ஞாயிறு, 6 டிசம்பர், 2009

சிதம்பரம் கோயிலின் தெற்கு வாயிலை திறக்க கோரிக்கை: தீட்சிதர் கண்டனம்



சிதம்பரம், டிச.5: சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் தெற்கு வாயிலை திறக்க கோருவதற்கு உ.ர. உமாநாத தீட்சிதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தெய்வபக்தி இல்லாதவர்கள் அடைக்கப்பட்டுள்ள நடராஜர் திருக்கோயில் தெற்கு வாயிலை நந்தனார் வந்த வழியென்று அடைத்திருக்கும் வாயிலை திறக்க வேண்டும் என ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நந்தனார் தெற்குகோபுரத்தை தரிசனம் செய்து கொண்டே இறைவனோடு ஐக்கியமானார் என புராண வரலாறு கூறுகிறது. இருப்பினும், இதை தமிழ் ஆர்வலர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப் போவார் (நந்தனார்) மூலவர், உற்சவவருக்கு பூஜை செய்து வழிபட்டு வரும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என அந்த அறிக்கையில் உ.ர. உமாநாத தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

தமிழ்நாட்டு மக்களால் தமிழ்நாட்டு மக்களின் செல்வத்திலும உழைப்பிலும் கட்டப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் இறைவனுக்குரிய கோயிலில் இருந்து ஆண்டாண்டு காலமாக ஏய்த்துப் பிழைத்து வரும் தீட்சிதர்கள் அனைவரையும் அப்புறப்படுத்த வேண்டும். அதுவே இறைவன் மக்களை அணுகுவதற்கு வழியாகும். தன்னைத் தமிழில் பாட வேண்டும் என்ற இறைவனின் விருப்பத்திற்கு மாறாகத் தமிழ்நாட்டு வழிபாட்டு முறை உள்ளதால் இறையருள் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, தமிழக மக்களின் கோயில்களில் தமிழர்களைக் கொண்டே தமிழ் வழிபாடு நடத்துவதே இறையருள் கிடைக்க வழியாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும். தீட்சிதர்களுக்கும் தமிழரல்லாத பிற பூசாரிகளுக்கும் மறுவாழ்வு முகாம்கள் அமைத்து வேறு வேலைக்கான பயிற்சி அளித்தல் வேண்டும். இறையருள் இனிய தமிழாக இருந்தால்தான் இறையருள் நமக்குக் கிட்டும் என்பதை உணர வேண்டும்.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/6/2009 4:25:00 AM

NATHIGALAI THASIYAMAAKKA SOLLUNGADA!!THERKKU VAASALAI THURANTHAL MATTUM ORU M¨¨ M NADAKKA POAVATHU KIDAYAATHU!ITHU ORU SEITHI?THU!THU!

By EVR/EBU/PARIS
12/5/2009 9:58:00 PM

NANDANAR ATTAINED MUKTHI AS WAS SAMBANDHA PERUMAN ATTAINED AT THE TIME OF HIS MARRIAGE. WILL THE PRESENT DAY SIRUTHAIS SHALL GIVE COLOURS THAT SAMBANDHA PERUMAN WAS ALSO TORCHED BY BRAMINS?????? AT TIRUCHENDUR TEMPLE THE WEST GOPRA VAASAL IS NOT OPEN TO PUBLIC, FOS WILL THE SIRUTHAIS START DHARNAS???NANDANAR IS A NAYANMAR AMONG 63 ,WHOSE GURU POOJAS ARE BEING CONDUCTED FOR THOUSADS OF YEARS, BY ALL SAIVETS AND SAIVA MADAMS.

By l.C.NATHAN
12/5/2009 8:38:00 PM

Nandhanar is supposed to be member belonging to the scheduled castes. He was not supposed to enter the temple. How did it happen? How did he reach the lotus feet of God, and became part of Gods. Is it divine blessing or was Nandanar murdered by someone like Devanathan who does illegal things, because he entered the temple protesting the bar, and a story was given to it. Some reader may clarify the questions involved. If it is wrong, then say it is wrong with reasoning.

By AHindu
12/5/2009 7:28:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக