புதன், 4 நவம்பர், 2009

சிங்களப்பகுதியில் கனிமொழி வாங்கிய தேயிலை தோட்டத்தை பார்க்க சென்றீர்களா திருமாவளவரே ? – தமிழ்நாட்டிலிருந்து கு.கண்ணன்

எழுதியவர்மீனகம் on October 26, 2009
பிரிவு: சிறப்புக்கட்டுரைகள்

thiruma_questionதந்தைப்பெரியாரை தலைவராக ஏற்று நடப்பவர்கள் நாங்கள், ஆனால் பெரியார் ஒருபோதும் தன்னை தலைவன் என கூறிக்கொண்டதில்லை. எப்பொழுதும் தன்னை தோழர் என்றே அறிவித்துக்கொண்டிருந்தார் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆகையால்தான் அவர் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் தலைவனாக உள்ளார் என்பது வரலாற்றுண்மை. அப்படிபட்ட தலைவன் வழியிலேதான் நாங்கள் நேர்மையுடன் வீறு நடை போட்டுக்கொண்டிருக்கின்றோம்.

தந்தைப்பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்ட எங்களால் வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள எங்கள் மனதில் இடமில்லை, ஆனாலும் தந்தைப்பெரியாருக்கு அடுத்த இடத்தில் “மாவீரன்” பிரபாகரனுக்கு நிறந்தர இடம் கொடுத்துள்ளோம். பெரியாரைத்தான் எல்லோரும் சுவரொட்டி, துண்டறிக்கை மற்றும் அனைத்து பிரச்சார ஊடகங்களிலும் அச்சிட்டு சுயவிளம்பரம் தேடி தங்களை தமிழர் என்றும் காண்பித்துக்கொள்கிறார்கள்.

அந்த நிலைமையை “மாவீரன்” பிரபாகரனுக்கு யாரும் கொண்டுவந்துவிடவேண்டாம் என்று தங்களை அருள்கூர்ந்து வேண்டிக்கொள்கின்றோம். தங்களைப்போன்ற ஆட்களால் “மாவீரன்” பிரபாகரனுக்கு விளம்பரம் தேவையில்லை, அதனை “மாவீரன்” பிரபாகரனும் ஒருபொதும் விரும்பபோவதுமில்லை.

என்றைக்கும் விளம்பரத்தை நாடாதவன் “மாவீரன்” பிரபாகரன்.

வியாபாரிக்குத்தான் விளம்பரம் தேவை !

போராளிக்கு விளம்பரம் தேவையில்லை ! என முழங்கியவன் “மாவீரன்” பிரபாகரன்.

ஆனால் தங்களோ தென்னகத்து பிரபாகரன் என்று வெட்கமில்லாமல் பட்டம் சூட்டிக்கொள்கிறீர்கள். “மாவீரன்” பிரபாகரனின் கால்தூசுக்கு நீங்கள் சமம் என்று உங்களால் ஆணித்தரமாக அடித்துக் கூற முடியுமா?

அன்று மேடையிலே கொக்கறீத்தீர்களே!

திருடன் எங்கே ? திருடன் எங்கே ? என்று தேடிக்கொண்டிருந்தோம், இதோ நம் கூட்டத்திலேதான் இருக்கிறான் என அன்று “துரோகி” கருணாநிதியை பார்த்து கூறினீர்கள். கொலைக்காரன் ராஜபட்சேவையும் அவருது சகோதரர்களையும் போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என முழங்கினீர்கள். (தங்களுடைய சாகும்வரை பட்டினிப்போரட்டத்தையும் கொட்டும் பனியில் வந்து பார்த்து சென்றோமே… அதெல்லாம் வீண்தானே திருமா). ஈழத்தமிழர்களின் குரல்வளையை நெருக்கி சாகடித்த காங்கிரசையும் சோனியாவையும் நாம் அழித்தொழிக்க வேண்டுமென கொக்கறீத்தீர்களே ?

ஆனால் இன்றோ அதே போர்குற்றவாளியோடு சேர்ந்து கைகுலுக்கி வந்து விட்டு, அந்த கொலைகாரன் (எம் தமிழ் உறவுகளை ரத்தம் தோய்ந்த கைகளிலெ) பரிசுப்பொருளையும் வாங்கிவந்து விட்டு.

இங்கு வந்து அவை அடக்கம், நாவடக்கம் என்று பிதற்றுகிறீர்களே !
ச்சீ… இந்த பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகாலாம்…
ஆனால் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் !

“மாவீரன்” பிரபாகரனிடம் பகைவரின் கணக்கு மட்டுமில்லை,
துரோகிகளின் கணக்கு பட்டியலும் கூடிக்கொண்டே இருக்கின்றது என்பதனை யாரும் மறந்திடவேண்டாம்…

தமிழரின் பண்பாட்டை நாங்கள் அறியாதவர்கள் அல்ல,

யாரிடம் அவையடக்கம் தேவை, நம் இனத்தை கொன்றோழித்த பகைவனிடமா அவையடக்கம் காக்கவேண்டும் திருமா ?

சங்க இலக்கியத்தில் புலியை முறத்தால் அடித்தாலாம் வீரத்தமிழ்ப்பெண், ஆனால் கொலைகாரன் ராஜபட்சே “மாவீரன்” பிரபாகரனை கேளி செய்து இருக்கிறான், தாங்களும் வாய்முடிக் கேட்டுக்கொண்டுவந்து இருக்கிறீர்களே (தங்களை நாங்கள் பாராட்டவேண்டுமென்று எண்ணுகிறீர்களா)
நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே ! என்று கொக்கறீத்தால் போதாதுமா?

மீசையை முறுக்கிவிட்டால் போதாது திருமா, மீசைக்கேற்ற வீரம் நெஞ்சில் இருக்கவேண்டும். தயவுசெய்து புலிகளைப் பற்றி பேசுவதை இனியாவது விட்டுவிடுங்கள். கர்மவீரர் காமராசுக்கு வேண்டுமென்றால் வீரவணக்க சுவரொட்டி ஒட்டிமகிழ்ந்துகொள்ளுங்கள், வேண்டுமானால் நேரு, இந்திரா, ராஜீவ்க்கும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு மட்டும்தான் தங்களுக்கு தகுதியுள்ளது.

கொலைகாரன் ராஜபட்சேவை சந்தித்தபொழுது ஏன் தாங்கள், எல்லோர் முன்பும் அவன் செய்த குற்றங்களை கூறவில்லை. உயிர் பயமா ? அல்லது பதவி பயமா ?

அப்படி தாங்கள் கூறியிருந்தால் இன்று உலக அரங்கில் உங்களுடைய குரல் ஒலித்திருக்குமே, ஈழத்தமிழரின்களின் அவலங்களும், குரல்களும் பதிவாகிருக்குமே !

செய்திருக்களாமே திருமா ? செய்யவில்லையே திருமா ? நாங்களும் எதிர்பார்த்து ஏமாந்துபோனோமே திருமா ?

அதன் பின்பு வேண்டுமானால் “துரோகி” கருணாநிதியிடம் மன்னிப்புகேட்டிருக்கலாமே திருமா ?

மன்னித்துவிடுங்கள் தமிழீனனனனனத்தலைவரே, நான் ரத்தகொதிப்பில் அப்படி ராஜபட்சேவிடம் நடந்துகொண்டேன் என கூறியிருக்கலாமே ? அப்படிகூட நீங்கள் செய்யவில்லையே திருமா ?

அதைவிட்டு கூட்டு அரசியல், வெங்காய அரசியல் என்று பிதற்றிகொண்டிருக்கிறீர்கள், எங்கே “துரோகி” கருணாநிதியை பகைத்துகொண்டால் தங்களுடைய வடபழனி அலுவலகம் அதன் உரிமையாளரிடம் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம், எங்கு அடுத்துவரும் தேர்தலுக்கு தலைக்கு 1000 ரூபாய் கொடுக்கமுடியாமல் போய்விடும், தங்களும் ஒரு தொ(ல்)லைகாட்சி தொடங்கமுடியாமல் போய்விடும் இன்னும் சொல்லிகொண்டே போகலாம், பாவாம் இந்த கட்டுரையை படிப்பவருக்குதான் நீண்ட பொறுமைவேண்டும் என்ற காரணாத்தால் நிறுத்திக் கொள்கிறேன்.

தங்கள் குழு ஈழத்துக்கு உல்லாசப்பயணம் சென்றப்பொழுது கொலைகாரன் ராஜபட்சே எந்த கட்டுபாடும் விதிக்கவில்லையாம், அப்படி என்றால் தாங்கள் 11,000 இளைஞர்களை புலிகள் என்று முத்திரை குத்தப்பட்ட முகாமிற்கல்லாவா முதலில் சென்றிருக்க வேண்டும். கேட்டால் கதை சொல்கிறீர்கள் அது schedule லில் இல்லை என்று, இதை எல்லாம் கேட்க நாங்கள் என்ன வடிகட்டிய முட்டாளா ? இப்படிப்பட்ட முரன்பட்ட கருத்துளை தங்களுடைய வாக்காளர்களுக்கு சொல்லுங்கள் அல்லது வி.சி சகோதரர்களுக்கு அவர்கள் நம்புவார்கள்.

தங்கள் இலங்கை சென்று வந்ததற்க்கு வி.சி சகோதரர்கள் வரவேற்பு சுவரொட்டி ஒட்டினார்கள், அந்த சுவரொட்டியைப் பார்க்க உடம்பே குசியது என்ன கேவலமான பிழைப்பு இது.

“துரோகி” கருணாநிதி 4 நாட்களில் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை வாங்கிதந்துவிட்டாறாம் அதற்கு நன்றி அறிவிப்பு சுவரொட்டி தென்சென்னை தி.மு.காவால் நகரேங்கும் ஒட்டப்பட்டுள்ளது. எந்த ஒரு விடுதலையும் 4 நாட்களில் பெற்றுதரமுடியாதென்பதனை தி.மு.க சகோதரர்கள் அறியாதது அல்ல.

நேற்றுக்கூட முகாமில் பிரபாகரன் என்ற ஆசிரியர் தீக்குளித்ததை செய்திதாள்களில் பார்கின்றோம், இதற்க்கு பெயர்தான் விடுதலையா? தி.மு.க சகோதரர்களே உங்களுடைய தலைவர்தான் தமிழினத்துரோகியாகிவிட்டார், நீங்களுமா?

கழகத்துக்கு அன்பளிப்பாய் வந்த பொருட்களை அனைவரும் கருவூலத்தில் ஒப்படைத்துவிடுங்கள் என்ற அறிக்கைவிட்ட “துரோகி” கருணாநிதி அவர்களே !

தங்களுடைய சொத்துகளையெல்லாம் எப்பொழுது கருவூலத்திற்க்கு ஒப்படைக்க போகிறீர்கள், தாங்கள் என்ன பெரியாரைப் போல பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தவரா? எல்லாம் இந்த பதவியில் ஊழல் செய்து சேர்த்த சொத்துத்தானே !

தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி

முதலில் நீங்கள் தொண்டர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும், அருள்கூர்ந்து கோபாலபுரம், C.I.T நகர், கலைஞர் டி.வி மற்ற அனைத்தையும் கருவூலத்தில் ஒப்படையுங்கள். இப்படிப்பட்ட குள்ளநரிகுணம் படைத்த துரோகியின் பின்னால் உங்களால் எப்படி நிற்க முடிகிறது திருமா ?

மே மாதம் இறுதியில் நடந்த போரை நிறுதத தாங்கள் என்ன முயற்சி செய்தீர்கள். உங்களுக்கு தமிழர்களின் உயிரைவிட தங்களுடைய தேர்தல் வெற்றிதான் பிரதானமாக இருந்தது. நீங்கள் நினைத்து இருந்தால் 1 லட்சம் உணர்வாளர்களை எளிதாக திரட்டி மிகப்பெரிய சாலை மறியல் செய்து அறவழியில் போராடி இருக்கலாமே ? ஏன் செய்யவில்லை…

மற்றவரை குறை சொல்வதைவிட்டு நிறுத்திவிட்டு இனியாவது ஆக்கபூர்வமான சிந்தனையுடன் செயல்பட முயற்சித்தால் உங்களை தமிழினம் ஏற்றுக்கொள்ளும், இல்லையெல் தாங்கள் உலகம் முழுக்க புலிகளின் பெயரைச்சொல்லி பிரச்சாரம் செய்தபொழுது கையிலே, கழுத்திலே, மூக்கிலே அணிந்திருந்ததை கழட்டி கொடுத்த ஈழ்த்தமிழர்களேல்லாம் காறி உம் முகத்தில் உமிழும் நாள் விரைவில் வரும் மேலும் “துரோகி” கருணாநிதியின் பெயர் எப்படி உலகத்தமிழர்களால் துரோகப்பட்டியலில் சேர்க்கப்பட்டதோ தங்களுடைய பெயரும் விரைவில் சேர்க்கப்படுமென்பதனை கூறிக்கொள்கின்றோம்.

கொலைகாரன் ராஜபட்சே அளித்த விருந்தை எப்படி சாப்பிட மனம் வந்தது, அந்த உணவிலே தமிழர்களின் உடல் உறுப்புகள் தெரியவில்லையா? அவன் கொடுத்தது தண்ணீர் அல்ல ஈழத்தமிழனின் ரத்தம் என தோன்றவில்லையா?

உல்லாசப்பயணம் சென்ற தங்களுக்கு அந்த உணர்வு எப்படி வரும், சிங்களப்பகுதியில் கனிமொழிவாங்கிய தேயிலை தோட்டத்தை பார்க்க சென்றீர்களா? அல்லது சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் ‘வடக்கில் வசந்தம்’ போல் ‘வாழ்வில் வசந்தம்’ திட்டத்தை தொடங்கப் போனீர்களா? என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

திருமா அவர்களே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்

உலகத்திலே புலிகள் இயக்கத்தை சாராத இரண்டு பேருக்கு மட்டும்தான் புலிகள் தங்களுடைய ராணுவ உடையை போட்டு அழகுபடுத்தி ரசித்தார்கள்.

தமிழீழத் தேசியத்தலைவருக்குத் தெரியும் யார் யாரை எங்கே வைப்பது என்று இனியாவது அந்த மீசையை முறுக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது நாங்கள்….

நன்றி

கு.கண்ணன்,
பெரியார் திராவிடர்கழகம்,
“தமிழ்க் குடில்”
6/28, புதுத்தெரு
கண்ணம்மாப்பேட்டை
தியாகராயர் நகர்
சென்னை – 6000 017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக