திங்கள், 2 நவம்பர், 2009

அகதிகள் மறுவாழ்வுக்கு நிதி : முதல்வர் இன்று அவசர ஆலோசனை



சென்னை, நவ.1: தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை (நவ. 2) அவசர ஆலோசனை நடத்துகிறார். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்தப்படும் இந்த ஆலோசனை குறித்து, முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் முள்வேலி முகாம்களுக்குள் அவதிப்பட்டு வந்த தமிழ் அகதிகளை விடுவிப்பதற்காக, தமிழகத்திலிருந்து திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்று முயற்சி மேற்கொண்டனர். இந்த முயற்சி மூலம் முள்வேலி முகாம்களில் அடைபட்டிருந்த 3 லட்சம் பேர்களில், ஒரு லட்சம் தமிழர்கள் அவர்களுடைய சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களும் நல்வாழ்வு பெற்றிட, இந்திய அரசு முயற்சி எடுக்கவேண்டும். அதற்கு முன் தமிழகத்தில் அகதிகளாக வந்து சேர்ந்திருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு, அடிப்படை ஆதாரங்கள், வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டியது நமது கடமை. இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தின் மூலம் தேவையான நிதி ஒதுக்கி, இலங்கை அகதிகளின் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

அடுத்தவர் முதுகில் கிடக்கும் தூசியைக் குறை கூறும்பொழுது தன்னுடைய கண்ணில் விழுந்த உத்திரத்தைப் பற்றி எண்ண வேண்டும் என்ற நல்லெண்ணமா? இங்கே புலம் பெயர்ந்தவர்களுக்குத் தாராள உதவிகள் அளிக்கப்படுகின்றன்; எனவே, முள்வேலியில் அடைபட்டுள்ளவர்களே!இங்கு கொத்தடிமைகளாக இருக்க வாருங்கள் என அழைப்பதற்கு முன்னோட்டமா? எவ்வாறிருப்பினும் ஏதிலிகளாக வந்தவர்களை மனிதர்களாக நடத்த வேண்டிய கடமைகளை அரசு இப்பொழுதாவது செய்தால் சரி. அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

(முள்வேலிவதைமுகாம்களைத் தூசியாகக் கருதுவதாக எண்ண வேண்டா.பழமொழியைக் கூறுகின்றேன்.)

By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2009 3:02:00 AM

Dear Mr.Kolaignar please don't act.

By Thamizhan
11/2/2009 3:01:00 AM

எப்படி எப்படி பணம் சுருட்டலாமின்னு ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

By வாடா மன்னாரு
11/2/2009 2:15:00 AM

நான் படையிலே போகும்போதும் பதவியோடு போகவேண்டும் உடன்பிறப்பே. காவேரி காய்ந்தால் எனக்கு என்ன? பெரியாறு போனால் எனக்கு என்ன? தமிழக மீனவன் மடிந்தால் எனக்கென்ன? இலங்கைத்தமிழன் இறந்தால் எனகென்ன? தமிழன் எக்கேடு கேட்டல் எனக்கென்ன? என் மக்கள் (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன்) நன்றாக ச்விச்ஸ் வங்கி கணக்கோடு சுபிட்சமாக இருந்தால் அதுபோதும் எனக்கு. தேர்தல் என்று வந்தி விட்டால், அடித்த பணத்தை அள்ளிவீசி வெற்றிவாகை சூடிவா உடன்பிறப்பே. என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே உடன்பிறப்பே. நான் பாடையிலே போகும்போதும் பதிவோடு போகவேண்டும். தமிழன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன? நான் பாடையிலே போகும்போதும் பதிவோடு போகவேண்டும் உடன்பிறப்பே.

By மு. கருணாநிதி
11/2/2009 12:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக