லங்கா சமசமாஜக் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை உக்கிரப்படுத்தியதன் விளைவாக என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா, விக்ரமசிங்க போன்றவர்கள் ஆங்கிலேயரால் சிறைப்படுத்தப்பட்டனர். அன்றைய நிலையில் சிறையை உடைத்து வல்வெட்டித்துறை வழியாகத் தோணிகளில் இவர்கள் இந்தியாவுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர். இவர்கள் இந்தியப் பெயர்களை ஏற்று கல்கத்தா, பம்பாய், சென்னை நகரங்களில் தலைமறைவாகத் தொழிற்சங்க, அரசியல் வேலைகளில் ஈடுபட்டனர். இதன் விளைவாக இலங்கை இடதுசாரி, இந்திய இடதுசாரி இயக்கங்களுக்கிடையில் நெருங்கிய தொடர்புகள் வளர்ந்தன. பிலிப் குணவர்த்தனா இந்தியப் பற்றின் விளைவாக, தனது இரண்டாவது மகனுக்கு இண்டிகா குணவர்த்தனா என்று பெயரிட்டு அழைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிலிப் குணவர்த்தனா லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து விலகி, புரட்சிகர சமசமாஜக் கட்சி என்ற பெயருடன் ஒரு கட்சிக்குத் தலைவரானார் (பின்னர் பொதுவுடைமைக் கட்சியுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணியை 1951-இல் அமைத்தார்). இலங்கைத் தமிழர்கள் பற்றி, அவர்கள் தனி இனமென்றும் அவர்களுக்கென தாயகம் இலங்கையில் உண்டென்றும், அதில் அவர்கள் தமக்கென அரசை உருவாக்க உரிமையுடையவர்கள் என்ற நிலைப்பாட்டையும் 1935-இல் முதன் முறையாக கட்டுரை வடிவில் எழுதியவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆவார். சமஷ்டி அமைப்பின் கீழ் இலங்கையின் இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது சாத்தியம் என்ற கொள்கையை அவர் முன்வைத்தார். அப்போது அவர் எந்தவொரு கட்சியையும் சார்ந்திருக்கவில்லை (1945-இல் தான் பண்டா சிங்கள மகாசபை இயக்கத்தை, சிங்களவர் விழிப்புணர்ச்சி நோக்கிற்காக ஆரம்பிப்பதாகக் கூறி, செயல்பட்டார்). 1944-இல் இலங்கைச் சட்டசபையில் சிங்களம் அரச மொழி என்ற தீர்மானத்தை ஜே.ஆர். முதன் முறையாகப் பிரேரித்தார். ஆங்கிலத்தை அகற்றி, சிங்களம் மட்டுமல்லாது, சிங்களமும் தமிழும் அரச மொழிகளாக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இடதுசாரிப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அதனால் சிங்களமும்~தமிழும் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. சிங்களவர் மத்தியில் படித்தவர் அதிகரிக்கவும் வேலையற்றவர் பிரச்னை சிக்கல் தீர்வு, சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துப் பெற்ற உத்தியோக மொழிகள் என்ற கொள்கையை முன்வைத்தும் இயங்கி வந்த இடதுசாரி இயக்கங்கள், இந்த நிலைப்பாட்டிலிருந்து தடுமாறி வாக்குகளை மையமாகக் கொண்ட சிங்கள இனவாத எழுச்சிக்குப் படிப்படியாக அடிபணிந்தன. யாழ்ப்பாணம்~கொக்குவில் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் (1954) கலந்துகொண்ட பிரதமர் கொத்தலாவலை ஆற்றிய உரையில், சிங்களத்தையும், தமிழையும் சமத்துவம் பெற்ற மொழிகளாக ஆக்குவதாக உறுதி தந்தார்.

கருத்துகள்
Immatured and cunning Singalise politician made tamils life miserable. They are trying to eradicate tamil population in the past 60 years, India is always acting against tamils whether it Indian tamils or Eelam tamils, they are affected by Indian stupid foreign policy.

6/16/2009 3:05:00 AM
Dear Thinamani and writer pavai.chandran , Thanks for real story of eela tamils, World wide tamils always greatful for THINAMANI, thanks lot by murugesan
6/15/2009 3:33:00 PM
we would request to the dinamani editor to republish the article no. 12 & 13 Thanks, Regards,
6/15/2009 11:57:00 AM
please republish editorial aricles 12 Thanks Sekar Kuwait
6/15/2009 11:57:00 AM
please post part 12
6/15/2009 10:57:00 AM
Election victory was much more important than democratic principles. How bad were the then political parties? So stupid to force 1 language for Srilanka. It is almost equal to Hindi Imposition in India but that was handled well by Tamils in India than Tamils of Srilanka. Still all Central goverment departments and agencies are trying to impose Hindi but Tamil Nadu stands alone without any terrorism type of activities to stop Hindi's invasion. What was wring in Srilankan Tamils approach? Coudl the writer explain that?
6/15/2009 7:52:00 AM