சனி, 16 ஜனவரி, 2010

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்: சோ



சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற "துக்ளக்' வார இதழின் 40}வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய (இடமிருந்து) இதழ் ஆசிரியர் "சோ', பத்திரிகையாளர் எஸ். குருமூர்
சென்னை, ஜன. 15: தமிழத்தில் அரசு நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. எனவே, ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்றார் பத்திரிகையாளர் சோ."துக்ளக்' வார இதழின் 40}வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வாசகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சோ அளித்த பதில்கள்:தமிழகத்தில் இப்போது நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஓட்டு போட பணத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு மக்களும் தள்ளப்பட்டுவிட்டனர்.சிறு, குறுந் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதைத் தமிழக அரசு தவிர்க்கிறது. மத்திய அரசின் ஆதரவு இருக்கும் வரைதான் தமிழகத்தின் நிதி நிலை சீராக இருக்கும். திமுக ஆட்சி தொடர்ந்தால் அரசு கஜானா திவாலாகிவிடும். இதில் மாற்றம் வரவேண்டும் என்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும். திமுக}வுக்கு மாற்றுக் கட்சி அதிமுக தான். அதிமுக}வுக்கு மக்கள் ஆதரவு உள்ளது: தமிழகத்தில் ஒரு தேர்தலாவது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் நடத்தினால் போதும் திமுக}வுக்கு மக்கள் ஆதரவு அதிகமா அல்லது அதிமுக}வுக்கு ஆதரவு அதிகமா என்பது தெரிந்துவிடும். திமுக}வுக்கு கூட்டணி தொடர்ந்து பலமாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியை எதிர்த்து ஓட்டு வாங்கும் சக்திதான் அதிமுக}வுக்கு இல்லை. ஆனால், தனிக் கட்சியாக பார்க்கும்போது அதிமுக}வுக்கு உள்ள மக்கள் ஆதரவு திமுக}வை விட சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று பேச்சளவில்தான் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். காமராஜர் ஆட்சியை அமைக்கக் கூடிய காங்கிரஸôர் இந்தியாவில் இல்லை. காமராஜரைப் போன்ற நேர்மையானவர்களும் இல்லை.எனவே, இன்றைக்கு இருக்கும் ஆட்சியை விட, சிறந்த ஆட்சியை யார் தருவார்கள் என்பதைத்தான் மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவு இன்றி, தனியாக தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிற்கப்போவது இல்லை. தனியாக நிற்கும் அபாயகரமான செயலை அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். இதுபோல், தேசிய அளவில் இப்போது இருக்கக் கூடிய ஒரே எதிர்க்கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். ஆனால், இப்போது இந்தக் கட்சி எதைச் சொன்னாலும் எடுபடாத நிலை உள்ளது. இக்கட்சிக்கு செல்வாக்கு குறைந்து வருவது உண்மைதான். கட்சிக்குள் ஜனநாயகம் அதிகரித்து விட்டது. யார் வேண்டுமானாலும் தலைவன் என்ற நிலை உருவாகிவிட்டது. மக்களுக்கு நன்கு அறிமுகமானவரை தலைவர் பொறுப்பில் அமர்த்தவேண்டும். ஒரே எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவின் செல்வாக்கு குறைவது நல்லதல்ல. கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாட்டால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஒரு இடைத்தேர்தல் வந்தால் என்ன பயன் கிடைக்குமோ, அதுதான் செம்மொழி மாநாட்டால் கிடைக்கப்போகிறது. ஆனால், மக்களுக்கு பணம் மட்டும் கிடைக்காது. தன்னுடைய ஆட்சியில் செம்மொழி மாநாடு நடத்த முடியவில்லையே என்ற வருத்தம் கருணாநிதிக்கு இருந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்த ஏற்பாடு. பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று. மதுக் கடைகளை ஒழுங்குபடுத்துவது, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மது விற்பனை செய்வது உள்ளிட்ட ஒரு சில ஒழுங்கு நடவடிக்கைளை நடைமுறைப்படுத்துவதான் சாத்தியம். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு என்பது வேண்டாத விவகாரம். இது நடைமுறைக்கு வந்தால், விருப்பம் இல்லாவிட்டாலும் வலுக்கட்டாயமாக பெண்கள் தேர்தலில் நிறுத்தப்படும் நிலை உருவாகும். இதனால் நல்ல ஆட்சி அமையாது. ஆண்களுக்கு சமமாக போட்டியிடுவதுதான் உகந்தது என்றார் சோ. பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி: பொருளாதாரத்தை மக்களுக்குப் புரியாத விஷயமாக மாற்றிய பெருமை, நம்முடைய பொருளாதார நிபுணர்களுக்கு உள்ளது.அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்குத் தீர்வு காண, நோபல் பரிசு பெற்ற 5 பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் 5 பேரும் முரணான கருத்துகளை வெளிப்படுத்தினர். இறுதியில், இதற்குத் தீர்வு என்ன என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று 5 பேரும் கூறிவிட்டனர்.உலகப் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இந்தியா விரைவாக மீண்டு விட்டது. இதற்கு, இந்தியா தன்னுடைய வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதுதான் காரணம். ஆனால், அமெரிக்காவில் மக்கள் வங்கி சேமிப்பில் ஈடுபடுவதே இல்லை. இதனால், அமெரிக்கா வெளி நாடுகளிடமிருந்து ரூ. 150 லட்சம் கோடி கடன் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. குடும்பங்கள் தேசியமயமாக்கப்பட்டுள்ளதால், சாலை போடுதல் உள்ளிட்ட மக்கள் பணிகளில் அமெரிக்க அரசால் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் தனியார் மயமாக்குதல் கொள்கை அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை வங்கிகளில் சேமிப்பு உயர்வதற்கு, நாட்டின் கலாசாரமும், சமுதாய மற்றும் வாழ்க்கை முறையும்தான் காரணம். இதை நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவின் கொள்கைகளை அப்படியே பின்பற்றுவதில் அர்த்தமில்லை என்றார். எழுத்தாளர் பழ,. கருப்பையா: தமிழக அரசியலில் யோக்கியர்களே இல்லாத நிலை உருவாகி வருகிறது. காந்தியடிகள் அழைத்தபோது, நாட்டிலுள்ள உத்தமர்கள் அனைவரும் தங்களைத்தான் அவர் அழைக்கிறார் என்று எண்ணி அவர் பின் சென்றனர்.ஆனால், இப்போது யோக்கியர்கள் தலைகாட்ட முடியாத நிலைதான் இன்றைய அரசியலில் ஏற்பட்டுள்ளது என்றார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன்: ""கடந்த 44 மாதங்களில் தமிழகத்தின் நிர்வாகம் எப்போதும் இல்லாத அளவுக்கு, கடுமையாக சீர்குலைந்துள்ளது. எந்தத் துறை சீர்கெட்டு இருந்த போதும், நிர்வாகம் மட்டும் நன்றாக இருந்திருந்தால் தமிழகம் தப்பித்திருக்கும். வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. சிறு, குறுந் தொழில்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு விட்டன. இதனால், மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் (எஸ்.டி.பி.), மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கீழிறங்கி 5.4 சதவீதமாக உள்ளது'' என்றார் முருகன்.
கருத்துக்கள்

இப்பொழுது தேவை ஆட்சி மாற்றம் அன்று; ஆட்சியாளரின் மனமாற்றம்தான்.வசதி வாய்ப்பு நலத் திட்டங்களில் கருத்து செலுத்துவது போல் தமிழ் நலத் திட்டங்களில் கருத்து செலுத்த வேண்டும். பேச்சாளர் போன்ற தமிழினப் பகைவர்கள் தலையெடுக்கா வண்ணம் தமிழ் இன உணர்ச்சியை வளர்க்க வேண்டும். தமிழ் நாட்டில் எல்லா நிலைகளிலும் தமிழே ஆட்சி செய்ய வேண்டும். முதன்மைப் பதவிகளில் தமிழர்களே அமர்த்தப்படல் வேண்டும். கொலைகாரக் காங்கிரசின் கூட்டணியை உதறித் தள்ளிவிட்டு ஈழத்தில் அரங்கேறிய படுகொலைகளுக்குக் கழுவாயாகத் தமிழ் ஈழம் விரைவில் உலகோரால் ஏற்கப்பட முயன்று வெற்றி காண வேண்டும். முதல்வர் பதவி விலகுவது உறுதியெனில் அப் பதவியில் மூத்த தலைவரான இனமானப் பேராசிரியர்தான் அமர வேண்டும்.பிராமணத் தமிழ்களில் நாடகங்கள், தொலைக்காட்சிப் படைப்புகள், திரைப்படங்கள் உருவாக்கித் தமிழ்க் கொலை புரிவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.தமிழ் சார்ந்த பணியிடங்களில் உண்மைத் தமிழறிவு உடைய தமிழார்வலர்களுக்கே வாய்ப்பு அளித்தல் வேண்டும்.சுருங்கக் கூறுவதாயின் தமிழ் நலம் நாடும் தமிழர் ஆட்சி நடைபெற வேண்டும். அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/16/2010 7:23:00 AM

It is no use discussing here about admin.It has almost come to standstill and CM's legal and illegal families looting TN.Congress and Sonia shut their eyes for a few seats.Congress will certainly lose its base and mass. chitti

By chitti
1/16/2010 7:12:00 AM

CHO HAS INTEREST OF NATION AT HEART. OTHERS WHO SUPPORT DMK AND OPPOSE HIM DO IT BECAUSE THEY ARE EMOTIONALLY ATTACHED TO SOTTAIYAN. HE IS BAD AND BROUGHT DOWN ADMINISTRATION. PEOPLE LIKE AMMU ARE BLINDED BY BRAHMIN HATRED FOR NO REASON AND BLABBER HERE. THATS ALL.

By S Raj
1/16/2010 6:53:00 AM

In my view Cho speaks truth once in a blue moon day - In 1989, when Jaya boasted she is Ph.D. in politics and taunted Bhagyaraj as LKG, Cho told the truth - Yes, she is P.H.D. that is Doctor of Political Humbug. Then in 1996 election, when Cho took a wise decision to support DMK reporters asked him - How do you think MK is better when both MK and Jaya are corrupt. His wise and sensible reply : "We hired a servant (MK) for our home, he indulged in small thefts, we dismissed him. Later we hired a maid (JL), now she says the house is her house and ask us to leave the house. So naturally, we realize that servant is better than the maid.

By Puthiyavan Raj
1/16/2010 6:47:00 AM

gk and Charan, on what basis you say Cho is telling the truth? Jaya was so arrogant and abusive that abused power to harass and imprison political and personal opponents by misusing POTA, ganja case etc.. She was hell bent on demolishing an educational institute (QMC), She imposed recruitment ban for 5 years, summarily dismissed 10,000 road workers and 12000 social workers (just think about their families, their children's future, how many died, how many children had to leave schools and became child laborers). Kalaignar lifted recruitment ban, relaxed age limit for 5 years to compensate the ban (see his vision and compassionate thinking) and provided jobs to more than 3.5 lakh youth, brought industries, constructed fly-overs, introduced kalaignar kaappeettu thittam (free health insurance to the poor), can't you see anything positive?

By Puthiyavan Raj
1/16/2010 6:41:00 AM

Truth always hurts. It is the truth - Karunanidhi govt is taking the state to bankruptcy. You may not like Cho. But accept the truth. Elections are won with money and muzzle power. Small scale industry is at peril. But Karunanidhi, his family and his extended family will get rich by each passing day.

By gk
1/16/2010 6:15:00 AM

Ammu இந்த மாதிரியே தறிகெட்டதனமா சிந்தனையில் இருந்தால் தமிழகம் எப்போது முன் இருந்த பெருமையை மீட்க போறது? தமிழை தாய் மொழியாகவும், தமிழ் மொழி மட்டுமே பேசும் நீங்க குறிப்பிட்ட சமூகத்தை ஒதுக்குவதானால் தமிழகத்துக்குத்தான் இழப்பு. எல்லா தமிழ் இனமும் ஒன்று சேர்ந்து ஒத்து உழைத்தால் நாம் எல்லோரும் மேம்படுவோம். எங்கிருந்தோ வந்த இஸ்லாதையும், கிருத்துவ மதத்தினறையும் தமிழர் என்று ஏற்று கொள்ளும் போது இந்து மற்றும் இந்திய சமூகத்தின் ஒன்றான நீங்கள் குறிப்பிட்ட சமூகத்தை மற்றும் ஒதுக்குவது சரியான ஒன்றல்ல

By kannan
1/16/2010 6:14:00 AM

He is getting old. Due to that he has become insane. We should ignore it. We all know what would happen in Jaya's regime and in fact she would take Tamilnadu in the opposite direction. He said in the recent parliamentary election that the opposition combine would win all the 40 seats and we all know what happened thereafter. I am just waiting....when this jack a*s*s would kick the bucket.

By T.Gene
1/16/2010 6:13:00 AM

I really don't know on what basis he says the administration is not good. During Amma's regime, except Amma nobody has got any power to take any decision. Every body was working at her whimsies and fancies and the ministers were changed very frequently. All the ministers were always at Amma's feet. This man's (Cho) opinion is biased and indicates he is completely out of mind.

By Michael
1/16/2010 5:04:00 AM

Some people will not accept cho's openion. but his openion always correct and strong!!!

By charan
1/16/2010 3:56:00 AM

Aamama! Namma Avazh than atchi seyyanum. Aduthavar atchiylla summa. Nee oru ChOmari!

By ammu
1/16/2010 2:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக