புதன், 19 ஆகஸ்ட், 2015

ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய உதவுங்கள்!


harwarduniversity01

ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய உதவுங்கள்!

  உலகின் மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது.
  ஆறு பேராயிரம்(மில்லியன்) அமெரிக்க தாலர்கள் முதலீட்டில் இந்தத் துறை அங்கே தொடங்கப்படவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான   மருத்துவர் விசயராகவன் சானகிராமன் பி.ஒ.நி. / பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
  அவரும் அவரது நண்பரும் மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை நூறாயிரம் தாலர்களை இதற்காக அளித்துள்ளதாகவும், எஞ்சிய ஐந்து பேராயிரம்(மில்லியன்) தாலர்களை வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களும், தமிழ்ச் சங்கங்களும் அளிக்க முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
  இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை அப்பல்கலைக்கழகம் சில நாளுக்கு முன்னர் வழங்கியுள்ளது என்று தெரிவித்த மருத்துவர் சானகிராமன், ஆறு பேராயிரம்(மில்லியன்) தாலர்கள் எவ்வளவு விரைவாக அவர்களிடம் அளிக்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக அங்கே தமிழ்த்துறை தொடங்கப்டும் என்று கூறினார்.
 அடுத்த கல்வியாண்டு முதல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை செயல்படத் தொடங்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
  அந்தத் துறையில் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்த கற்கை நடவடிக்கைகளும் ஆய்வுகளும் இடம்பெறவுள்ளன என்றும், படிப்படியாக பட்டப்படிப்பு, முதுநிலைப் படிப்பு ஆகியவையும் வரவுள்ளன எனவும் அவர் கூறுகிறார்.
b.b.c.-muthirai
செ.இரா.செல்வா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக