செவ்வாய், 12 ஜனவரி, 2010

சிறைத்​ தண்டனை அனுபவித்து வந்த இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர் ஜாமீனில் விடுதலை



கொழும்பு, ​​ ஜன.​ 11: விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த இலங்கைத் தமிழரும் மூத்த பத்திரிகையாளருமான ஜே.எஸ்.திசைநாயகம் ​(46) ஜாமீனில் திங்கள்கிழமை விடுதலை ஆனார்.​ ​​ ​ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி ​ கொழும்பு உயர்நீதிமன்றம் திஸ்ஸநாயகத்துக்கு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.​ இதை எதிர்த்து திசைநாயகம் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.​ இதை ஏற்றுக்கொண்ட முறையீட்டு நீதிமன்றம் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ரூ.​ 50 ஆயிரம் ரொக்க ஜாமீனில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.​ இதையடுத்து அவர் ​ திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.​ 2008ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி,​​ தமது அலுவலகம் வந்திருந்த திசைநாயகத்தை விடுதலைப்புலிகளுடன் உறவு வைத்துள்ளார் என்ற புகாரின் பேரில் பயங்கரவாத தடுப்பு புலன் விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.​ ​ 2008 ஆகஸ்ட்டில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.​ செப்டம்பர் 9ம் தேதி விசாரணை தொடங்கியது.​ ​​ ​ திசைநாயகம் கைது செய்யப்பட்டதை அடுத்து உலக அளவில் கண்டனம் எழுந்தது.​ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் அவர் கைது செய்யப்பட்டது பற்றி வேதனை தெரிவித்தார்.​ 2006 மற்றும் 2007ம் ஆண்டில் நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு என்ற மாதாந்திர இதழில் இவர் எழுதிய கட்டுரைகள் வெளியாகின.​ இந்த கட்டுரைகள் வன்முறையைத் தூண்டுவதாகவும் இன,​​ வகுப்பு நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி போலீஸôர் வழக்குப்பதிவு செய்தனர்.​ கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இவர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது.​ தமது பத்திரிகைக்காக வசூலித்த நன்கொடைகளை பயங்கரவாதத்தை ஊக்குவிக்க செலவிட்டார் என்றும் இவர் மீது புகார் சாட்டப்பட்டது என்று தி டெய்லி மிரர் என்ற செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.கொழும்பு உயர் நீதிமன்றம் தனக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததை ஆட்சேபித்து உச்சநீதிமன்றத்தில் திசைநாயகம் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மனு தாக்கல் செய்திருந்தார்.​ ​​ இந்நிலையில் திசைநாயகத்தை உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தால் அரசு தலையிடாது என்று அரசு வழக்கறிஞர் உறுதி அளித்தார்.​ அரசியல் அறிவியல் பட்டதாரியான திசைநாயகம் சர்வதேச உறவில் முதுகலை பட்டம் பெற்றவர்.​ 2007லிருந்து சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.​ 2007 மே மாதத்தில் இலங்கைத் தமிழரை மையமாக வைத்து தனி இணையதளத்தை ஆரம்பித்தார்.விடுதலைப்புலிகளுடன் தனக்கு உறவு இருந்ததை திசைநாயகம் ஒப்புக்கொண்டார் என அரசுக்கு சொந்தமான டெய்லி நியூஸ் பத்திரிகை கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டது.​ அவரது ஒப்புதல் வாக்குமூலம் ஆதாரத்துடன் வழக்கு விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டது.
கருத்துக்கள்

சிறைக் கொடுமைகளில் இருந்து மீண்ட திரு திசைநாயகம விரைவில் முழு நலன் பெறட்டும்! அடக்கு முறைக்கும் அரச வன்கொடுமைகளுக்கும் இன நல அழிப்பிற்கும் எதிரான தம் பணியைத் தொடரட்டும்!

வாழ்க அவர் தொண்டு!

வெல்க தமிழ் ஈழம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
1/12/2010 4:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக