பொங்கல் பண்டிகை பிறந்தது எப்படி?எக்காலமாக இருந்தாலும், பொங்கல் என்பது விவசாயத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இது இன்று நேற்றல்ல. இந்திரவிழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையில் "இந்திர விழா' என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது தெரிய வருகிறது.
காவிரிபூம்பட்டினத்தில் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த விழா இப்போது தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்களே நடக்கிறது. அந்தக் காலத்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற்கான சான்று இருக்கிறது. அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவன் பூம்புகாருக்கு வந்ததாகவும் தகவல் உண்டு. முதன்முதலாக இந்திரவிழா நடத்திய போது, அதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர்.இப்போது பொங்கலுக்கு ஊரையும், வீட்டையும் சுத்தம் செய்து அலங்காரம் செய்வது போல, அப்போதும் நடந்துள்ளது. வீதிகளிலும், கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன. பொன்னால் ஆன பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது.
பாக்கு, வாழை மரத்தோரணங்கள் கட்டப்பட்டன. அன்றையச் செல்வச் செழிப்பிற்கேற்ப தங்கத்தூண்களில் முத்துமாலைகள் தொங்க விடப்பட்டன. நகர வீதிகளிலுள்ள பழைய மணலை மாற்றி புதுமணல் பரப்பினர். கொடிகள் கட்டப்பட்டன. காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜைகள் நடந்தன.இதையெல்லாம் விட உயர்ந்த ஒரு தர்மம் இந்த விழாவை ஒட்டி பின்பற்றப்பட்டது. ஒருவருக்கு யாரேனும் பகைவர்கள் இருந்தால், அவர்களை விட்டு விலகிச் சென்று விட வற்புறுத்தப்பட்டது. ஒரு நல்ல நாளில், தேவையற்ற சண்டைகள் வேண்டாமே என்பதற்காக இவ்வாறு அரசு சார்பிலேயே அறிக்கை விடப்பட்டது. இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.
மழைக்குரிய தெய்வம் இந்திரன். அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் பச்சை செழிக்கும் என மக்கள் நம்பினர். பிற்காலத்தில், சூரியனைப் பற்றிய அறிவு மக்களுக்கு வந்தவுடன், சூரியனே சீதோஷ்ணத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். தங்கள் விளைச்சலுக்கு காரணம் அவரே என நம்பினர். பூமியில் இருக்கும் நீரை ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பவர் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புதுநெல்லை தை முதல்நாளில் சமைத்ததால், இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.
இறைவனை சென்றடையும் பொங்கல் : வாரியார் அருளுரை: * இறைவனுக்கு நிவேதனம் செய்த சர்க்கரைப் பொங்கல் ஏழைகளின் வயிற்றுக்கு வராது. ஏழைகளுக்கு இட்ட சர்க்கரைப் பொங்கல், இறைவனைச் சென்றடைந்துவிடும்.
* வயலில் என்ன விதைக்கின்றோமோ அதுவே விளைந்து நமக்கு பலன்தரும். அதுபோல பிறருக்கு நாம் என்ன செயல் செய்கிறோமோ அதுவே நமக்கு வினைபயனாக வந்து இன்பதுன்பங்களைக் கொடுக்கும்.
* உயிருக்கு உயிராக இறைவன் இருக்கிறார். எனவே தான் மனிதன் மற்றவர்களுக்குச் செய்யும் தொண்டினைக் கடவுள் தனக்குச் செய்ததாக எடுத்துக் கொள்கிறார். பிறருக்கு உதவுகின்ற குணநலன் கொண்ட மனிதன் உயர்வடைவான்.
* நாம் செய்த நல்வினை, தீவினை பயன்களை நாம் அனுபவித்தே தீர வேண்டும். அதனால், செய்யும் செயல் ஒவ்வொன்றையும் நன்மையுடையதாக பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.
* சங்கீதம், கவித்துவம், துணிச்சல், தானதர்மம் ஆகிய நான்கு குணங்களும் நம்முடன் பிறவியிலே ஒட்டிக் கொண்டு வந்து பலன்தருபவையாகும்.
* பசு வாழ்ந்தால் பால் கொடுக்கும். பாம்பு வாழ்ந்தால் நஞ்சு கொடுக்கும். அதனால் பாம்புக்குப் பால் வார்ப்பது போல தீயவர்களுக்கு உதவாதீர்கள். பசுவுக்கு புல்இடுவதுபோல, நல்லவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுங்கள்.
* பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியவழிநடப்பவர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் அழிந்துபோகும்.
* நாம் எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். ஆனால், நன்றி மறந்த பாவத்தைச் செய்தால் தெய்வம் ஒருபோதும் மன்னிப்பதில்லை.
* பிறர் குற்றங்களை மன்னித்து விடுவது மனிதத்தன்மை. அதை அப்படியே மறந்து விடுவது தெய்வீகத்தன்மை. அத்தன்மையை உண்மையான பக்தியால் மட்டுமே பெறமுடியும்.
* நம் உடம்பின் நிழல் நம்மைத் தொடர்ந்து விலகாது வருவதைப் போல, நாம் செய்த நல்வினையும், தீவினையும் என்றும் நம்மை விட்டு நீங்காமல் பிறவிதோறும் கூடவே வரும்.
* பசுவுக்கு உணவினை அதன் வாயில் தந்துவிட்டு மடியில் பாலைக் கறக்கிறோம். அதுபோல நல்லவர்களுக்கு உதவி செய்தால் ஆண்டவனாகிய மடியில் திருவருளைப் பெற்று வாழலாம்.
* திருமால் குறள் (வாமனர்) வடிவம் கொண்டு இரண்டடியால் மூவுலகையும் அளந்தார். அதுபோல திருவள்ளுவர் இரண்டடியால் எல்லா உலகங்களையும் அளந்துவிட்டார். படிப்பதற்கு எளிமையும், பெருமையும் மிக்க திருக்குறள் வழி நடந்தால் வாழ்வில் இன்பம் ஊற்றெடுக்கும்.
மஞ்சள் குலை வாங்குவது ஏன்?மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை மிக்கது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப்பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்
கொள்கிறார்கள். புத்தாடையில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு இருந்தது. முனைமுறியாத அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழிஅனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம் தான். இப்படி மகிமை மிக்க மஞ்சள்கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில்" மஞ்சள் கீறுதல் ' என்னும் சடங்காகச் செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.
பச்சரிசி காட்டும் தத்துவம் : பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் தெரியுமா? பச்சரிசியைப் போல நாம் இன்று பக்குவமில்லாத நிலையில் இருக்கிறோம். பச்சரிசியை பொங்கியதும் சாப்பிடும் பக்குவநிலைக்கு வருகிறது. அதுபோல், நாமும் மனம் என்னும் அடுப்பில் இறைசிந்தனை என்னும் நெருப்பேற்றி படரவிட்டு, ஆண்டவன் விரும்பும் பிரசாதமாக்க வேண்டும். அரிசியுடன் வெல்லம், நெய்,வாசனைதரும் ஏலம்,முந்திரி,உலர்திராட்சை சேர்ந்து வேக வைக்க சுவை மிகுந்த சர்க்கரைப் பொங்கல் தயாராகிறது. பச்சரிசி போல, உலகியல் ஆசை என்னும் ஈரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நாம் பக்குவமில்லாமல் இருக்கிறோம். ஆனால் அன்பு, அருள், சாந்தம், கருணை போன்ற நல்ல குணங்களான வெல்லம்,நெய்,ஏலம், முந்திரி போன்றவற்றை நம்மோடு சேர்த்துக்கொண்டு பக்தி என்னும் பானையில் ஏற்றி, ஞானம் என்ற நெருப்பில் நம்மை கரைத்துக் கொண்டால் பக்குவம் உண்டாகி "பொங்கல்' போல் அருட்பிரசாதமாகி விடுவோம். பொங்கலை இறைவன் உவந்து ஏற்றுக்கொள்வது போல, பக்குவப்பட்ட நம்மையும் ஏற்றுக்கொள்வான். பொங்கல் நாளில் பச்சரிசி காட்டும் இத்தத்துவ உண்மையை உணர்ந்து நம்மை நாமே பக்குவமாக்கிக் கொள்ள முயற்சிப்போம்.
கரும்பின் தத்துவ இனிப்பு : பொங்கலில் முக்கிய இடம் பெறுவது கரும்பு. இது இனிமையின் அடையாளம். கரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதில்லை. நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது. அடிக்கரும்பு தித்திப்பாய் இனிக்கும். இதன்மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால், தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், அதன் முடிவில் கரும்புபோல இனிமையைத் தந்திடும். கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுக்களும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதேபோல வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது தத்துவம். அதனாலேயே மகரசங்கராந்தியான பொங்கல் பண்டிகையில் கரும்பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். மங்கலமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து அழகுபடுத்துகிறோம்.
கிழங்குக்குள்ளே இவ்ளோ விஷயம் இருக்கா! பொங்கல் விழாவில் பனங்கிழங்கு, சிறு கிழங்கு, சேனை, பூசணி ஆகியவை பிரதானம் பெறுகின்றன. திருமணம் முடித்த தம்பதியருக்கு கொடுக்கும் பொங்கல் சீர்வரிசையில் இவை நிச்சயம் இடம் பிடிக்கும். இதற்கு காரணம் தெரியுமா?சீர்வரிசையில் கொடுக்கும் கிழங்குகள் அனைத்தும் மண்ணிற்கு அடியில் விளையக்கூடியவை. மண் எத்தகைய தன்மையுடையதாக இருந்தாலும், அதை தனது இருப்பிடமாக எடுத்துக்கொண்டு, அங்குள்ள நீர் வளத்தைப் பயன்படுத்தி விளைந்து விடும். இதைப்போலவே, மணப்பெண்ணும் தனது கணவன் வீட்டிலுள்ளவர்கள் எத்தகைய குணம் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். அதையே தன்னையும், புகுந்த வீட்டையும் வளப்படுத்துவதற்குரிய இடமாக ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்பட வேண்டும். இதை உணர்த்துவதற்காகவே சீர்வரிசையில் கிழங்கு வகையை கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. சில இடங்களில் உருளை, மரச்சீனி, சீனிக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் கொடுக்கும் வழக்கம் உள்ளது. சிறுகிழங்குகள் திருநெல்வேலி
பகுதியிலும், பனங்கிழங்குகள் ராமநாதபுரம் மாவட்டத்திலும் மார்கழி, தை மாதங்களில் விளையும் என்பது குறிப்பி டத்தக்கது.
பொங்கலும் பஞ்சபூத வழிபாடும் : பொங்கல் திருவிழாவை பஞ்சபூத வழிபாட்டுக்குஉரிய நாளாகக் கொள்ளலாம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே பஞ்சபூதங்கள். தற்போது வரை கிராமங்களில் மண்பானையிலேயே பொங்கலிடுகின்றனர். இந்தப் பானை பூமியில் இருந்து களிமண்ணால் செய்யப்படுகிறது. பானையில் நீர் விட்டு, பனை ஓலை மூலம் நெருப்பு வைத்து அரிசியைக் கொதிக்க வைக்கிறோம். நெருப்பு எரிவதற்கு காரணமாக காற்று இருக்கிறது. வெட்ட வெளியில் பொங்கல் வைப்பதன் மூலம் ஆகாயத்தை பார்க்கிறோம். பொங்கல் வைக்கும் புகையும் வளிமண்டலத்துக்கு நன்மையையே செய்கிறது. இதன்படி பஞ்சபூதங்களை வழிபடும் வைபவமாக பொங்கல் அமைந்துள்ளது.
//////////////////////////////////////////////////
இந்திரவிழா சித்திரை முழு நிலவு நாளில் நடைபெறுவது.
தமிழர் திருநாளாம் பொங்கல திருநாள் தை முதல் நாள் தரணி யெங்கும் நடைபெறுவது.
இரண்டையும் போட்டுக் கட்டுரையாளர் குழப்புவது ஏன்-
மேலும் சுற்றுப்புறத் தூய்மையை வலியுறுத்த போக்கி நாள், இயற்கை வழிபாட்டிற்குப் பொங்கல் புதுநாள், உழைப்பின் உயர்விற்கு மாட்டுப் பொங்கல் நாள், உற்றார் உறவினர் தோழமைச் சிறப்பிற்குக் காணும் பொங்கல் திருநாள் என அறிவியல் முறையிலும் பகுத்தறிவு முறையிலம் கொண்டாடப்படும் விழாக்களுக்கு எதற்குப் புராணப் பூச்சு?
தினமலர் ஆசிரியர் குழுவினர், பணியாளர்கள், முகவர்கள், விற்பனையாளர்கள், நேயர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள். ஈழத் தமிழர்கள் வரும் பொங்கலைத் தம் தாயகத்தில் கொண்டாட வாழ்த்துகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
=============
வாசகர் கருத்து | |
![]() ![]() |
by S Mohan,Singapore,India 1/14/2010 9:47:48 PM IST |
![]() ![]() |
by s செந்தில் ,CHENNAi,India 1/14/2010 8:57:35 PM IST |
![]() ![]() |
by velu velu,batam,Indonesia 1/14/2010 7:50:18 PM IST |
![]() ஆனால் அந்த கலிபோர்னிய வைரஸ் ஸ்ரீதர் . ஒரு நல்ல கவிதை கொடுக்கலாமே..இந்நாளில்... அவர் கலைஞர் எதிரிகளுக்கு தான் கவிதா எழுதுவார் போல.. ![]() |
by GB ரிஸ்வான்,jeddah,Saudi Arabia 1/14/2010 7:33:54 PM IST |
![]() ![]() |
by N Suthahar,kuwait,India 1/14/2010 6:46:35 PM IST |
![]() ![]() |
by p jeevitha,moscow,India 1/14/2010 6:05:01 PM IST |
![]() ![]() |
by s mohamed gani,dubai,United Arab Emirates 1/14/2010 3:33:24 PM IST |
![]() ![]() |
by S முருகன்,kolappalur 632313,India 1/14/2010 3:15:21 PM IST |
![]() ![]() |
by p ரவி,Singapore,India 1/14/2010 2:57:34 PM IST |
![]() அறியாமை விலகட்டும் ..... ஒற்றுமை ஓங்கட்டும்..... நாடு சுபிட்சம் பெற்று எல்லோரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்..... ![]() |
by a.s முஹ்சின் அலி ,al kharj,Saudi Arabia 1/14/2010 2:53:34 PM IST |
![]() ![]() |
by C karthikeyan,jeddah,Saudi Arabia 1/14/2010 2:32:10 PM IST |
![]() ![]() |
by விக்னேஷ் ,singapore,India 1/14/2010 1:58:14 PM IST |
![]() ![]() |
by Premlatha,Manama,Bahrain 1/14/2010 1:38:44 PM IST |
![]() ![]() |
by sr முரளிதரன்,kolkata ,India 1/14/2010 1:31:37 PM IST |
![]() அகமும் புறமும் புழங்கும் வேண்டாதவைகளும் கவலைகளும் நீக்கப்படாதவைகளும் போகியின் நெருப்பில் கருக வாழ்விற்கு வெள்ளையடிக்க அடிக்கரும்பின் சுவையாய் என்னாளும் இனிக்க பிறக்குது பொங்கல்.. எல்லோரும் கொண்டாடுங்கள் பொங்கலோ பொங்கல் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் முருகன் ![]() |
by u முருகன் ,Zurich,Switzerland 1/14/2010 1:22:26 PM IST |
![]() அன்புடன்,, என்றும். ரியாஸ் ![]() |
by M Riyas,Al-khobar,Saudi Arabia 1/14/2010 1:01:30 PM IST |
![]() ![]() |
by N குணா,Singapore,Singapore 1/14/2010 12:16:00 PM IST |
![]() ![]() |
by Mur,chenai,India 1/14/2010 11:44:47 AM IST |
![]() ![]() |
by R பாலா,Dubai,India 1/14/2010 10:47:58 AM IST |
![]() ஞாயிறு போற்றுதும்..!! ஞாயிறு போற்றுதும்..!! நலந்தர வேண்டியே ஞாயிறு போற்றுதும்..!! செந்நெல் வீட்டிற் சிறப்பாய் நிறைய..!! செங்கரும்ப கத்தில் தேனாய் ஓட.!!! மாந்தரகத்தினில் மகிழ்ச்சி ததும்ப...!! வருடத்திற்கொருநாள் வந்தது திருநாள்..!! தோரணந் தொட்டிலாய் வீட்டினில் தொங்க..!!! உழவரின் நண்பன் உழவு மாடுகள்..!! உழுத கலங்கள் அனைத்தையும் இன்று வணங்கியே தொழுதிடும் அருநாள்..!! வந்ததே இந்த திருநாள்..!! இது அருநாள், திருநாள், பெருநாள், வருநாள் எல்லாம் இனி வளநாள்..!!!!!! '''' இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!! '''' ![]() |
by நான் இந்தியன்..!!!,தமிழ்நாடு..!!,India 1/14/2010 10:32:31 AM IST |
![]() ![]() |
by Mr. முஹம்மது ஹாசிபு ,Kumbakonam,India 1/14/2010 10:19:20 AM IST |
![]() ![]() |
by S KANDARAJA,Jubail,Saudi Arabia 1/14/2010 10:18:03 AM IST |
![]() ![]() |
by R Easwaran,Ajman,United Arab Emirates 1/14/2010 10:11:54 AM IST |
![]() ![]() |
by Anbu,Dubai uae,United Arab Emirates 1/14/2010 10:03:11 AM IST |
![]() அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். ![]() |
by G. suresh,Bantangas,Philippines 1/14/2010 9:55:08 AM IST |
![]() ![]() |
by umamageswari,dubai,United Arab Emirates 1/14/2010 9:50:53 AM IST |
![]() ![]() |
by தா செல்வகுமார் ,திருநெல்வேலி ,India 1/14/2010 8:56:03 AM IST |
![]() ![]() |
by g kannan,chennai.manali,India 1/14/2010 8:37:55 AM IST |
![]() அன்புடன் க .மணவழகன் ![]() |
by k manava,saudi,India 1/14/2010 8:37:42 AM IST |
![]() Sirkazhi Harikrishnan ![]() |
by P HARIKRISHNAN,Abu Dhabi,United Arab Emirates 1/14/2010 8:31:59 AM IST |
![]() ![]() |
by துரைசெல்வராஜு ,Thanjavur,India 1/14/2010 8:10:03 AM IST |
![]() ![]() |
by திரு ஜெய்,கனடா,Canada 1/14/2010 8:07:12 AM IST |
![]() ![]() |
by M ராஜா,Bangalore,India 1/14/2010 8:03:51 AM IST |
![]() FOR ALL DINAMALAR READERS. ![]() |
by G ஜாய்,chennai,India 1/14/2010 7:34:47 AM IST |
![]() ![]() |
by K தயாளன்,Tokyo,India 1/14/2010 6:25:22 AM IST |
![]() தமிழர் திருநாளாம் பொங்கல திருநாள் தை முதல் நாள் தரணி யெங்கும் நடைபெறுவது. இரண்டையும் போட்டுக் கட்டுரையாளர் குழப்புவது ஏன்- மேலும் சுற்றுப்புறத் தூய்மையை வலியுறுத்த போக்கி நாள், இயற்கை வழிபாட்டிற்குப் பொங்கல் புதுநாள், உழைப்பின் உயர்விற்கு மாட்டுப் பொங்கல் நாள், உற்றார் உறவினர் தோழமைச் சிறப்பிற்குக் காணும் பொங்கல் திருநாள் என அறிவியல் முறையிலும் பகுத்தறிவு முறையிலம் கொண்டாடப்படும் விழாக்களுக்கு எதற்குப் புராணப் பூச்சு? தினமலர் ஆசிரியர் குழுவினர், பணியாளர்கள், முகவர்கள், விற்பனையாளர்கள், நேயர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள். ஈழத் தமிழர்கள் வரும் பொங்கலைத் தம் தாயகத்தில் கொண்டாட வாழ்த்துகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ![]() |
by I. Thiruvalluvan,chennai,India 1/14/2010 4:29:57 AM IST |
![]() Sarwan ![]() |
by M சர்வான்,Indai,India 1/14/2010 3:58:58 AM IST |
![]() தமிழகத்தில் அவரவர் தன் குடும்பத்தினருடன் பொங்கல் திரு நாளை மனமகிழ்வுடன் இனிதே கொண்டாட,ஒற்றுமையாக எல்லா மதத்தவர்களும் இருக்க இந்நநாளில் வாழ்த்துக்கள் தெரிவித்துகொள்ளும் வாழ்த்தும் அன்பு வாசகன் .. GB.RIZWAN நன்றி வணக்கம் !!! வாழ்க வளமுடன். ![]() |
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia 1/14/2010 3:17:20 AM IST |
![]() ![]() |
by M Amanullah,Dubai,United Arab Emirates 1/14/2010 12:24:21 AM IST |
![]() ![]() |
by C SENTHILKUMAR,VAVIYARENTHAL,Bahrain 1/14/2010 12:23:12 AM IST |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக