வியாழன், 14 ஜனவரி, 2010

தலை​வர்​கள் பொங்​கல் வாழ்த்துகருத்துக்கள்

(தொடர்ச்சி) மனித நேயம் எங்கும் மலரட்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பார்புகழ் பைந்தமிழ் நாடு! வெல்க தமிழ் ஈழம்! வாழிய இந்தியா! வாழிய ஆசியா! வாழிய வையகம்! வாழிய உயிரினம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தி.அன்புச் செல்வி, தி.ஈழமலர் & தி.ஈழக்கதிர் 01.01.2041- 14.01.2010

By Ilakkuvanar Thiruvalluvan
1/14/2010 3:40:00 AM

தினமணி ஆசிரியர் குழுவினருக்கும் பிற பணியாளர்களுக்கும் முகவர்களுக்கும் நேயர்களுக்கும் வணக்கமும் வாழ்த்தும்! அன்புடையீர் சுற்றுப்புறத் தூய்மையை வலியுறுத்தும் போக்கி நாள்! இயற்கை வழிபாட்டை வலியுறுத்தும் பொங்கல் திருநாள்! உழைப்பின் உயர்வை உணர்த்தும் மாட்டுப் பொங்கல் நாள்! உற்றார் உறவினர் தோழமையைச் சிறப்பிக்கும் காணும்பொங்கல் திருநாள்! அறிவு சார்ந்த இத்திருநாட்களுடன் இணைந்த திருவள்ளுவர் புத்தாண்டுத் திருநாள்! இவ் விழாக் காலம் நமக்கு நம்பிக்கையையும் நன்னிலையையும் ஏற்படுத்தட்டும்! உலகெங்கும் தமிழர் உரிமையுடனும் உவகையுடனும் வாழ வழி காண்போம்! வரும் தைத்திரு விழாவை ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் அடிமையாட்சி அகன்று குடிமை ஆட்சியில் கொண்டாட நாமும் துணை நிற்போம்! (தொடர்ச்சி காண்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்) 01.01.2041- 14.01.2010

By Ilakkuvanar Thiruvalluvan
1/14/2010 3:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக