வியாழன், 14 ஜனவரி, 2010

தமிழர்கள் பலர் வாக்குரிமை இழக்கும் அபாயம்



கொழும்பு, ஜன. 13: இலங்கையில் அகதி முகாமிலிருந்து தங்களது சொந்த கிராமங்களுக்கு அண்மையில் திரும்பிய தமிழர்கள், வரும் 26-ம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் வாக்குரிமை இழக்கும் அபாயம் உள்ளது என்று ஜ.நா.வின் அங்கீகாரம் பெற்ற தன்னார்வ அமைப்பு எச்சரித்துள்ளது.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரில், வன்னி உள்ளிட்ட வட பகுதியைச் சேர்ந்த 2.8 லட்சம் தமிழர்கள் வீடுகளிலிருந்து வெளியேறி அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் தங்கினர்.தற்போது போர் முடிந்துவிட்ட நிலையில், அகதி முகாம்களிலிருந்து 1.8 லட்சம் பேர் தங்களது சொந்தக் கிராமங்களுக்கு திரும்பி உள்ளனர்.வாக்காளர் பட்டியல் தயாரிப்பின்போது இவர்கள் தங்களது வீடுகளில் இல்லாத நிலையில் தற்போது அவர்களால் வாக்களிக்க இயலாத நிலை உள்ளது என்று ஐ.நா. சபை அங்கீகாரம் பெற்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பான "இரின்' கூறியுள்ளது. அகதி முகாம்களிலிருந்து திரும்பியவர்களில் 35 ஆயிரம் பேர்தான் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள்ளனர். பெரும்பாலானோர் பதிவு செய்யவில்லை. எனவே அவர்கள் வாக்களிக்க முடியாமல் போகும் நிலைதான் தற்போது உள்ளது.
கருத்துக்கள்

திரு. உசாந்தனின் கருத்தை முழுமையாக வழி மொழிகிறேன். அதே நேரம் சிங்கள நாட்டில் தமிழனுக்கு வாக்குரிமை தேவையில்லைதான். தமிழ்ஈழ நாட்டில் குடியாட்சித் தேர்தல் நடைபெற்று அனைத்துத் தமிழர்களும் குடிமக்களாகப் பங்கேற்றுத் தங்கள் தலைவராகத் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைத் தேர்ந்தெடுக்கும காலம் விரைவில் வரும். இப்போது அடிமைப்படுத்துவோரைத் தேர்ந்தெடுக்க் எதற்கு வாக்குரிமை? வீர வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/14/2010 3:51:00 AM

இந்தக் வாக்குரிமை இழக்கும் கொடு நிகழ்வு மட்டுமல்ல; ஆங்கிலேயர் விலகியது முதல் தமிழினத்திற்கு எதிராக மிகப் பலக் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழ் ஈழ இறையாண்மையைச் சிதைத்துச் சிங்களர்களிடம் நாட்டைக் கொடுத்த இங்கிலாந்து நாட்டினரும் சிங்களர்களிடம் அடிமை வேலை செய்து தமிழினத்தை அழித்து வரும் இந்திய அரசும் சொல்லுக்கு மதிப்பில்லா இடங்களில் தமிழர்களின் மேல் பரிவு காட்டுவது போல் பேசி அதிகாரமுள்ள இடங்களில் சிங்களத்திற்கு வரிந்து கட்டிக் கொட்டும் அமெரிக்காவும் நேற்றுவரை தத்தம் உரிமைகளுக்காகப் போராடி விடுதலை பெற்ற சிறு சிறு நாடுகளும் தமிழினத்திற்கு எதிராகப் படுகொலைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்து வருகின்றன. ஆனால் நாமோ பண வெறியும் பதவி வெறியும் என வாழும் தமிழ் இன துரோகிகள் அடிமையாக இருந்துகொண்டு பிளவு பட்டுக் கொண்டு நிற்கிறோம். அரசியல் தலைமைகளின் அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வந்தாலன்றோ தமிழர்களின் அடிமைத்தனத்தை ஒழிக்க இயலும்?

By usanthan
1/14/2010 1:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக