வெள்ளி, 11 டிசம்பர், 2009

ஆங்​கில வழி கல்​விக்கு ஆத​ர​வாக செயல்​ப​டும் தமி​ழக அரசு​: ராம​தாஸ் குற்​றச்​சாட்டு



சென்னை, ​​ டிச.​ 10:​ சமச்​சீர் கல்வி முறையை அமல்​ப​டுத்​து​வ​தற்​கான தமி​ழக அர​சின் நட​வ​டிக்​கை​கள் ஆங்​கில வழி கல்​விக்கு அதிக முக்​கி​யத்​து​வம் தரு​வ​தாக உள்​ளன என்று பா.ம.க.​ நிறு​வ​னர் ராம​தாஸ் குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார்.​இது குறித்து அவர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட அறிக்கை:​அ ​னைத்து குழந்​தை​க​ளும் ஒரே வித​மான கல்வி முறை​யில் பயில வேண்​டும் என்ற நோக்​கி​லான சமச்​சீர் கல்வி முறையை அமல்​ப​டுத்த,​​ தமி​ழக அரசு சில நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டுள்​ளது.​ ஆனால் கல்​வியை தனி​யார் மயம்,​​ வணிக மய​மாக்​கும் ஆங்​கில வழி​யி​லான கல்​விக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் வகை​யில்,​​ அர​சின் நட​வ​டிக்​கை​கள் அமைந்​துள்​ளன.​பெ​ரும்​பா​லான மாண​வர்​கள் மாநில அர​சின் பாடத்​திட்​டத்​தின் கீழ்,​​ தமிழ் வழிக் கல்வி பயின்று வரு​கி​றார்​கள்.​ இதில் நான்​கில் ஒரு பகு​திக்​கும் குறை​வா​ன​வர்​களே ஆங்​கில வழி கல்வி நிலை​யங்​க​ளில் படிக்​கின்​ற​னர்.​ வசதி படைத்​த​வர்​கள்,​​ சமு​தா​யத்​தில் மேல்​தட்​டில் இருப்​ப​வர்​க​ளின் குழந்​தை​கள்​தான் ஆங்​கில வழி,​​ கட்​ட​ணப் பள்​ளி​க​ளில் படிக்​கின்​ற​னர்.​அ​னை​வ​ ருக்​கும் சம​மான,​​ தர​மான கல்​வியை வழங்​கும் சமச்​சீர் கல்​வியை நடை​மு​றைப்​ப​டுத்​து​கி​றோம் என்று அரசு அறி​வித்​தது.​ ஆனால் மிகக் குறைந்த எண்​ணிக்​கை​யி​லான மாண​வர்​க​ளுக்கு பயன்​பட்டு வரும் கட்​ட​ணப் பள்​ளி​க​ளும்,​​ ஆங்​கில பயிற்று மொழி​யும் தொடர்ந்து நீடிக்​கும் என்று அறி​வித்​தி​ருப்​பது சமூக நீதிக்கு எதி​ரா​னது.​ அர​சி​யல் சட்​டத்​திற்​கும் எதி​ரா​னது.​ 6 முதல் 14 வயது வரை​யி​லான எல்லா குழந்​தை​க​ளுக்​கும் கட்​டாய,​​ இல​வச கல்வி அளிக்க வேண்​டும் என்​பது சட்​டம்.​ ஆனால்,​​ ஆங்​கில வழி​யி​லான கட்​ட​ணப் பள்​ளி​கள் நீடித்து வரும் நிலை​யில்,​​ அனை​வ​ருக்​கும் இல​வ​சக் கல்வி என்​பது எவ்​வாறு சாத்​தி​ய​மா​கும்?​ஆங்​கில வழிக் கல்​விக்கு ஆத​ர​வான கருத்​து​களை முதல்​வர் கரு​ணா​நி​தி​யும் தெரி​வித்​துள்​ளார்.​ இது வேதனை அளிப்​ப​தாக உள்​ளது.​அண் ​ணா​வின் இரு​மொ​ழிக் கொள்​கையே எங்​க​ளது கொள்கை என்று அறி​வித்​துள்ள கரு​ணா​நிதி,​​ இரு​மொ​ழிக் கொள்​கை​யில் இடம்​பெ​றாத ஒரு கருத்து திணிப்​பை​யும் வெளி​யிட்​டி​ருக்​கி​றார்.​தாய் மொழி​யில் மட்​டும் சமச்​சீர் கல்​வியை கொண்டு வரு​வ​தன் மூலம் எந்த அள​வுக்கு பயன்​பெற முடி​யும் என்​பதை சிந்​தித்து முடி​வெ​டுக்க வேண்​டும் என்று கரு​ணா​நிதி கூறி​யி​ருக்​கி​றார்.​இ​தன் மூலம் ஆங்​கில வழி​யில் கல்வி கற்​றால்​தான் வேலை கிடைக்​கும்;​ போட்டி தேர்​வு​க​ளில் வெற்றி பெற முடி​யும் என்று கட்​ட​ணப் பள்​ளி​கள் நடத்​து​வோர் செய்​யும் பொய் பிர​சா​ரத்​துக்கு முதல்​வர் கரு​ணா​நிதி வலிமை சேர்த்​தி​ருக்​கி​றார்.​ஆங் ​கில வழி பயிற்று மொழி என்​பது இடை​யில் வந்​தது.​ அதற்கு முன்பு தமிழ் வழிப் பள்​ளி​க​ளி​லேயே பெரும்​பா​லா​னோர் படித்​த​னர்.​ அவர்​கள் அறி​ஞர்​க​ளாக,​​ மேதை​க​ளாக,​​ அரசு உயர் அதி​கா​ரி​க​ளாக,​​ மருத்​து​வர்​க​ளாக,​​ விஞ்​ஞா​னி​க​ளாக,​​ சிறந்த நிர்​வா​கி​க​ளாக உயர்ந்​தி​ருக்​கி​றார்​கள்.​எ​னவே,​​ ஆங்​கில வழிக் கல்​வியை கற்​றால்​தான் பயன்​பெற முடி​யும் என்​ப​தெல்​லாம் வெறும் மாயை.​ இந்த மாய வலை​யில் தமி​ழக அரசு சிக்​கி​வி​டக் கூடாது.​த​மிழ் செம்​மொழி மாநாடு நடத்த இருக்​கும் இந்த தரு​ணத்​தில்,​​ தமி​ழக பள்​ளி​கள் அனைத்​தி​லும் தமிழே பயிற்று மொழி என்ற அறி​விப்​பினை முதல்​வர் கரு​ணா​நிதி வெளி​யிட வேண்​டும்.​ இதன் மூலம் நமது கல்வி முறை​யில் இப்​போ​துள்ள ஏற்​றத்​தாழ்வை போக்கி,​​ சமூக நீதியை நிலை​நி​றுத்த முன்​வர வேண்​டும் என ராம​தாஸ் வலி​யு​றுத்​தி​யுள்​ளார்.
கருத்துக்கள்

பா.ம.க., தனது சாதிப் போராட்டங்களை நிறுததி விட்டுத் தமிழ் வழிக் கல்வியை மக்களிடமும் அரசிடமும் வலியுறுத்தும் வகையில் முனைப்பான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்த பொழுது தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்திய தி.மு.க. வும் இதற்கு எதிரான போக்கை நிறுத்தி விட்டு வரும் கல்வியாண்டு முதல் தமிழ் வழிக் கல்வி மட்டுமே நடைமுறையில் இருக்கும் வண்ணம் கல்விக் கொள்கையை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/11/2009 2:33:00 AM

தாய்மொழி வழிக்கல்வியே அறிஞர்கள், அறிவியல் மேதைகள், பிற ஆற்றல் வாய்ந்தவர்களை உருவாக்கும். இதை வலியுறுத்துபவர்கள் குடும்பத்தினர் சிலர் இதற்கு மாறாகப் பிற மொழி வழிக் கல்வியில் படிக்கலாம்.அதன் காரணம் தாய்மொழி வழிக் கல்வியை மதித்து அனைத்துப் பணி வாய்ப்புகளிலும் உயர் கலவி வாய்ப்புகளிலும் அவர்களுக்கு முதன்மை அளிக்காததுதான். எனவே அதைக் காரணம் காட்டிச் சிலர் தாய்மொழி வழிக் கல்விக்கு எதிரான நிலைப்பாட்டை ஆதரிப்பது முறையல்ல.மொழிக் கல்வி என்ற முறையில் சிறப்பான ஆங்கில மொழிக் கல்வியையும் கல்லூரி நிலையில் விரும்பும் மொழிக் கல்வியைப் பெறும் வாய்ப்புகளையும் உருவாக்கித் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தமிழ் நாட்டில் நடைமுறைப் படுத்த வேண்டும். எல்லாருமே தமிழ்வழிக் கல்வி பெறும் சூழலில் உயர்கல்வியில் புறக்கணிப்பு வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு என்னும் சூழல் எழாது. எனவே, பா.ம.க., தனது சாதிப் போராட்டங்களை நிறுததி விட்டுத் தமிழ் வழிக் கல்வியை மக்களிடமும் அரசிடமும் வலியுறுத்தும் வகையில் முனைப்பான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்த பொழுது தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்திய தி.மு.க. வும் இதற்கு எதிரா

By Ilakkuvanar Thiruvalluvan
12/11/2009 2:32:00 AM

Such an idiot. All his grandchildren are learning English and Hindi. Where were his grand children studying when his son was a central minister? Delhi. What is the medium of instruction in Delhi? It should be either Hindi or English not tamil definetly. This guy is the number one idiot, as if he can give job for all tamilians in tamilnadu, Tamilians need not go to any other state or any other country for living.

By Sri
12/11/2009 2:01:00 AM

Such an idiot. All his grandchildren are learning English and Hindi. Where were his grand children studying when his son was a central minister? Delhi. What is the medium of instruction in Delhi? It should be either Hindi or English not tamil definetly. This guy is the number one idiot, as if he can give job for all tamilians in tamilnadu, Tamilians need not go to any other state or any other country for living.

By Sri
12/11/2009 2:01:00 AM

very selfish politician. All his children are studying in english medium.

By sam
12/11/2009 1:29:00 AM

sariyana karuthu

By hari
12/11/2009 1:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக