முகாம்களில் உள்ள மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அரசு அனுமதிக்க வேண்டும்: ஐ.நா. |
[சனிக்கிழமை, 20 யூன் 2009, 07:37 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] |
போரினால் இடம்பெயர்ந்த மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அனுமதிப்பதன் மூலமே வடக்கு - கிழக்கில் உள்ள பதற்றத்தை தணிக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஜோன் கோம்ஸ் தெரிவித்துள்ளார். |
ஜெனீவாவில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த மே மாதம் போர் நிறைவடைந்து விட்டதாக சிறிலங்கா அரசு தெரிவித்திருந்த போதும் போரினால் இடம்பெயர்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு அனுமதிப்பதன் மூலமே வடக்கு - கிழக்கில் உள்ள பதற்றத்தை தணிக்க முடியும். உதவிப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை அரசு முகாமுக்குள் அனுமதிக்கின்றது. ஆனால் முகாம்களுக்கு செல்லும் முழு சுதந்திரமும் எமக்கு வழங்கப்பட வேண்டும். அங்கு இடநெருக்கடி, குடிநீர் பற்றாக்குறை போன்ற பல நெருக்கடிகள் உள்ளன. பருவ மழை தொடங்கினால் அங்கு தொற்று நோய்கள் அதிகரிக்கலாம். முகாம்களின் தரம் கவலை தருகின்றது. அங்குள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. இது தொடர்பாக ஐ.நா.வின் அதிகாரிகள் சிறிலங்கா அரசுடன் மிகவும் காத்திரமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அவ |
சனி, 20 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக