நிதி நிலை அறிக்கை – 2016: விலை உயர்வு – குறைவுப் பட்டியல்
தலைமையமைச்சர் நரேந்திர மோதி
தலைமையிலான நடுவண் பா.ச.க அரசின் 2016-2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு
அறிக்கையினை (Budjet) மாசி 17, 2047 / பிப்பிரவரி 29, 2016 அன்று
நாடாளுமன்றத்தில் நடுவண் நிதியமைச்சர் அருண் செத்லி அளித்தார்.
இதனால் வரி போடுவதில் மேற்கொண்டுள்ள
மாற்றத்தின் எதிரொலியாக விலை உயர்கிற குறைகிற பொருட்கள், சேவைகள்
போன்றவற்றின் பட்டியலைப் பார்ப்போம்.
விலை உயர்வு பெறுபவற்றின் பட்டியல்:
– விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் (sport utility) ஊர்திகள்.
– சிறிய வகை மகிழுந்துகள் (cars), நிலநெய்
(Diesel) மகிழுந்துகள், சொகுசு மகிழுந்துகள். (முறையே 1%, 2.5%, 4%
அளவுக்கு இந்த மகிழுந்துகளின் வரி உயர்த்தப்படுவதால்).
– வெள்ளி அல்லாத நகைகள்.
– சுருட்டு நீங்கலாக வெண் சுருட்டு (cigarette) முதலான புகையிலைப் பொருட்கள்.
– விமானப் பயணச்சீட்டு.
– வணிகமயப்படுத்தப்பட்ட (Branded) உடைகள்.
– தங்க நகைகள்.
– வைரம்.
– விடுதி உணவுகள்.
– கைப்பேசிக் கட்டணம்.
– காப்பீட்டுத் திட்டங்கள்.
– திறன்பேசிகள் (Smart phones).
– திரைப்படக் கட்டணம்.
– தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர்.
விலை குறைவு பெறுபவை பட்டியல்:
– குருதித் தூய்மைப்படுத்தும் (Dialysis) மருத்துவக் கருவிகள்.
– புடையெழுத்துத்தாள்கள் (Braille Papers).
– குருதித் தூய்மைப்படுத்தும் மருத்துவச்
செலவு. (அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தேசிய இலவசக் குருதித்
தூய்மைப்படுத்தும் பணிமை நடைமுறைக்கு வருவதால்).
– இணையத் தருவி (modem).
– நோயர் ஊர்தி (ambulance) சேவை.
– காட்சி அணுக்கப்பெட்டி (set-top box).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக