திங்கள், 7 அக்டோபர், 2013

'கருவூல'மாகும் பழைய புத்தகங்கள்!


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82081720131006221603.jpg
'கருவூல'மாகும் பழைய புத்தகங்கள்!
தமிழில் கிடைப்பதற்கரிய, 20 ஆயிரம் புத்தகங்களை பாதுகாப்பதுடன், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர்களுக்கும் உதவும்,முருகேசன்: நான், மதுரையில் உள்ள, தண்டலம் கிராமத்தை சேர்ந்தவன். அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டதால், வறுமை காரணமாக, இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். வயிற்று பிழைப்பிற்காக, பலசரக்கு கடையோடு, பழைய பேப்பருக்கு வெள்ளை பூண்டு விற்று, வியாபாரம் நடத்தினேன். பழைய பேப்பருக்கு வந்த சில நல்ல தமிழ் புத்தகங்களை, சேர்த்து வைத்து படிக்க ஆரம்பித்தேன். இன்று, நான் சேர்த்து வைத்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை, 20 ஆயிரத்தை தாண்டும். புத்தகங்களை, மற்றவர் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக, கட்டணம் வசூலிப்பது இல்லை. இதுவரை எக்காரணத்தாலும், என்னிடம் உள்ள புத்தகங்களை விற்றது இல்லை. ஏனெனில், என்னை பொறுத்தவரை, புத்தகங்களை, 'பொக்கிஷ'மாக கருதுகிறேன். இக்காலத்தில், 'கம்ப்யூட்டர்' தான் எல்லாம் என, நினைக்கின்றனர். ஆனால், கம்ப்யூட்டரால் எல்லா புத்தகங்களையும் கொடுக்க முடியாது. புத்தகம் வழியாக படிப்பதன் சுகமே தனி தான். புத்தகங்களை திருப்பி தராதவர்களிடம், 50 பைசா அஞ்சல் அட்டையில், 'மழை, வெயில் பார்க்காமல், உண்ணாமல், உறங்காமல், புத்தகங்களை தேடி அலைகிறேன். இந்த வயதான தாத்தாவை ஏமாற்றாதே' என, கடிதம் எழுதி அனுப்புவதால், புத்தகங்கள் திரும்பி வந்துவிடும். என்னிடம் உள்ள பல அரிய தமிழ் புத்தகங்களை படித்து, பல கல்லுாரி மாணவர்கள், தமிழ் இலக்கியத்தில் ஆய்வு கட்டுரைகளை தயாரித்துள்ளனர். மதுரை காமராசர் பல்கலை கழக ஆய்வு மாணவர்களுக்கு, அதிக அளவில் புத்தகம் கொடுப்பதால், அவ்விடமே எனக்கு நிரந்தர முகவரியாக மாறியது. மதுரை வானொலி நிலையம் வழியாக, புத்தகம் வாசிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். தஞ்சை பல்கலைக்கழக துணை வேந்தர், திருமலை எழுதிய புத்தகத்தை, என் நீண்ட கால புத்தக சேவையை பாராட்டும் விதமாக, எனக்கு சமர்ப்பணம் செய்தார். தொடர்புக்கு: 95787 97459

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக