அ.வாடிப்பட்டி ஊராட்சியில்
விடுதலை நாளை முன்னிட்டு
மாணவ, மாணவியர்களுக்கு
மடி கணிணி வழங்கும் விழா
தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி ஊராட்சியில் விடுதலை நாளை முன்னிட்டு மடி கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அ.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு
ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமால பிச்சைமணி தலைமை தாங்கினார். கிளைச்செயலாளர்
பிச்சை மணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக
ஊராட்சிஒன்றியக்குழுத்தலைவர் செல்லமுத்து கலந்து கொண்டார். அதன்பின்னர்
மாணவ, மாணவியர்களுக்கு மடி கணிணி, புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணாக்கர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக