வெள்ளி, 11 டிசம்பர், 2009

ந்​தி​ரத்​தில் புதிய சிக்​கல்: 105 எம்.எல்.ஏ.க்கள் ராஜி​நாமா



மத்​திய அர​சின் உறு​தி​மொ​ழியை அடுத்து தனி தெலங்​கானா கோரி 11 நாள்​க​ளாக மேற்​கொண்​டி​ருந்த உண்​ணா​வி​ர​தத்தை தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி தலை​வர் சந்​
ஹைத ​ரா​பாத்,​​ டிச.​ 10: தனி தெலங்​கானா அமைக்க மத்​திய அரசு நட​வ​டிக்கை எடுப்​பதை எதிர்த்து ஆந்​தி​ரத்​தில் 105 எம்.எல்.ஏ.க்கள் மற்​றும் ஒரு எம்.பி.​ தங்​கள் பத​வியை ராஜி​நாமா செய்​துள்​ள​னர்.​இ​த​னால் ஆந்​திர மாநி​லத்​தில் புதிய சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது.​ ராஜி​நாமா செய்​துள்ள எம்​எல்​ஏக்​கள் அனை​வ​ரும் கட​லோர ஆந்​தி​ரம் மற்​றும் ராய​ல​சீமா பகு​தி​யைச் சேர்ந்த காங்​கி​ரஸ்,​​ தெலுங்​கு​தே​சம் மற்​றும் பிரஜா ராஜ்​ஜி​யம் கட்​சி​யைச் சேர்ந்​த​வர்​கள்.​எம்​எல்​ஏக்​கள் தங்​கள் ராஜி​நாமா கடி​தத்தை ஆந்​திர சட்​டப் பேர​வைத் தலை​வர் கிரண் குமார் ரெட்​டிக்கு அனுப்பி வைத்​துள்​ள​னர்.​ அவர்​க​ளின் ராஜி​நாமா ஏற்​றுக் கொள்​ளப்​பட்டு விட்​டதா என்​பது குறித்த தக​வல் இது​வரை வெளி​யா​க​வில்லை.​வி​ஜ​ய​வாடா தொகுதி எம்.பி.​ லக​ட​பதி ராஜ​கோ​பாஜ்ல் தனது ராஜி​நாமா கடி​தத்தை மக்​க​ள​வைத் தலை​வர் மீரா குமா​ரி​டம் அளித்​துள்​ளார்.​ராஜி​நாமா செய்த எம்​எல்​ஏக்​க​ளில் 52 பேர் காங்​கி​ர​ûஸச் சேர்ந்​த​வர்​கள்,​​ 42 பேர் தெலுங்கு தேசம்,​​ 11 பேர் பிரஜா ராஜ்​யம் கட்​சி​யைச் சேர்ந்​த​வர்​கள்.​ ​இ​து​த​விர ஆந்​தி​ரத்​தைச் சேர்ந்த மேலும் பல எம்.பி.க்கள் தங்​கள் பத​வியை ராஜி​நாமா செய்ய முடி​வெ​டுத்​துள்​ள​தா​கத் தெரி​கி​றது.​ தெலங்​கானா அமைப்​பது தொடர்​பாக காங்​கி​ரஸ் தலை​வர் சோனியா காந்தி தில்​லி​யில் ஆந்​திர எம்.பி.க்கள் கூட்​டத்தை நடத்த இருக்​கி​றார்.​ இதில் தங்​கள் எதிர்ப்​பைத் தெரி​விக்​க​வும் எம்.பி.க்கள் முடிவு செய்​துள்​ள​னர்.​ஆந் ​தி​ரத்தை பிரிக்​கும் முடி​வுக்கு காங்​கி​ரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ள​னர்.​ இது ஒரு​த​லைப் பட்​ச​மான முடிவு.​ எங்​க​ளுக்கு இது பெரும் மன வருத்​தத்தை அளிக்​கி​றது.​ மாநி​லத்​தில் பல்​வேறு பகுதி மக்​க​ளும் தலை​ந​கர் ஹைத​ரா​பா​தில் பிழைப்​புக்​காக வந்​துள்​ள​னர் மாநி​லத்தை இரு துண்​டு​க​ளாக்​கி​னால் அவர்​க​ளின் நிலை பரி​தா​ப​மா​கி​வி​டும் என்று கிருஷ்ணா மாவட்​டத்​தைச் சேர்ந்த காங்​கி​ரஸ் எம்​எல்ஏ பி.​ வெங்​கட்​ரா​மையா கூறி​யுள்​ளார்.​ தெலங்​கா​னா​வில் தலை​ந​கர் ஹைத​ரா​பாத்​தைச் சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது.​மருத்​து​வ​ம​னை​யில் தொடர்ந்து சிகிச்சைஉண் ​ணா​வி​ர​தத்தை கைவிட்ட நிலை​யி​லும் சந்​தி​ர​சே​கர ராவ் இன்​னும் 3 நாள்​கள் வரை மருத்​து​வ​ம​னை​யில் தங்கி சிகிச்சை பெற வேண்​டும் என்று டாக்​டர்​கள் கூறி​யுள்​ள​னர்.​பாக்​டீ​ரியா நோய்​தொற்​றால் அவர் பாதிக்​கப்​பட்​டுள்​ளார்.​ இதற்​காக தற்​போது சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கி​றது.​÷முன் ​ன​தாக தனி தெலங்​கானா மாநி​லம் கோரி சாகும்​வரை உண்​ணா​வி​ர​தம் மேற்​கொண்​டி​ருந்த தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமீதி தலை​வர் சந்​தி​ர​சே​கர ராவ் 11 நாள்​க​ளுக்​குப் பின் புதன்​கி​ழமை இரவு தனது உண்​ணா​வி​ர​தத்தை கைவிட்​டார்.​எ​னி​னும் அவர் தொடர்ந்து ஹைத​ரா​பாத் நிஜாம் மருத்​துவ அறி​வி​யல் கழக மருத்​து​வ​ம​னை​யி​லேயே தங்க வைக்​கப்​பட்​டுள்​ளார்.​ அவ​சர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டி​ருந்த அவர் இப்​போது தனி அறைக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார்.​தற்​போது சந்​தி​ர​சே​கர ராவ்,​​ இள​நீர்,​​ பால் போன்ற திரவ உண​வு​க​ளைச் சாப்​பிட்டு வரு​கி​றார்.​ அவ​ரது உடல் எடை 8 கிலோ குறைந்​துள்​ளது.​ இத​யத் துடிப்பு,​​ ரத்த அழுத்​தம் ஆகி​யவை சீராக உள்​ளது.​ 3 நாள்​க​ளில் அவர் வீடு திரும்​பு​வார் என்று டாக்​டர்​கள் கூறி​யுள்​ள​னர்.​சோனியா காந்திதனி தெலங்​கானா குறித்து இறுதி முடி​வுக்கு வரும் முன்பு தெலங்​கானா பகு​தி​யைச் சேராத எம்.பி.க்க​ளு​டன் ஆலோ​சனை நடத்தி அவர்​க​ளது கோரிக்​கை​க​ளும் பரிசீ​லிக்​கப்​ப​டும்.பிர​ணாப் முகர்ஜிதெ​லங்​கானா அமைப்​ப​தற்​கான அனைத்து நடைமுறைகளும் முழுமை யாக பின்பற்றப்படும்.ப. சிதம்பரம்தெலங்​கானா மாநி​லம் அமைப்​பது குறித்​துப் பேச தில்லி வரு​மாறு ராவுக்கு அழைப்புசந்​தி​ர​பாபு நாயுடு குற்​றச்​சாட்டுதெலங் ​கானா அமைக்​கும் முடிவை எடுத்த​தற்​காக மத்​திய அர​சை​யும்,​​ சோனியா காந்​தி​யை​யும் தெலுங்கு தேசம் தலை​வர் சந்​தி​ர​பாபு நாயுடு கடு​மை​யா​கக் குறை கூறி​யுள்​ளார்.​ எ​திர்க்​கட்​சி​கள் மற்​றும் மாநி​லத்​தின் பிற பிரி​வி​ன​ரின் ஆலோ​ச​னை​யைப் பெறா​மல் இத்​தகைய முடிவு எடுத்​தது மிக​வும் தவ​றா​னது.​ மாநி​லத்​தைப் பிரிப்​ப​தால் பாதிக்​கப்​ப​டும் மக்​களை ஆலோ​சிக்​கா​மால் காங்​கி​ரஸ் தன்​னிச்​சை​யாக முடிவு எடுத்​துள்​ளது கண்​டிக்​கத்​தக்​கது.​ மக்​க​ளின் உணர்​வு​க​ளைப் புரிந்து கொள்​ளா​மல் காங்​கி​ரஸ் செயல்​ப​டு​கி​றது என்று அவர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.எம்.பி.​ ராஜி​நாமாகாங் ​கி​ர​ûஸச் சேர்ந்த மற்​றொரு எம்.பி.​ அனந்த வெங்​கட்​ராமி ரெட்​டி​யும் தெலங்​கானா பிரி​வி​னைக்கு எதிர்ப்​புத் தெரி​வித்து பத​வியை ராஜி​நாமா செய்​யப்​போ​வ​தாக அறி​வித்​துள்​ளார்.​த​னது ராஜி​நாமா கடி​தத்தை தெலுங்கு தேசம் தலை​வர் சந்​தி​ர​பாபு நாயு​டு​வுக்கு அனுப்பி வைத்​துள்​ள​தாக தெலுங்கு தேசம் மாநி​லங்​க​ளவை உறுப்​பி​னர் எம்.வி.​ எம். ரெட்டி கூறி​யுள்​ளார்.​
கருத்துக்கள்

காங்கிரசின் வஞ்ச நாடகமே இவற்றிற்கான காரணம். என்றாலும் தமிழகக் காங்கிரசார் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். சரியோ தவறோ மாநிலத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய காங்கிரசு எடுக்கும்பொழுது துணிந்து எதிர்க்கும் ஆந்திரக் காங்கிரசின் துணிவைப் பெற்று அடிமைப் புத்தியை அகற்ற வேண்டூம். தமிழகக் காங்கிரசின் அடிமைப் போக்கால்தான் தமிழகப் பகுதிகள் ஆந்திர, கருநாடக, கேரள மாநிலங்களில் சேர்க்கப்பட்டது என்பதையும் பல்வேறு வகைகளில் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதையும் எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத் தமிழர் படுகொலைகள் நடந்து வருவதையும் உணர்ந்து தமிழ் இனத்திற்காகவும் தமிழ் நாட்டிற்காகவும் குரல் கொடுக்கும துணிவைப் பெற வேண்டும். எதிரிகளின் கால்களை நக்கி வாழ்வதும் ஒரு பிறப்பா என்பதை உணர வேண்டும். தமிழகக் காங்கிரசாரே விழித்து எழுவீர்! உணர்வு பெறுவீர்! தமிழ் மானம் காப்பீர்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/11/2009 3:14:00 AM

Beware!!!! Kaduvetti Ramadoss is awaiting to separate Tamilnadu..

By Vannian
12/11/2009 2:37:00 AM

தூக்குங்க அய்யா கருணாநிதிய, உண்ணாவிரதம் இருக்க வச்சு தனி தமிழ்நாடு கேட்போம்.. கருணாநிதி செத்த மாதிரியும் ஆச்சு, தனி தமிழ்நாடு வாங்கின மாதிரியும் ஆச்சு..இந்த இந்தியா கூட இருந்து நம் சகோதர்களை இழந்ததும் போதும்...மானம் போனதும் போதும்...

By sree
12/11/2009 1:50:00 AM

THis sonia is Indian divider , this is first thing she started. Well done. This is what Sri Lankan Tamils advised several times . Now you can feel that pain. As we Sri Lankan happy about it. including P Sithamparam also

By zoyza
12/11/2009 1:45:00 AM

This is unwanted thing doing by Cogress government. These politicians are threatening India and government. Let them die. They didn't do anything for India. Tomorrow each politician will demand seperately for their religion, community. Will our Indian government will allow?. We lost more to our neighbour. Our Congress government did lot of mistake without thinking future of the India. Eg: Jammu & Kashmir, Himachal Pradesh, Katch Islands.will act. He is following the potti Sri Ramalu style. He divided the unity of South India. Now he is dividing the unity of Telugu people as well as Indian patriotism. Before dividing Indian government has to give some tasks like solving global warming issue, India and pakistan peace, solution for the border issue between china and India. Every Indian, will accept, if these politicians proved success in these assignments, they can raise like these demands. He is taking the today younger generation into wrong direction. He is removing the patriotism

By Indian
12/11/2009 1:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக