முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பணிகளை பார்வையிட இலங்கைக்கு மீண்டும் பார்லிமென்ட் எம்.பி.,க்கள் குழு அனுப்பப்படும் என்று, மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்திருப்பதைப் பற்றி?
கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்த சுஷ்மா சுவராஜ் தமிழிலே பார்லிமென்டில் பேசும் போது, "தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த இந்தியா வழங்கும் நிதி உரிய முறையில் செலவு செய்யப்படுகிறதா என்பதை அறிய என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்று கேட்டிருக்கிறார்.
கிருஷ்ணா பேசும் போது "தமிழர்களை சொந்த இடத்தில் குடியமர்த்த இன்னும் கூடுதல் நிதி உதவி செய்யவும் இந்தியா தயாராக உள்ளது. ஏற்கனவே இந்தப் பணிக்காக இந்தியா 500 கோடி ரூபாய் ஒதுக்கியது. கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக மேலும் மூன்று குழுவை இந்தியா அனுப்பவுள்ளது என்றும் சொல்லியிருக்கிறார். அவர் இப்படிப்பட்ட கருத்துக்களை சொல்லியிருப்பது, உள்ளபடியே நமக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருகிற செய்தி.
காகிதப்பூ மணக்காது ; காங்.சோசலிசம் இனிக்காது என்ற கலைஞர் காங். தலைவர்களின் வெற்றிக்கைகளுக்கெல்லாம் மன நிறைவும் மட்டற்ற மகிழ்ச்சியும் அடைகிறாரே! வதை முகாம்களில் உள்ள தமிழர்களை வெளியேற்றா விட்டால் இந்தியப் படை உள்ளே நுழையும் என்று இந்தியா சொல்லாதுதான். ஏனெனில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தியதே இந்தியாதான் என்று சிங்கள அரசே சொல்லி விட்டது. அதற்குக் காங். அரசும் அமைதியாய் இருந்து ஒத்துக் கொண்டது. என்றாலும் தன் கட்சிக் குழுவின் அறிக்கை அடிப்படையில் எடுத்த நடவடிக்கை விவரத்தையாவது கேட்கலாம் அல்லவா? காங்.கின் ஊதுகுழலாக முத்தமிழறிஞர் மாறியுள்ளது தமிழர்களுக்குத் தலைகுனிவு மட்டுமல்ல; தமிழின மீட்சிக்கும் தடை கல்லாகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக