வெள்ளி, 15 ஜனவரி, 2010

இலங்கைக்கான நிதியுதவியை நிறுத்துவதில் பயமிருக்கக் கூடாது - பேற்றன்

14 January, 2010 by admin

சர்வதேச சிக்கல் ஆய்வுக் குழுவின் துணைத்தலைவரான கிறிஸ் பேற்றன் நியூ யோர்க் ரைம்ஸில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் குறித்து எழுதியுள்ள கட்டுரையில், போர்க்குற்றவாளிகளான இருவர்களில் ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யவேண்டிய கட்டாயத்தில் இலங்கையர்கள் உள்ளனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா இருவருமே பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து இரத்த ஆறு ஓடவிட்டவர்கள். ஒருவர் செய்யச்சொன்னவர், இன்னொருவர் செய்து முடித்தவர். ஆனால் இப்போது ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி பகிரங்கமாகவே போர்க்குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றனர் எனக் கூறியுள்ளார் பேற்றன்.

இவர்களில் யார்தான் தேர்தலில் வெற்றிபெற்றாலும், மீண்டும் ஒரு வன்முறை வளருவதற்கு இடம் கொடுக்காதவகையில் வெளி உலகம் செயற்படவேண்டும். இலங்கையின் அடிப்படையான பிரச்சனைகள் திட்டவட்டமான முறையில் தீர்க்கப்பட சர்வதேச சமூகம் தன்னிடம் உள்ள அனைத்து திறனையும் இலங்கைமீது பிரயோகிக்க வேண்டும்.

இலங்கைக்கு அளிக்கப்படும் நிதியுதவிகள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கெனவே வழங்கப்படுகின்றன. எனவே இலங்கை அந்நிதியை தகுந்த முறையில் பயன்படுத்துகிறதா என்பதை அறியும்வரை மேலதிக நிதி எதுவுமே சர்வதேசத்தால் வழங்கப்படக்கூடாது. சுருக்கமாகச் சொன்னால் இலங்கை தனது வாக்குறுதிகளை மீறும் பட்சத்தில் அதற்கான நிதியுதவிகளை நிறுத்துவதில் உதவி வழங்கும் நாடுகளுக்கும், சர்வதேச நிறுவனங்களுக்கும் ஒருவித பயமுமே இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேற்றன் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சராகவும், பிரித்தானிய அரசாங்கத்தின் ஹொங் கொங் ஆளுனராகவும், பிரித்தானிய அரச அமைச்சராகவும், பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக வேந்தராகவும் முன்னர் பணியாற்றியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 4577Posted By : தமிழ் on 14 January, 2010
Comments : அருமை அதை விடவும் பெறுமை
தமிழனாக பிறந்ததுக்கு தமிழின துரோகிகளான திருமாளவன்,கர­ுணா,கருணாநிதி­,­ ஜெகத்கெஸ்பர், இளங்கோவன், போன்றோர் தமிழர்களாள் கொள்ளப்பட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக