செவ்வாய், 12 ஜனவரி, 2010

எனக்காகப் பாடினார் எம்.ஜி.ஆர்.: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்



சென்னை, ​​ ஜன.11: "என்ன தான் நடக்கும்,​​ நடக்கட்டுமே!' என்ற பாடல் எனக்காக எம்.ஜி.ஆர்.​ பாடினார்'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.​ ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா திங்கள்கிழமை பேசினார்.காலை 11.09 மணிக்கு தனது பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா,​​ நண்பகல் 12.15 மணிக்கு முடித்தார்.​ முடிக்கும் போது திமுக ஆட்சி குறித்து விமர்சித்த அவர்,​​ "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!' என்ற பாடலைப் பாடினார்.இதன்பின்பு,​​ பேரவையில் உரையாற்றிய முதல்வர் கருணாநிதி,​​ ""எம்.ஜி.ஆர்.​ தனக்காக இந்தப் பாடலைப் பாடினார்'' என்று தெரிவித்தார்.​ அவர் பேசுகையில்,​​ ""எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய உரையின் இறுதியில் ​எம்.ஜி.ஆர்.​ பாடலை இங்கே சொன்னார்கள்.​ அந்தப் பாட்டு அவர்களுக்காகப் ​பாடியதல்ல.​ எனக்குத் தெரியும்,​​ எம்.ஜி.ஆர்.​ என்னை மனதிலே கொண்டு பாடிய பாடல் அது.​ ஏனென்றால் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர் அவர்.​ இன்னும் சொல்லப் ​போனால்,​​ திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்றபோது,​​ தலைவராக நான் தான் வரவேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர்.​ அதற்காக ஆட்களைச் சேர்த்தவர்.​ அந்த நன்றி எனக்கு உண்டு.​ சாகின்ற வரையிலே உண்டு.​ அதைபோல இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர்.​ எனவே,​​ எம்.ஜி.ஆர்.​ பாடிய பாடலை நான் இப்படி கருதிக் கொள்கிறேன்.​ அந்தப் பாடலில் "தலைவன் இருக்கின்றான் மயங்காதே' என்று வரும் வரி,​​ என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார்.​ தலைவி இருக்கிறார் மயங்காதே எனச் சொல்லவில்லை'' என்றவுடன் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
கருத்துக்கள்

நிலைமாறி எதிர் எதிர் ஆக மாறிய பின்பு எத்தனைக் காலத்திற்குத்தான் 40 ஆண்டு கால நட்பைக் கூறிக் கொண்டிருப்பது? வாழ்ந்த பொழுது ஒருவரை ஒருவர் வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு விட்டுத் திரும்பத்திரும்ப பழைய பல்லவியையே பாடுவது நன்றாக இல்லை. எனவே, எதிர் நிலைப்பாடு ஏற்பட்ட வரலாற்று உண்மையைத் திரிக்காமல் மறுக்காமல் மறைக்காமல் மழுப்பால் தன்னுடைய இயக்கப் பணிகள் கருத்துகள் போராட்டங்கள் அடிப்படையிலேயே தன்னை முன்னிறுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயல வேண்டும். நாடெங்கும் ஆழமான அழுத்தமான கலைஞர் எதிர்ப்பு கருத்தினை ஆழமாக விதைத்துத் தாம் மறைந்தாலும் தம்மால் விதைக்கப்பட்ட கருத்தினை மறையாமல் இருக்கச செய்த புரட்சித்தலைவரின் தோழமை என்ற புகழில் தன்னை மறைக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயலக கூடாது. புரட்சித் தலைவருக்கு எதிரான இயக்க விளக்கும் அணையாமல் இருப்பதை உணர்ந்து இனியேனும் எதிர்ப்பிற்கு முந்தைய நிலை‌யைக் கூறி மக்க‌ளை எரிச்சல்படுத்தக் கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
1/12/2010 3:45:00 AM

40 ஆண்டுக் கால நண்பரா மகனா என்ற நிலை வந்த பொழுது நிலைப்பாடு மாறியதை மறக்கக் கூடாது. தந்தை பெரியார் இறை மறுப்பாளராக மாறிய பின்பு அவரின் முந்தைய கருத்துகளை எவ்வாறு எடுத்தாளக் கூடாதோ, அதே போல் நிலைமாறி எதிர் எதிர் ஆக மாறிய பின்பு எத்தனைக் காலத்திற்குத்தான் 40 ஆண்டு கால நட்பைக் கூறிக் கொண்டிருப்பது? வாழ்ந்த பொழுது ஒருவரை ஒருவர் வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு விட்டுத் திரும்பத்திரும்ப பழைய பல்லவியையே பாடுவது நன்றாக இல்லை. எனவே, எதிர் நிலைப்பாடு ஏற்பட்ட வரலாற்று உண்மையைத் திரிக்காமல் மறுக்காமல் மறைக்காமல் மழுப்பால் தன்னுடைய இயக்கப் பணிகள் கருத்துகள் போராட்டங்கள் அடிப்படையிலேயே தன்னை முன்னிறுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயல வேண்டும். நாடெங்கும் ஆழமான அழுத்தமான கலைஞர் எதிர்ப்பு கருத்தினை ஆழமாக விதைத்துத் தாம் மறைந்தாலும் தம்மால் விதைக்கப்பட்ட கருத்தினை மறையாமல் இருக்கச செய்த புரட்சித்தலைவரின் தோழமை என்ற புகழில் தன்னை மறைக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயலக கூடாது. புரட்சித் தலைவருக்கு எதிரான இயக்க விளக்கும் அணையாமல் இருப்பதை உணர்ந்து இனியேனும் எதிர்ப்பி

By Ilakkuvanar thiruvalluvan
1/12/2010 3:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக