புதன், 17 ஜூன், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 14: அரசியல் கட்சிகளின் தோற்றம்!
தினமணி


கண்டிய சிங்களவர்
இலங்கையின் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக 1935-இல் லங்கா சமசமாஜக்கட்சி உருவெடுக்கிறது. இந்தக் கட்சியின் தோற்றமானது தொழிலாளர் இயக்கத்திலிருந்து தொடங்குகிறது.இலங்கையில் 1860-இல் முதல் தொழிலாளர் போராட்டம் நடந்தபோதிலும் 1899-இல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் உருவாகி அதன் விளைவாகத் தொழிற்சங்கக் கட்டமைப்பு வெளிப்பட்டபோதிலும் 1920-இன் காலத்தில்தான் இரண்டு விரிவான தொழிலாளர் அமைப்புகளைப் பார்க்க முடிகிறது.பிரபல பத்திரிகையாளர் கே. நடேசய்யர் தலைமையில் உருவான இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனமும் ((Ceylon Indian Workers Federation) ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் உருவான தொழிலாளர் சங்கமும்தான் அந்தக் குறிப்பிடத்தக்க அமைப்புகள்.தோட்ட அதிபர்களிடம் ஓரளவு அங்கீகாரம் பெற்ற இயக்கமாக அய்யர் இயக்கம் அமைந்திருந்தது. இவர் 1925-இன் ஆரம்பத்தில் குணசிங்காவின் தொழிற்சங்கத்துடன் தன்னுடைய தொழிற்சங்கத்தை இணைக்கிறார். ஆனால் 1928-ஆம் ஆண்டுகளில் குணசிங்காவின் இனவாதமும், இந்தியர் எதிர்ப்பும் மேலோங்கியதால் அந்த அமைப்பை விட்டு வெளியேறுகிறார் (இந்தியர் என்பது -மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களைக் குறிக்கும்).கலாநிதி நியூட்டன் குணசிங்கே ஆய்வுப்படி 1930-க்கு முன்னர் சிங்களவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருந்தனர். அவர்கள் கண்டிய சிங்களவர் என்றும் (உயர்வானவர்கள்), கரையோரச் சிங்களவர் (மீனவர் மற்றும் இதரத் தொழிலில் ஈடுபடுபவர்) என்றும் பிரிக்கப்பட்டு இருந்தனர். ஆங்கிலேயர்கள் இவர்களிருவரையும் தனித்தனிப் பிரிவாகக் கருதும் அளவுக்கு இவர்களிடையே கலாசாரப் பழக்க வழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தன.1930-இல் இவர்களிடையே ஓர் இணக்கம் ஏற்பட்டு கலப்பு மணங்கள் உருவாகின்றன. இதன் பின்னரே சிங்களவர்கள் ஒரே சமூகசக்தியாகவும், ஓர் இனமாகவும் ஒன்றுபட்டனர். உதாரணமாக கரையோரச் சிங்களப் பிரிவினரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா கண்டியச் சிங்களப் பிரிவினரான ஸ்ரீமாவோவை மணந்தார்.இதுபோன்ற பல்வேறு திருமணங்கள் இவர்களிடையே நடைபெற்றன.1933-இல் வெள்ளவத்தைத் தொழிலாளர் போராட்டத்திற்கு குணசிங்கா தலைமையேற்கிறார். அதன்பின் அவர் பிரபலமாகிறார். இவரது தொழிற்சங்கத்தில் பரவலாக இடதுசாரிகள் நிறைந்து இருந்தனர். திடீரெனக் குணசிங்கா முதலாளிகள் சங்கமான எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷனுடன் சேர்ந்து கொண்டு வேலைநிறுத்தத்துக்கு எதிராக மாறினார்.வேலைநிறுத்தம் முதலாளிகளுடன் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றார். தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் இருந்ததால் அங்கத்துவம் காலாவதியாகி விடுகிறது. தொடர்ந்து குணசிங்கா சிங்கள இனவாதத்தைக் கடைப்பிடித்ததால் தொழிலாளர்களிடையே அதிருப்தி ஏற்படுகிறது.அதே ஆண்டு (1933) பிப்ரவரி 23-இல் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து வாலிப முன்னணியின் கூட்டம் நடக்கிறது. அதில் வெள்ளவத்தைத் தொழிலாளர் சங்கம் உருவாகிறது.

1935-இல் ‘All Ceylon Estate Workers Union’ உருவாகிறது. அவ்வாண்டில் ஏற்பட்ட தொழிற்சங்கச் சட்டத்தின் மூலம் இந்த யூனியன் அங்கீகாரம் பெறுகிறது. குணசிங்கா தொழிற்சங்கத்திலிருந்த அதிருப்தியாளர் அனைவரும் இதில் இணைகின்றனர். முதன்முதல் இடதுசாரிகள் தலைமையிலான சங்கமாக இது அமைகிறது.இதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்து சென்று திரும்பிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்த அன்றைய தீவிரவாத இளைஞர்களான டாக்டர் என்.எம். பெரேரா, டாக்டர் விக்ரமசிங்கா, பிலிப்குணவர்த்தனா, எம்.ஜி. மென்டிஸ், பீட்டர் கெனமன் போன்றோர் இணைந்து லங்கா சமசமாஜக் கட்சியை நிறுவினர்.நாட்டின் முழுமையான சுதந்திரத்திற்கும், குடியரசு அமைப்பதற்கும், சமதர்ம சமூக அமைப்பொன்றை நோக்கமாகக் கொண்டு இந்த லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர், விவசாயி, அறிவு ஜீவிகளை ஒன்றிணைத்து ஆங்கில ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து இலங்கையை விடுவித்து, ஒரு சமதர்ம சமுதாய அமைப்புக்கு உதவுவதே இக்கட்சியின் நோக்கம்.உலக அரங்கில் ட்ராட்ஸ்கிய, ஸ்டாலினிச இயக்கங்கள் என்ற பிளவு தோன்றவே இக்கட்சியில் சித்தாந்த ரீதியான பாகுபாடு தலையெடுத்தது. ட்ராட்ஸ்கியத்தை ஆரம்பித்தவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியின் ஆளும் இயக்கத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றினர். சோவியத் தலைமையை ஏற்றவர்கள் ஸ்டாலினிஸ்டு என்ற முத்திரை குத்தப்பட்டு லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் 1940-இல் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி (மநட) என்ற பெயருடன் இயங்கத் தொடங்கினர். 1942-இல் இலங்கை பொதுவுடைமைக் கட்சி என்ற பெயருடன் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.1942-இல் தனது வேலைத் திட்டத்தை வெளியிட்ட இலங்கைப் பொதுவுடைமைக் கட்சி ஏகாதிபத்ய எதிர்ப்பு, சமத்துவ சமதர்மக் குடியரசை நிறுவுதல் போன்ற கொள்கைகளை வற்புறுத்தியதுடன், இலங்கைத் தேசிய இனங்கள் பற்றிய ஜனநாயக நிலைப்பாடும் 1942 "மே'யில் இடம்பெற்ற "மே'தினக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இலங்கை இனப் பிரச்னை சம்பந்தமான ஒரு மார்க்ஸிய, லெனினிச தீர்வாக இது முதன்முறையாக முன் வைக்கப்பட்டது. இதன் சாராம்சம் வருமாறு:தமிழர் தனித்துவம் பெற்ற தேசிய இனம். அவர்களின் பாரம்பரிய தாயகம் வடக்கு, கிழக்குப் பகுதிகள். இதைத் தமிழர் ஆள, ஏற்ற அரசை அமைத்துக் கொள்ள லெனினிச கோட்பாட்டின்படி, சுய நிர்ணய உரிமையை அனுபவிக்கத் தமிழினம் உரிமையுடையது. அவசியமானால் அவர்கள் பிரிந்து தமது தனித்துவமான அரசை உருவாக்க உரிமை பெற்றவர்கள். இலங்கைவாழ் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜா உரிமை பெறத் தகுதியுடையவர்கள்~என்றெல்லாம் தீர்மானத்தில் கூறப்பட்டது.இந்தத் தீர்மானம், அன்று அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மையமாகிய இலங்கைத் தேசிய காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்திற்கு அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அமைப்பின் அன்றைய செயலாளர் யார் தெரியுமா? பின்னர் இலங்கை அதிபராக வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனேதான்! அப்போது இவர் இடதுசாரி நூல்கள், வெளியீடுகளைத் தருவித்து நூல் நிலையம் அமைத்து~கங்ச்ற் ஆர்ர்ந் இங்ய்ற்ழ்ங்~ இடதுசாரி நூல் மையம் என்ற நூல் நிலையத்தின் பொறுப்பாளராக இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக