திங்கள், 7 டிசம்பர், 2009

இலங்​கைத் தமி​ழர்​க​ளுக்கு அதி​காரப் பகிர்வு​ தேவை: வெங்​கைய நாயுடு



சென்னை, ​ டிச. 6:​ இலங்​கை​யில் உள்ள தமி​ழர்​க​ளுக்கு அதி​கா​ரங்​க​ளைப் பகிர்ந்​த​ளிக்க வேண்​டும் என்று பாஜக முன்​னாள் தலை​வ​ரும்,​ மாநி​லங்​க​ளவை உறுப்​பி​ன​ரு​மான வெங்​கைய நாயுடு வலி​யு​றுத்​தி​னார்.÷இது தொடர்​பாக அவர் ஞாயிற்​றுக்​கி​ழமை சென்​னை​யில் நிரு​பர்​க​ளி​டம் கூறி​யது:​த ​மி​ழ​கம் மற்​றும் அதன் அண்டை மாநில மக்​கள்,​ இலங்​கைத் தமி​ழர்​க​ளின் நிலை​யைப் பார்த்​தும்,​ இந்​திய அர​சின் அணு​கு​மு​றை​யைப் பார்த்​தும்,​ வெளி​யில் சொல்ல முடி​யாத அள​வுக்கு கோப​மும்,​ வருத்​த​மும் அடைந்​துள்​ள​னர்.÷ம​று​வாழ்வு என்ற பெய​ரில்,​ தமி​ழர்​கள் ஒரு முகா​மில் இருந்து வேறொரு முகா​முக்கு மாற்​றப்​ப​டு​கின்​ற​னர்.÷இ ​லங்​கை​யின் ராணு​வத் தள​ப​தி​யாக இருந்த சரத் பொன்​சேகா,​ தான் விருப்ப ஓய்வு பெற்​ற​மைக்கு 16 கார​ணங்​க​ளைக் குறிப்​பிட்​டார். அதில்,​ அங்​குள்ள தமி​ழர் முகாம்​கள் மோச​மாக உள்​ளன என்​றும் குறிப்​பிட்​டுள்​ளார்.÷இதி​லி​ருந்து அங்​குள்ள தமி​ழர்​க​ளின் நிலை​யைத் தெளி​வா​கப் புரிந்து கொள்​ள​லாம்.÷பா ​ஜக தீவி​ர​வா​தத்தை அனு​ம​திக்​க​வில்லை. தமிழ் ஈழம் கோரிக்​கையை பாஜக ஒத்​துக்​கொள்​ள​வில்லை. நிலை​யான,​ அமை​தி​யான இலங்கை உரு​வாக வேண்​டும் என்​பதே எங்​க​ளின் விருப்​பம்.÷இ​லங்​கை​யில் 3 லட்​சம் தமி​ழர்​கள் உள்​ள​னர் என்​பது வெறும் சாதா​ரண எண்​ணிக்கை அல்ல. அவர்​க​ளின் பிள்​ளை​க​ளுக்கு கல்வி,​ வேலை​வாய்ப்பு போன்​றவை ஏற்​ப​டுத்​தப்​பட வேண்​டும்."இந்​திய}​இலங்கை ஒப்​பந்​தம் 1987'}ன் படி,​ இலங்​கை​யில்,​ வடக்கு,​ கிழக்கு பகு​தி​க​ளில் உள்ள தமி​ழர்​கள்,​ முஸ்​லிம்​க​ளுக்கு அதி​கா​ரம் பகிர்ந்​த​ளிக்​கப்​பட வேண்​டும்.விடு​த​லைப் புலி​கள் விஷ​யம் வேண்​டு​மா​னால் முடிந்​தி​ருக்​க​லாம். ஆனால் தமி​ழர் பிரச்னை இன்​னும் முடி​ய​வில்லை. இலங்கை அரசு,​ அங்​குள்ள தமி​ழர்​க​ளுக்கு நல்ல வாழ்க்​கையை அமைத்​துத் தர​வும்,​ அர​சி​யல் தீர்வு காண​வும் விரைந்து செயல்​ப​ட​வில்லை என்​றால்,​ புதிய சவால்​க​ளைச் சந்​திக்க வேண்​டி​யி​ருக்​கும்.மத்​ திய அர​சில் அங்​கம் வகிக்​கும் தமி​ழக முதல்​வர் கரு​ணா​நி​தி​யும்,​ "இலங்​கை​யின் உள் விவ​கா​ரத்​தில் தலை​யி​டு​வது என்​பது அதன் இறை​யாண்​மை​யைப் பாதிக்​கும் என்​றா​லும்,​ இந்த விஷ​யத்​தில் இலங்​கை​யைத் தனி​யாக கருத வேண்​டும்' என்று பிர​த​ம​ருக்கு கடி​தம் எழு​தி​னார். அக்​க​டி​தம் தொடர்​பாக பிர​த​ம​ரி​டம் இருந்து எந்​தப் பதி​லும் இல்லை.÷இ​லங்​கைத் தமி​ழர் பிரச்​னை​யின் முக்​கி​யத்​து​வத்தை மத்​திய அரசு இன்​னும் முழு​மை​யாக உண​ர​வில்லை. இது வேதனை அளிக்​கி​றது. எனவே,​ மத்​திய அரசு அனைத்​துக் கட்சி எம்.பி.க்களை கொண்ட குழுவை இலங்​கைக்கு அனுப்பி,​ அங்​குள்ள உண்மை நில​வ​ரத்தை உறுதி செய்ய வேண்​டும். இந்த விஷ​யம் தொடர்​பாக நாடா​ளு​மன்​றத்​தில் திங்​கள்​கி​ழமை பிரச்னை எழுப்ப உள்​ளோம்.÷பா​பர் மசூதி இடிப்பு தினத்​தில் ரயில் நிலை​யம் உள்​ளிட்ட முக்​கிய இடங்​க​ளில் பாது​காப்பு அளிப்​பதை ஆண்​டு​தோ​றும் சடங்​காக மேற்​கொள்​வது தேவை​யற்​றது. இத​னால் எதை​யும் சாதிக்க முடி​யாது. வீணாக மக்​க​ளுக்கு மன உளைச்​சல்​தான் ஏற்​ப​டும். இந்த சடங்கை மேற்​கொள்​வது இதுவே கடை​சி​யாக இருக்​கட்​டும் என்​றார்.
கருத்துக்கள்

இனி இந்தியா சிங்களத்தைப் பொறுத்த வரை செல்லாக்காசு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் நலனில் கருத்து செலுத்தும் பாசக ஈழத் தமிழ் மக்கள் தங்களைத்தாங்களே ஆளும் அதிகாரம் பெறும் அரசியல் முறையே அவர்களுககான உண்மையான தீர்வு என்பதையும் உணர வேண்டும். கீறல் விழுந்த ஒலிப்பேழை போல் ஒன்றுபட்ட இலங்கை என்னும் பொருளில் திருமபத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தால் அவர்கள் மீது உண்மையான பரிவு இல்லை என்றுதான் பொருளாகும். இப் பொருண்மையில் கொலைகாரக் காங்கிரசை விட பாசக மேல் என மக்கள் எண்ணுவதால் தன்னுடைய நிலையைத்திருத்திக் கொண்டு ஈழத் தமிழர்கள் விரும்புகின்ற தங்களைத் தாங்களே ஆளுகின்ற தமிழ் ஈழ ஆட்சிக்கு ஆதரவாக பாசக குரல் கொடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/7/2009 5:37:00 AM

தமிழர்களைக் கொன்றொழிக்கப் படைக் கருவிகள் , படை ஊர்திகள் வழங்குவதும் திட்டங்கள தீட்டித் தருவதும்தான இந்தியாவின வேலை. அந்த வேலை முடிந்து விட்டது. இனி, அவர்களுக்கு அதிகாரம் வழங்குதல் முதலான அறிவுரைகளை வழங்க இந்தியாவிற்குத் தகுதி யில்லை. அழிப்பு வேலையில் ஈடுபட இடம் அளித்தமையால் இப்பொழுது எங்கள்மேல் ஆதிக்கம் செலுத்த இந்தியா முன்வருமேல் அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டடோம். - இதே போன்று சிங்களத் தலைவர்களும் ஆட்சியாளர்களும் போலித் துறவிகளும் பேசிய பின்பு இனி இந்தியா சிங்களத்தைப் பொறுத்த வரை செல்லாக்காசு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் நலனில் கருத்து செலுத்தும் பாசக ஈழத் தமிழ் மக்கள் தங்களைத்தாங்களே ஆளும் அதிகாரம் பெறும் அரசியல் முறையே அவர்களுககான உண்மையான தீர்வு என்பதையும் உணர வேண்டும். கீறல் விழுந்த ஒலிப்பேழை போல் ஒன்றுபட்ட இலங்கை என்னும் பொருளில் திருமபத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தால் அவர்கள் மீது உண்மையான பரிவு இல்லை என்றுதான் பொருளாகும். இப் பொருண்மையில் கொலைகாரக் காங்கிரசை விட பாசக மேல் என மக்கள் எண்ணுவதால் தன்னுடைய நிலையைத்திருத்திக் கொண்டு ஈழத் தமிழர்கள் விரும்புகின

By Ilakkuvanar Thiruvalluvan
12/7/2009 5:36:00 AM

வாழ்க வெங்​கைய நாயுடு

By sirupakkam-Rajaraman
12/7/2009 4:53:00 AM

Indira Gandi invade East pakistan(bengaladesh). Is it not interferig other country. She knew that Pakistan people bother Bengalies in East pakistan; same way Sinhalese bother Tamils in Srilanka. Because of Sonia, a single woman, Indian mass mudered many thousands of Tamils;also, she send a malayali to UN to stop the war crininal inquary although, Eurpe and America insist for the war crime inquary; A malayali Nabiar flown back and forth and made all Tamils mess.What sonia want from Tamils?மத்​திய அர​சில் அங்​கம் வகிக்​கும் தமி​ழக முதல்​வர் கரு​ணா​நி​தி​யும்,​ "இலங்​கை​யின் உள் விவ​கா​ரத்​தில் தலை​யி​டு​வது என்​பது அதன் இறை​யாண்​மை​யைப் பாதிக்​கும் என்​றா​லும்,​ இந்த விஷ​யத்​தில் இலங்​கை​யைத் தனி​யாக கருத வேண்​டும்' என்று பிர​த​ம​ருக்கு கடி​தம் எழு​தி​னார். அக்​க​டி​தம் தொடர்​பாக பிர​த​ம​ரி​டம் இருந்து எந்​தப் பதி​லும் இல்லை

By Ravikumar
12/7/2009 3:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக