கழிப்பறை கட்ட உரூ.3000 கையூட்டு
ஊரவைக் கூட்டத்தில் பயனாளிகள் முறையீடு
தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊரவை(கிராம சபை)க்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் அப்பாசு தலைமை தாங்கினார்.
இதே போல க.கல்லுப்பட்டி ஊராட்சியில்
ஊராட்சிமன்றத் தலைவர் வளையாபதி, முதலக்கம்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத்
தலைவர் முத்துப்பாண்டி, எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத்
தலைவர் பழனியம்மாள், செயமங்கலம் ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர்
சங்கரலிங்கம், சில்வார்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர்
சுப்புலெட்சுமி, அ.வாடிப்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமாலா
பிச்சைமணி, தே.வாடிப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் செல்வம் ஆகியோர் தலைமை
தாங்கினார்கள்.
இவற்றில் பொம்மிநாயக்கன்பட்டியில்
நடைபெற்ற ஊரவைக் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை
எழுப்பினார்கள். ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள்
செய்துதரப்படவில்லையென்றும், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட தொகுப்பு
வீடுகளுக்கு ஊராட்சிமன்றத் தலைவரும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்
பணிபுரிபவர்கள் ஒவ்வொருவரும் காசோலை வாங்கும்போது கையூட்டு
கேட்பதாகவும், இப்பொழுது 18 கழிப்பறைகள் ஒதுக்கப்பட்டதில் ஒவ்வொரு
பயனாளியிடமும் உரூ.3000 கையூட்டு கேட்பதாகவும் குற்றம் சாட்டினார்கள்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.அதன்பின்னர் அதிகாரிகள் இணக்கம் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக