2/2 (1/2 இன் தொடர்ச்சி) இந்த ஒருவரின் புகழமாலையால் எந்த மதிப்பும் கூடுதலாக வராதபொழுது ஆரியர்கள் எனத் தங்களைக் காட்டிக் கொள்வோர்களால் தமிழகம் இன்றுவரையும் அடைந்த இழிநிலைகளை நன்கு உணர்ந்த- ஆரியத்திற்கு எதிரான-திராவிடம் பேசும் ஆளும் கட்சி ஆரியனை அனைத்து இந்தியத் தலைவனாக ஆக்கும் முயற்சிக்குத் துணை போகாமல் , எதிர்க்கட்சியின் உட்கட்சிச் சிக்கல்களில் தலையிடாமல் புறக்கணிக்க வேண்டும். இல்லையேல் யானை தன் தலையிலேயே மண்ணை வாரிக் கொட்டிக் கொள்ளும் பேரவலம்தான் ஏற்படும். எனவே, பொய்யான திராவிட மாயையில் சிக்கியுள்ள தமிழினமே விழித்தெழுக! தமிழராக வாழ வேண்டிய பிராமணர் வகுப்பாரே ஆரிய மாயையில் விழாமல் காத்துக் கொள்க! தனது ஆதாயத்திற்காகச் சமுதாய மக்களைப் பணயம் வைக்கும் நடிகரைத் தலைவராக உயர்த்தி ஏமாறாதீர்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/18/2009 5:34:00 AM
1/2 ஒருவரை அவரின் பிறந்தநாளை முன்னிட்டோ புதிய பொறுப்பு ஏற்பதை முன்னிட்டோ விருது பெறுவதை முன்னிட்டோ இவை போன்ற சிறப்பு நிகழ்வுகளின் பொழுதோ கட்சிப் பாகுபாடின்றி பாராட்டுவது என்பது நல்ல மரபு. ஆனால் இந்த மரபின் அடிப்படையில் எசு.வி.சேகர் பாராட்டவில்லை. இதுவரை தன் சாதிச் சங்கப் பொறுப்பாளர்கள் செய்த சமுதாயப் பணியைவிட மிக மிகக் குறைவான சமுதாயப் பணியே செய்துள்ளவர், அறியாமை மிகுந்துள்ளவர்களை நம்பித், தன் சாதிப்பின்னணியைக் கொண்டு தன்னைக் கதைநாயகனாகக் காட்டிக் கொண்டு ஆதாயம் காண விரும்புகிறார். தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழர்களால் நன்மையடைந்து கொண்டு தம்மை ஆரியராக எண்ணும் 'அறிவாளிகள்' சிலரைச் சேர்த்து ஆரிய முன்னேற்றக் கட்சியை அமைப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதற்கு இவர் மறுப்பு தெரிவிக்காததில் இருந்தே தன்னை ஆரியனாக முன்னிலைப்படுத்த விரும்புகிறார் என்பது நன்கு தெரிகின்றது. (தொடர்ச்சி 2/2 காண்க)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/18/2009 5:34:00 AM
S .V.Sekars action is very correct.He is a man of principle
6/18/2009 2:35:00 AM