தலைப்பு-ஆரியர்முயற்சிக்கு இணங்காத் தமிழ்ப்புலவர்கள், பரிதிமால்கலைஞர் : thalaippu_ariyarkkuinangaa_thamizhpulavar_parithimalkalaignar

ஆரியர் முயற்சிக்கு இணங்காமல் தமிழ்ப் புலவராவார்
தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.
  தமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப் பாட்டிற்குப் பெரிது மிணங்கினரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்டபோதினும் மொழித் திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோரெழுத்துகளும் அவ்வறே யின்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் ‘கிரந்தம்’ என்னும் பெயரிற் புதுவதோர் இலிபிவகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப் புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.
பரிதிமாற்கலைஞர்:
தமிழ்மொழியின் வரலாறு