ஞாயிறு, 6 மார்ச், 2016

இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் 80 பேர்களுக்குப் பயிற்சி









முத்திரை-இ.பொ.வ. - muthirai_EIL02

தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் முடித்தவர்களுக்கு இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் பயிற்சி
  புது தில்லியில் செயல்பட்டு வரும் இந்தியப் பொறியாளர் வ.து (Engineers India Limited) நிறுவனத்தில் தொழில் பயிலுநர்கள் (apprentices) ௮௦ (80) பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் (Diploma) பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் தொழிற் பிரிவுகள் விவரம்:
அ. வணிகத் தொழில் பயிலுநர் (Trade apprentice):
  1. கட்டுமானம் (Civil) – 16
  2. இயந்திரவியல் (Mechanical) – 14
தகுதி: கட்டுமானம், இயந்திரவியல் போன்ற தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சி (ITI). வரைவாளர் பாடத்தைப் படித்திருக்க வேண்டும்.
ஆ. தொழில்நுட்பப் (technician)  பயிலுநர்:
  1. கட்டுமானம் (Civil) – 15
  2. இயந்திரவியல் (Mechanical) – 07
  3. மின்னியல் (Electrical) – 03
  4. வேதியியல் (Chemical) – 03
  5. கட்டடக்கலை (Architecture) – 02
  6. கருவிமயமாக்கல் (Instrumentation) – 05
  7. தகவல் தொழில்நுட்பம் (Information Technology) – 05
  8. பாதுகாப்பு – 10
தகுதி: மேற்கண்ட எட்டுப் பிரிவுகளுள் ஒன்றில் பட்டயம் (Diploma) பெற்றிருக்க வேண்டும்.
அகவை (வயது) வரம்பு: 14.03.2016 நாள்படி 25க்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் (SC), மலைவாழ் மக்கள் (ST) ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மூன்று ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகளும் அகவை வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
பயிற்சிக் காலம்: ஓர் ஆண்டு.
ஊதியம்: மாதம் உரூ.3,542 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். தொழிற்பயிற்சி, பட்டயம் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://recruitment.eil.co.in/ என்கிற இணையப் பக்கத்துக்குச் சென்று இணைய வழியே விண்ணப்பியுங்கள்!

இணைய வழி விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 14.03.2016.

தரவு:
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - peyar_name_e.bhu.gnanaprakasan02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக