சென்னை, டிச.9: ""ஆதிக்க உணர்வுடன் எளியோர் வதைக்கப்படுவதைத் தடுத்து மனித உரிமைகளைக் காப்போம்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
உலக மனித உரிமை தினம் வியாழக்கிழமை (டிச.10)கொண்டாடப்பட்டது. அதனையொட்டி முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
மண்ணின் மைந்தர்கள் அனைவரும் அறவழியில் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் வாழ உரிமை உண்டு. அதனைத் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை உணர்த்திடும் நோக்கில் ஆண்டுதோறும் டிசம்பர் 10}ம் தேதி உலக மனித உரிமை நாள் கடைபிடிக்கப்படுகிறது.
கை ரிக்ஷா ஒழிப்பு, மனித மலத்தை மனிதனே சுமக்கும் கொடுமையிலிருந்து அருந்ததியர் சமுதாயம் விடுதலை பெற அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாற்று திட்டங்களை அளித்தது என்று மனித உரிமைகளை நிலைநாட்டிட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
அதன் அடிப்படையில்தான் 1996}ல் மாநில மனித உரிமைகள் ஆணையத்தை அமைத்தோம். இந்த ஆணையம் ஊனமுற்றோர், மலைவாழ் மக்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள் போன்ற நலிந்த பிரிவினரின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பெற்று சுதந்திரம், சமத்துவம், கண்ணியத்துடன் ஒவ்வொருவரும் வாழ உதவிடுவோம். ஆதிக்க உணர்வோடு எளியோரை வதைப்பதைத் தடுப்போம், மனித உரிமைகளைக் காப்போம் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
''மண்ணின் மைந்தர்கள் அனைவரும் அறவழியில் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் வாழ உரிமை உண்டு. அதனைத் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம.'' ஆனால் தமிழ் மண்ணின் மைந்தர்கள் வாழ்வதுதான் குற்றம். எனவே. அவர்களுக்கு வாழும் உரிமை பிடுங்கப்படும்.''ஆதிக்க உணர்வோடு எளியோரை வதைப்பதைத் தடுப்போம், மனித உரிமைகளைக் காப்போம்''ஆனால் ஈழத் தமிழர்கள் வதைபடுவதற்குச் சிங்கள அரசிற்கும் காங்கிரசு அரசிற்கும் உதவுவோம்.அம்மனிதர்களின் உரிமைகளைக் காப்பவர்களை அழிப்போம். காங்கிரசின் தமிழின அழிப்புக் கொளகையே எம் கொள்கை. எனவே, மொட்டைத் தலைக்கும முழங்காலிற்கும் முடிச்சுப் போடாமல் அரசியல் கொடுங்கோலர்கள் '' சுதந்திரம், சமத்துவம்,கண்ணியத்துடன் வாழ'' உதவிடுங்கள்.
வேதனையுடன் இலக்குவனார திருவள்ளுவன்
12/10/2009 2:31:00 AM