீழம் வந்த பெற்றோர் தமது இறுதிக்காலத்தை தமது கடைக்குட்டியுடன் கழிப்பதற்காக தமிழீழத்திலேயே தங்கிவிட்டனர்.

ஒரு தமிழீழ தலைவனின் தாய் தந்தையரைப் போல பெருமை பேசியோ அல்லது ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தோ அவர்கள் இருக்கவில்லை. இதில் அவரின் பிள்ளைகள் கூட அந்த மாதிரி ஒரு தற்பெருமை இல்லாத உலகத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு குடும்பமாகவே வாழ்ந்து வந்தது.

சில நபர்களிடம் கதைக்கும்போது சொல்வார்கள் ” பிரபாகரன் சொகுசு வாழ்க்கை அனுபவித்தார்” என்று காட்டுக்குள்ளூம் பதுங்கு குழிக்குள்ளும் தினமும் எப்படி சண்டையை வழிநடத்துவது? எப்படி உலக அரசியலின் வழி நாட்டைக் கட்டியெழுப்புவது என ஒவ்வொரு நொடியும் தமிழீழத்துக்காகவும் தமிழினத்துக்காகவும் சிந்தித்துக்கொண்டிருக்கும் அந்த மாமனிதரின் சொகுசு வாழ்க்கை தமிழீழ காடும் பதுங்குழியும் தான்.

சாதாரண மனிதர்களான நாமே ஆகாயத்தில் பறந்து கொண்டும் உறவுகளுடன் சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் போது தனது குடும்ப அன்பைக் கூட எமக்காக குறைத்துக் கொண்டு எம்மை தலைநிமிர வைத்தது தானா அவரின் சொகுசு வாழ்க்கை! அவர் நினைத்திருந்தால் இன்று உலகில் கோடிஸ்வரராக வாழ்ந்திருக்க முடியும். தமிழீழத்தை இன்னொரு நாட்டிற்கு கொடுத்திருந்தால் இன்று அவர் உலகத்தில் மதிக்கப்படும் ஒருவராக உலகத்தை இன்ப உலா வந்திருப்பார். ஏன் அவர் செய்யவில்லை?..

எதற்காகவும் தன் இனத்தை விட்டுக்கொடுக்காத தன் இனத்தை தன் சுயமானமாக கருதிய தமிழீழ மக்களின் மனதை வென்ற தேசிய தலைவர் அவர். அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார் என்று கூறுபவர்கள் தாம் திருப்தியான வாழ்க்கை வாழாதவர்களே.

இன்று தமிழீழ தலைவரின் தந்தை என்ற ஒரேயொரு காரணத்திற்காக இந்த தள்ளாத வயதிலும் 4ஆம் மாடியில் சித்திரவதைகள் அனுபவித்தது மட்டுமல்லாது கடைசி நேரத்தில் பக்கத்திலிருந்து பார்க்க ஒரு பிள்ளை கூட இல்லாது எதிரியின் பிடியினுள் நாளும் சித்திரவதைகளை அனுபவித்து வாழ்ந்தனர். ஒரு கணம் நீங்கள் உங்களது அம்மா, அப்பா அந்த நிலையிலிருந்தால் நினைத்துப் பாருங்கள் இதை விட அந்த குடும்பம் தமிழீழத்துக்கு என்ன செய்யவேண்டும் என்று எதிர் பார்த்து அவர் வாழ்ந்தது சொகுசு வாழ்க்கை என்கிறீர்கள்?

தமிழீழ போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்தது மட்டுமல்லாது தன் பிள்ளைகள், பெற்றோர்களென வரலாறு பதித்துச் சென்ற வரலாற்று நாயகனை நாம் பெற்றுள்ளோம். தள்ளாத வயதிலும் தனது பெற்றோர்களையும்ம் சக மக்களைப் போல வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர். வதைமுகாமிற்குள் வந்த முதியோர்கள் வெளியில் செல்ல அனுமதித்திருந்த போதிலும் இவர்களை வெளியில் அனுமதிக்காததற்கு காரணம் தலைவரின் பெற்றோர் என்பதால்.

மனம் கதற கதற வதைமுகாமிற்குள் சித்திரவதைகளை அனுபவித்து எதிரியின் அரசியல் நலனுக்காக இன்று தன் இன்னுயிரை தமிழீழத்தின் வரலாற்று பதிவாக்கி சென்றிருக்கிறார் வீரத்தந்தை வேலுப்பிள்ளை திருவேங்கடம் ஐயா அவர்கள். பக்கவாதத்தால் கால் கை இயங்காத நிலையில் அரவணைத்து காத்து வந்த கணவர் இல்லாமல் பிள்ளைகளும் இல்லாமல் தனியாக தவிக்கும் தேசிய தலவரின் தாயார் பற்றி சிந்தித்து பாருங்கள். அதுமட்டுமா? என் அம்மா தனியாக தவிக்கிறார் என்று நினைத்து கலங்குவதை தவிர வேறு வழியின்றி தவிக்கும் அந்த உறவுகளின் நிலையை சிந்தித்து பாருங்கள். இப்படியான கொடுமையான ஒரு வாழ்க்கையை அந்த குடும்பம் அனுபவிப்பதற்கு காரணம் யார்? உண்மையில் இதற்கெல்லாம் பொறுப்பாவனவர்கள் தமிழர்களாகிய நாமே. எமக்காகவே தேசிய தலைவர் ஆயுதம் தூக்கினார். அதற்காகவே இன்று அந்த குடும்பம் பெரும் கொடூரங்களை அனுபவித்து வருகிறது.

உடலில் எந்த நோயும் இல்லாமல் வீர நெஞ்சோடு வாழ்ந்த வீரத்தந்தை தினம் தினம் போடும் ஊசியின் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டதன் விளைவாக அவரது உயிர் எம்மை விட்டு பிரிந்திருக்கிறது. தள்ளாத வயதிலும் நஞ்சு ஊசியடித்து அந்த தந்தை இறக்கவேண்டிய காரணம் என்ன? அதுவும் தேர்தல் நேரத்தில் அவர் இறந்திருக்கிறார். இதனூடாக விடுவிக்கப்பட்ட தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயார் தன் கணவரை இழந்து தேம்பி அழுத காட்சியை படத்தில் பார்க்கும் போது உண்மையில் மனதை மிகவும் உருக்கியது அந்தக் காட்சி. உடலில் உடுத்தியிருக்கும் மஞ்சள் நிற புடவைக்கும் முகத்திற்கு எந்தவொரு வித்தியாசம் இல்லாமல் முகம் மஞ்சளடித்து தன்னை அரவணைத்த அந்த உறவை இழந்து அழும்போது அந்த மனதில் எத்தனைவிதமான கவலைகள் இருந்திருக்கும்! மானமுள்ள தமிழர்களே சொல்லுங்கள்.

ஆதரவு சொல்ல உறவுகள் இல்லை, பிள்ளைகள் இல்லை, பேரப்பிள்ளைகளில்லை. எதுவுமில்லாமல் அந்த தாயார் இன்று தனியாக இன்று அவர் அனுபவிக்கும் அந்த வாழ்க்கைக்கு யார் காரணம்? தமிழர்களே நாம் தான். ஒவ்வொரு நாளும் தலைவரின் தாய் தந்தையரை கடவுளாக வணங்கிச்சென்ற முன்னாள் தமிழீழ இராணுவத் தளபதியிற்கு நான் கடவுளாக தரிசித்த கடவுள்களிற்கு துரோகம் இழைக்கப்படுகிறதே என்று கூட ஒரு மனச்சாட்சி உறுத்தவில்லையே! அவர்களிற்கு ஒரு இரங்கல் தெரிவிக்கவில்லையே! காசு பணத்திற்காகவா நாம் போராடினோம்! சிங்களத்தின் வால் பிடிக்கவா எம்மை தலைவர் வழிநடத்தினார்! அல்லது காசு பணம் வாங்கிய இந்த தாய் தந்தை உங்களை ஆசிர்வதித்தார்கள்! அவர்களின் ஆசியாலும் அவர் பெற்ற தவப்புதல்வனாலுமே நீங்கள் இன்று வால்பிடித்துக் கொண்டேனும் உயிரோடு வாழ்கிறீர்கள் என்று எப்போது சிந்திக்கப் போகிறீர்கள்?………

(Visited 147 times, 147 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக