சனி, 16 ஜனவரி, 2010

நாங்கள் விட்டுச்செல்லும் பணியை ஸ்டாலின் தொடர வேண்டும்



சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார். உடன் நிதியமைச்சர் க. அன்பழகன், நிற்பவர்கள் (இடமிருந்
சென்னை, ஜன.15: ""நானும் நிதி அமைச்சர் அன்பழகனும் விட்டுச் செல்லும் பணிகளை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் அவர் பேசியது:இந்த விருது வழங்கும் விழாவுக்கு நான் வருவேன், பேசுவேன் என்று நினைக்கவில்லை. இன்று காலை எப்போதும் இல்லாத அளவுக்கு 4 மணி நேரம் அதிகமாக உறங்கியிருக்கிறேன். வீட்டில் உள்ளவர்கள் எழுப்பியும் எழுந்திருக்காததால் டாக்டர்கள் வந்து என்னை எழுப்பினார்கள்.வியாழக்கிழமை பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்ட களைப்பினால் அதிக நேரம் உறங்கிவிட்டேன். அதனால் எனக்குப் பதிலாக நிதி அமைச்சர் விழாவில் கலந்து கொண்டு விருது வழங்கட்டும். அவரால் முடியாவிட்டால் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கட்டும் என்று காலையில் சொல்லி அனுப்பினேன்.ஆனாலும் விருது பெறுபவர்களை ஏமாற்ற விரும்பாமல், அன்பழகன் வந்துவிட்டார் என்றதும் நானும் வந்துவிட்டேன். இப்போது நான் சிலருக்கு விருது வழங்கியதும் மற்றவர்களுக்கு அன்பழகன் விருதுகளை வழங்குவார். நாங்கள் இருவரும் வழங்கிய பிறகும் மிச்சம் இருப்பவர்களுக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்குவார்.அதாவது நானும், நிதி அமைச்சர் அன்பழகனும் விட்டுச் செல்லும் பணிகளை மு.க. ஸ்டாலின் தொடர வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். இவ்விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் விருதுபெற்ற கவிஞர் தமிழ்தாசன், நான் ஓய்வு பெறக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.நான் எங்கே விலகிச் சென்று விடுவேனோ என்ற பதற்றத்தில் ஜோதிபாசு, நெல்சன் மண்டேலா, பெரியார் போன்ற உதாரணங்களை இங்கே குறிப்பிட்டார். ஜோதிபாசு இப்போது உடல் நலிவுற்று இருக்கிறார். நெல்சன் மண்டேலா அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பெரியார் சிறிது காலம்தான் அரசியலில் இருந்தார். நானும் அவர்களின் வழியில் செயல்படுவேன் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.காமராஜர் விருது பெற்ற இரா. சொக்கர் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர். அவரைப் பார்க்கும்போது சட்டப் பேரவையில் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.நாங்கள் ஆளும்கட்சி வரிசையிலும், சொக்கர் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்த நேரம். எங்கள் வரிசையில் இருந்த அமைச்சர் ஒருவர் தனது துறை மானியக் கோரிக்கையின் போது எழுதிக் கொண்டு வந்ததை எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் படித்துக் கொண்டு வந்தார். 6 பக்கங்கள் படித்ததும் மீண்டும் முதல் பக்கத்தை படிக்க ஆரம்பித்து விட்டார்.அதனை சொக்கர் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். நானும் அமைச்சரைக் காப்பாற்றுவதற்காக, பேரவை உறுப்பினர்களுக்குதான் படித்தது புரிந்ததா? என்பதை அறிவதற்காக அவர் மீண்டும் படித்தார் என்று சமாளித்தேன்.அப்போதெல்லாம் எழுதிக்கொண்டு வந்து படிக்கும் பழக்கம் இல்லை. இப்போது சிலர் தாங்கள் எழுதிக் கொண்டு வருவதை அவர்களே படித்துப் பார்ப்பதில்லை. அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினால் அர்ச்சனை செய்கிறார்கள். அதனை ஆதரிக்கும் கூட்டமும் தமிழகத்தில் இருக்கிறது என்றார் கருணாநிதி.
கருத்துக்கள்

ஓயாத உழைப்பாளியும் படைப்பாளியுமான முத்தமிழறிஞர் கட்சி வேறுபாடற்ற தமிழ் நலத் தவைராக இருந்து அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும். இதன் மூலம் ஒரு காலத்தில் தமிழ் பேசும் பகுதியாக இருந்த இன்றைய இந்தியா தமிழ் இந்தியா என அழைக்கும் நிலை வரவேண்டும். இந்தியாவின் ஆட்சி மொழியாக அலுவல் மொழியாகத் தமிழ் திகழல் வேண்டும். பன்னாட்டு அவைகளின் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குதல் வேண்டும். அவ்வவைகளில் தமிழ் ஈழக் கொடியும் பறக்க வேண்டும். மாண்புமிகு இனமானப் பேராசிரியர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று கலைஞரின் பணிகளைத் தொடருவதுடன் பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை நனவாக்க வேண்டும். கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் உட்சணடையின்றி அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எண்ணற்றோர் எண்ணம் நிறைவேற கலைஞர் வழிவிட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/16/2010 7:49:00 AM

அடுத்தவர் துணையின்றி நடக்க இயலாத தன்னால் முதல்வராக நீடிக்க இயலவில்லை என்றால் பேராசிரியரை ஏன் இதில் சேர்க்க வேண்டும்? எப்பொழுதும் இரண்டாவதாகத்தான் இருக்க வேண்டுமா? ஒரு வேளை நிதியமைச்சரும் தன் உட் கிடக்கையைப் புரிந்துகொண்டு வராமல் இருந்து விடுவார்; அப்பொழுது துணைமுதல்வருக்கு விருதுகளை வழங்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எண்ணியிருந்து ஆனால், நிதியமைச்சர் வந்து ஏமாற்றிவிட்டதால் தான் வந்து விட்டாரா? ஓயாத உழைப்பாளியும் படைப்பாளியுமான முத்தமிழறிஞர் கட்சி வேறுபாடற்ற தமிழ் நலத் தவைராக இருந்து அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும். இதன் மூலம் ஒரு காலத்தில் தமிழ் பேசும் பகுதியாக இருந்த இன்றைய இந்தியா தமிழ் இந்தியா என அழைக்கும் நிலை வரவேண்டும். இந்தியாவின் ஆட்சி மொழியாக அலுவல் மொழியாகத் தமிழ் திகழல் வேண்டும். பன்னாட்டு அவைகளின் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குதல் வேண்டும். அவ்வவைகளில் தமிழ் ஈழக் கொடியும் பறக்க வேண்டும். மாண்புமிகு இனமானப் பேராசிரியர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று கலைஞரின் பணிகளைத் தொடருவதுடன் பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை நனவாக்க வேண்டும். கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் உட்சணடையின்றி அவரு

By Ilakkuvanar Thiruvalluvan
1/16/2010 7:48:00 AM

He meant cheating people by giving freebies and amassing wealth for their own families.... Weldone Mr Karunanidhi. You will enter into guinness books for cheating people continuously and yet getting votes from our people. That is a commendable achievement...I am not sure if Stalin can do it so effectively. I am sure you would have passed on your 'knowledge' of how to be in business by giving freebies and getting votes. Now it is stalin's turn to experiment it. UNLESS OUR PEOPLE WAKE UP ... These people will eat away all the wealth and will also sit on the sidelines and watch Tamils die ! 3200 crores for free TV ..stalin can do something more..he can probably give free fridge, how about supplying TASMAC stuff by direct pipeline ? Our people will vote for you. give them biriyani and tasmac coupon.

By Karthik
1/16/2010 7:40:00 AM

He meant cheating people by giving freebies and amassing wealth for their own families.... Weldone Mr Karunanidhi. You will enter into guinness books for cheating people continuously and yet getting votes from our people. That is a commendable achievement...I am not sure if Stalin can do it so effectively. I am sure you would have passed on your 'knowledge' of how to be in business by giving freebies and getting votes. Now it is stalin's turn to experiment it. UNLESS OUR PEOPLE WAKE UP ... These people will eat away all the wealth and will also sit on the sidelines and watch Tamils die ! 3200 crores for free TV ..stalin can do something more..he can probably give free fridge, how about supplying TASMAC stuff by direct pipeline ? Our people will vote for you. give them biriyani and tasmac coupon.

By Karthik
1/16/2010 6:13:00 AM

Karunanity is talking about his bribe taking, raping and back stabing Tamils; etc and he wants Stalin to continue.

By Ram Chetty
1/16/2010 6:03:00 AM

எந்த பன்னிகளை சொல்லுகிறீர்கள் அய்யா, ஸ்டாலின் முன்பு மேய்த்த பன்னிகளையா?

By Tamilan
1/16/2010 5:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
+++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக