அதிக உடல் எடையை எளிதில் குறைக்கலாம்!
கூடுதல் எடையை க் குறைக்கும் வழிமுறைகளை க் கூறும், உணவியல் வல்லுநர் திவ்யா: இயற்கை உணவுகளை தவிர்த்து,
நாகரிகம் என்ற பெயரில், 'பாஸ்ட்புட்' போன்ற, முறையற்ற உணவுகளை உண்பதாலும்,
போதுமான உடல் உழைப்பு இல்லாததுமே, உடல் எடை கூடுவதற்கு காரணம்.'தைராய்டு, ஹார் மோன்' பிரச்னை என, உடல் எடை அதிகரிக்க, வேறு பல
காரணங்களும் உண்டு. முதலில், உங்கள் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்
என, கண்டுபிடித்து, அதன் அடிப்படையில், எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். இதில், பலர் செய்யும் பெரிய தவறு, விளம்பரங்களை பார்த்து, ஒரே மாதத்தில், 5 கிலோ, 10 கிலோ எடையைக் குறைக்க முயற்சிப்பது. 'மார்க்கெட்'டில் அறிமுகமாகும், புரத பானங்களை வாங்கி குடிப்பது என, உடல் எடையை குறைக்க அவசரப்படாதீர். ஏனெனில், தேவைக்கு அதிக
மான புரதம், பல உடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, குறுகிய காலத்தில், அதிக உடல் எடையை குறைக்க முயற்சிக்காமல், சீரான இடைவெளியில், குறைக்க வேண்டும். மீறினால், வேகமாக குறைந்த எடை, திரும்ப ஏறிவிடும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், 'கார்போஹைட்ரேட்' உணவுகளைக் குறைக்கலாம். ஆனால், உடலின் தேவையை விட, அதிகம் குறைத்தால் முழு, 'எனர்ஜி'யோடு வேலை செய்ய முடியாமல் சீக்கிரமே, 'டயர்டு'ஆகி விடுவர். ஒரு நாளுக்கு, மூன்று முறை சாப்பிடும் பழக்கம் இருந்தால், மொத்த உணவின் அளவை, ஆறு முறையாக பிரித்து சாப்பிடுவது நல்லது. அதிகமாக பசிக்கும் நேரத்தில், கார்போஹைட்ரேட் உணவை தவிர்த்து, பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும், சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். தினமும், 45 நிமிடம் நடைபயிற்சி செய்து, மனதை, 'ரிலாக்ஸ்' செய்வதுடன், 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதும் அவசியம். இவ்வுலகில் பிறந்த, ஒவ்வொருவரின் உடல் தன்மையும், பிரத்யேகமானது. அவரவரின் தேவை மற்றும் வசதிக்கு ஏற்ப, 'டயட்' மற்றும் உடல் எடை குறைப்பு வழிகளை பின்பற்றலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக