செவ்வாய், 12 ஜனவரி, 2010

அரசின் திட்டங்களுக்கு முதலமைச்சர்கள் பெயர்: ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் கடும் வாக்குவாதம்



சட்டப் பேரவையில் திங்கள்கிழமை உரையாற்றி விட்டுச் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா.
சென்னை, ​​ ஜன.11:​ அரசின் திட்டங்களுக்கு முதல்வரின் பெயரை வைப்பது தொடர்பாக,​​ எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.​ சட்டப் பேரவையில் திங்கள்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்தை முடித்து வைத்து ஜெயலலிதா பேசினார்.​ அப்போது நடைபெற்ற விவாதம்:​​ஜெயலலிதா: ​​ ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பிரதான எதிர்க் கட்சியான ​ அதிமுகவின் சார்பில் எனது கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.​ நான் பேசி முடித்ததும் முதல்வர் பதிலளிக்க இருக்கிறார்.​ ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதல்வர் பதிலளிக்கும் விதத்தில் நம்பிக்கை இருந்தால் எனது பேச்சில் குறுக்கிட மாட்டர்கள்.அமைச்சர் துரைமுருகன்:​​ அதிமுக ஆட்சிக் காலத்தில் நாங்கள் பேசும்போது அதிமுக அமைச்சர்கள் குறுக்கிடாமல் இருந்தார்களா?​ அப்போது உங்களுக்கு ​(ஜெயலலிதா)​ திறமை இல்லை என்று பொருளா?​​ஜெயலலிதா:​​ யாருக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை மக்கள் நன்கறிவார்கள்.​ எனவே துரைமுருகன் போன்றவர்கள் எனக்கு சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை.இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு முதல்வரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.​ எனது ஆட்சியில் துவக்கப்பட்ட உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்கு,​​ முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் என்றே பெயர் சூட்டப்பட்டது.​ முதல்வர்கள் வருவார்கள்.​ போவார்கள்.​ ஆனால்,​​ மக்கள் பணத்தைக் கொண்டு தொடங்கப்படும் திட்டத்துக்கு முதல்வரின் பெயரை வைக்கலாமா?​​அமைச்சர் க.​ பொன்முடி:​​ அதிமுக ஆட்சியில் ஜெ.ஜெ.​ போக்குவரத்துக் கழகம்,​​ சந்தியா போக்குவரத்துக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டது.​ திரைப்பட நகரத்துக்கு எம்.ஜி.ஆர்.​ பெயரை மாற்றிவிட்டு உங்கள் பெயரை வைக்கவில்லையா?(அமைச்சர் குறுக்கிடும் போது அதிமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.​ எதிர்க்கட்சித் தலைவரை பேச விடக் கோரினர்.)​​ஜெயலலிதா:​​ அமைச்சர் பொன்முடி உண்மைக்கு மாறான தகவல்களை அவைக்கு தந்துள்ளார்.பொன்முடி: ​​ நான் கூறியது தவறு எனில் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.​ நீங்கள் ​(ஜெயலலிதா)​ கூறியது தவறு என்றால் அதற்கு பொறுப்பேற்று அரசியலை விட்டு விலகத் தயாரா?​ ​ஜெயலலிதா:​ அதிமுக ஆட்சிக் காலத்தில் எனது தாயாரின் பெயரில் எந்தத் திட்டமும் தொடங்கப்படவில்லை.​ திரைப்பட நகரத்துக்கு எம்.ஜி.ஆர்.​ பெயரை மாற்றிவிட்டு எனது பெயரை சூட்டியதாக பொன்முடி குற்றம்சாட்டினார்.​ அதிமுக ஆட்சியில்தான் திரைப்பட நகரம் உருவாக்கப்பட்டது.​ தவறு இருந்தால் பொறுப்பேற்பதாகக் கூறிய பொன்முடி அரசியலை விட்டு விலக வேண்டும்.அமைச்சர் பரிதி இளம்வழுதி:​​ தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்துக்கும் தன்னைத் தானே வேந்தர் என்று அறிவித்துக் கொண்டவர்தான் ஜெயலலிதா.ஜெயலலிதா:​​ உண்மைக்கு மாறான கற்பனையான குற்றச்சாட்டை பரிதிஇளம் வழுதி சுமத்தியுள்ளார்.​ எந்தப் பல்கலைக்கழகத்துக்கும் என்னை வேந்தர் என்று அறிவித்துக் கொள்ளவில்லை.​ பதவியில் இருக்கும் முதல்வரின் பெயரை அரசின் திட்டங்களுக்கு வைக்கக் கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்'' என்றார் ஜெயலலிதா.
கருத்துக்கள்

முதலில் தொகுதி நிதி மேற்கொள்ளும் திட்டங்களுக்கு அந்தத் தொகுதி உறுப்பினர் பெயரைப் பெரிய எழுத்தில் குறிப்பிட்டு ஏதோ அவர்களின் சொந்தப் பணத்தில் மேற்கொள்ளப்பட்டது போன்ற மாயையை ஏற்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
1/12/2010 3:26:00 AM

ஒரு ஊரில் இரண்டு திருடர்கள் போட்டி போட்டு கொள்ளை அடித்து வந்தார்கள். மக்கள் அவர்களை பிடிக்க நினைத்து எப்போதும் தோற்று கொண்டு இருந்தார்கள் திருடர்கள் பலே கில்லாடிகள். அவர்கள் இன்றுவரை தப்பித்து வருவற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. " ஒரு திருடன் திருடினால் அடுத்தவன் காவல் காக்க வேண்டும் போலீஸ் உட்பட". "ஊடகங்கள், சினிமாக்கள் நிறுவி மக்களின் திருடன் பிடிக்கும் திறனை, அறிவை மழுங்க செய்". "அப்படியே திருடிகிற வேளையில் மாட்ட நேர்ந்தாலும், தன்னை பிடித்த மக்களிடம் மட்டும் பணத்தை பிரித்து கொடு "

By mariaraj
1/12/2010 3:24:00 AM

Makalal therivu seiyapatta oru muthalvar thanathu peyaril entha oru thitathayum kondu varuvathu mikavum keliana oru seithi.Makalin varippanathil uruvakkappadum thittamum pothuvana oru uthavi thittam entruthan vaika vendum.Entha oru thalaivanum thanthu peyarai thaney vaithu kolvathu thamilnatil mattum thalai bvirithu aadukirathu. unmaiyan

By unmaiyan
1/12/2010 3:12:00 AM

Makalal therivu seiyapatta oru muthalvar thanathu peyaril entha oru thitathayum kondu varuvathu mikavum keliana oru seithi.Makalin varippanathil uruvakkappadum thittamum pothuvana oru uthavi thittam entruthan vaika vendum.Entha oru thalaivanum thanthu peyarai thaney vaithu kolvathu thamilnatil mattum thalai bvirithu aadukirathu. unmaiyan

By unmaiyan
1/12/2010 3:12:00 AM

THE RULING PARTY SHOULD REPLY THE QUESTIONS BY THE OPPONENT LEADER WITH RESPONSIBILITY.INSTEAD OF REPLYING COUNTER ACCUSING ABOUT HER MISTAKE IS NOT A RESPONSIBLE REPLY.ONE MISTAKE IS NOT AN EXCUSE FOR ANOTHER MISTAKES.BOTH HAVE DONE MISTAKES DURING THEIR TENURE.BUT THE REPLY HAS TO COME TO THE PEOPLE.NOW JAYALALITHA POSED SEVERAL QUESTIONS.BUT NO PROPER ANSWERS FROM THE RULERS UPTO NOW EXCEPT COUNTER ACCUSATIONS.EXCEPT SOME IDIOTS IN THE STATE PEOPLE ARE WATCHING KARUNANITHI HOW HE IS FOOLING THE PEOPLE BY WASTING THE STATE FUNDS IN THE NAME OF FREEGIVINGS.HOW LONG THEY ARE GOING TO HIDE THIS.

By TAMILNADU
1/12/2010 2:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக