வெள்ளி, 11 மார்ச், 2016

தனித்துப் போட்டி என அறிவித்த விசயகாந்திற்குப் பாராட்டுகள்!



  உலக மகளிர் நளை முன்னிட்டுத் தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் சென்னை  இராயப்பேட்டையில் நேற்று(வியாழக்கிழமை / மாசி 27, 2047 / மார்ச்சு 10, 2016) நடைபெற்றது. 

  இதில் பேசிய தே.மு.தி.க., தலைவர் விசயகாந்து, , கடந்த மூன்று மாதங்களாக நடந்த கூட்டணி பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தார். மாநிலம் முழுவதும் உள்ள, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்குவதாகவும் அறிவித்தார்.

 பழம் நழுவி யார் பாலிலும் விழவில்லை, யார் காலிலும் விழவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

  நீண்ட காலமாக இழுத்தடித்துக்கொண்டிருந்தார் என்பதைவிட நன்கு சிந்தித்து இந்த முடிவிற்கு வந்துள்ளார் எனலாம்.

  எந்தக் கட்சிகைள எதிர்த்து வந்தாரோ அந்தக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனத் தன்மானத்துடனும் தன்னம்பிக்கயைுடனும்  முடிவெடுத்துள்ளார்.

  பா.ச.க. மத்தியில் ஆட்சி அமைத்ததும் தலைகால் புரியாமலும் ஆவணத்துடனும் புறக்கணித்து வந்தது; சட்ட மன்றத் தேர்தல் வரும் சூழலில் காலில் விழாக்குறையாகக் கெஞ்சினாலும் தான் பெற்ற பாடத்தை மறக்காமல் பா.ச.க.வை உதறியதற்கு விசயகாந்திற்குப் பாராட்டுகள்!

  மக்கள்நலக்கூட்டணியுடன் தே.தி.மு.க. இணைந்திருக்கலாம்.  எனினும் யாரால் யார் வலிமை பெற்றார்கள் என்ற சிக்கல் வரலாம். எனவே, அக்கூட்டணியுடனும் சேராதிருந்துள்ளார்.
 
  இருப்பினும் தன்னைக் கூட்டணிக்கு அழைத்த தலைவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துள்ளமையும் பாராட்டிற்குரியது.

 இதனால் அ.தி.மு.க.வின் எதிர்ப்புவாக்குகள் சிதறும்; அக்கட்சியிடம் பணம் வாங்கிவிட்டார் எனப் புரளி கிளப்ப உள்ளவர்கள்  இதனால் தி.மு.க.வின் எதிர்வாக்குகளும் சிதறும் என்று எண்ணலாமே!

  இரு முதன்மைக் கட்சிகளைச் சார்ந்தே தமிழகத் தேர்தல் அமையும் சூழலை விசயகாந்தின் அறிவிப்பும் மாற்றியுள்ளதற்குப் பாராட்டுகள்!

  பா.ம.க.வும் தனித்து நிற்பதால், கட்சிகளின் வாக்கு வலிமையை இத்தேர்தல் காட்டும்.

(படம்: நன்றி:அசோக்கு, வினோத்து காசிநாதன், நக்கீரன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக