கொழும்பு, ஜூன் 18: இந்திய வம்சாவளி தமிழர் வி.கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் துணை தூதரக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான முறைப்படியான அறிவிப்பு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகே அறிவிக்கப்படும் என இலங்கை வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இவர் இதற்கு முன் வங்கதேசத்தில் இலங்கைக்கான தூதரக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
இவர் இலங்கையில் உள்ள நுவரவேலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
சிங்களவனால் பேரம் பண்ண முடியாத இடர்ப்பாடுகளில் எட்டப்பன் இருப்பு உதவியாக இருக்கும் என்பது அன்றி வேறொன்றும் சிறப்பு இல்லை. உண்மையில் இலங்கைக்கும் தமிழர்கள் பெரும்பான்மை உள்ள பிற நாடுகளுக்கும் தமிழர்களையே தூதர்களாகவும் பிற தூதரக அதிகாரிகளாகவும் இந்தியா அனுப்பியது என்றால் பாராட்ட வேண்டியதுதான். இதனை வலியுறுத்த முதலில் தமிழக அரசு முன்வர வேண்டும். வெளியுறவுத்துறையைக் கேட்டுப் பெறாத திமுக இது போன்ற கோரிக்கைகளையாவது வலியுறுத்தி வெற்றி காணலாமே! அமைச்சர் பதவி வாய்ப்பைப் பெறாமல் போன கனிமொழியின் தலைமையில் அயல்வாழ்தமிழர் நலன் அவையம் ஒன்றை நிறுவி (அவருக்கும் மத்திய அமைச்சருக்கு இணையான தகுதி நிலையை வழங்கி) உலகத்தமிழர் நலன்களைக் காக்க முன்வரலாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/20/2009 5:06:00 AM
துணை தூதர் ஹம்சா தினமலர் போன்ற பத்திரிக்கைகளை விலைக்கு வாங்கினான். விலை போகாத பத்திரிக்கைகளின் தினமணிக்கு முதலிடம். இனி இவன் என்ன செய்ய போகிறானோ? தமிழனுக்கு தமிழந்தான் எதிரி.