கும்பகோணம் : தேப்பெருமாநல்லூர் சிவன் கோவிலில், வில்வத்தை பறித்து வந்து அர்ச்சனை செய்த நல்ல பாம்பை, பக்தர்கள் திரண்டு சென்று பார்த்து அதிசயித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகே தேப்பெருமாநல்லூரில், வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இத்தலத்தில், விஸ்வநாத சுவாமிக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடப்பது சிறப்பு. நேற்று காலை, சூரிய கிரகணம் நடப்பதற்கு முன், 10.30 மணிக்கு, நல்லபாம்பு ஒன்று கோவிலில் விஸ்வநாத சுவாமியின் மேல் இருப்பதை, கோவில் சிவாச்சாரியார் சதீஷ் கண்டார். பாம்பு, சுவாமியின் மேலிருந்து இறங்கி, நேராக தலவிருட்சம் வில்வமரத்திடம் சென்றது. மரத்தில் ஏறி, வில்வ இலையை பறித்துக் கொண்டு, மீண்டும் சுவாமி சன்னிதிக்குள் வந்தது. பின் வந்தவர்களை பார்த்து சீறியது. சுவாமியின் மேல் ஏறி, தலையில் அமர்ந்து படம் எடுத்தவாறு, சுவாமியின் மீது வில்வ இலையை போட்டது. இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த காட்சியாக இருந்தது. இது போல் இரண்டு, மூன்று முறை செய்தது. இத்தகவல் பரவியதும், கிராம மக்கள் கோவிலுக்கு வந்து, நல்ல பாம்பை பார்த்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
|
வாசகர் கருத்து | |
சிவ சிவ என்ன அற்புதம் அந்த அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்நின் திருவிளையாடல் தான் இது . சகல ஜீவா ரஷிகளிலும் உர்ற்றிரிகும் இச்வரனை மறவாமல் நாம் வணங்கவேண்டும். கலியுகம் முற்ற முற்ற பற்பல அதிசயங்கள் நடக்கும் , அதில் இதுவும் ஒன்று. சிவனின் கழுத்தில் ஈர்க்கும் நாகத்தை படத்தில் நாம் காண்போம் அனல் இந்த கச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. ஓம் நமசிவய ... சிவ சிதம்பரம் தில்லை அம்பலம் |
by Thina தினகரன் narayanan,Penang, Malaysia,Malaysia 1/16/2010 2:20:31 AM IST |
இறைவன் இருக்கின்றன் என்பதை நமக்கு கட்டும் சம்பவம் இது |
by aru arumugam,penang,Malaysia 1/16/2010 1:38:56 AM IST |
இந்த தெய்வீகமான செய்தி தந்த தினமலருக்கு நன்றி.ஆனால்,சில நபர்கள் இதையே வியாபாரமாக்கி விடாது இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும். |
++++++++++++++
எதைத்தேடிப் பாம்பு வந்ததோ! இலை பறித்து வந்ததாகக் கதையளக்கிறார்கள்.
வளர்க பகுத்தறிவு! ஓங்குக இறைநெறி! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக