பேருந்தைச் சேதப்படுத்தியதால் திருக்குறள் எழுதிய மாணவர்கள்
மானாமதுரை : மானாமதுரையில் நிற்காமல் சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்த
கல்லூரி மாணவர்களின் பெற்றோர் அபராதம் கட்டினர். தண்டனையாக மாணவர்கள் ஐந்து
பேர், 10 திருக்குறளை 10 முறை எழுதினர்.
நேற்று முன்தினம் காலை, நத்தபுரக்கி, முருகபாஞ்சான், வேலூர் கிராம கல்லூரி மாணவர்கள், பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, மானாமதுரையில் இருந்து சிவகங்கைக்கு அளவுக்கதிமான கூட்டத்துடன் (டிஎன் 63, என் 1447) பஸ் வந்தது. மாணவர்கள் சத்தியேந்திரன், தேவா, கண்ணன், முகிலரசன், தினேஷ் பஸ்சை நிறுத்த கை காட்டினர். பஸ் நிற்காமல் சென்றதால், கல்லெறிந்து கண்ணாடியை உடைத்து தப்பினர். டிரைவர் மணிகண்டன், போலீசில் புகார் செய்தார்.நேற்று, காலை பெற்றோருடன் ஆஜரான கல்லூரி மாணவர்கள், இன்ஸ்பெக்டர் பால்பாண்டியிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். பஸ் கண்ணாடி செலவு ரூ. 8 ஆயிரத்தை ஏற்பதாக, போலீசிடம் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், தப்பு செய்த கல்லூரி மாணவர்களை, கண்டிக்கும் வகையில், 10 திருக்குறளை, பார்க்காமல் 10 முறை எழுதவும், அல்லது தேசிய கீதத்தை எழுத்து பிழையின்றி 10 முறை எழுதுமாறும் கூறினர். இதனை எதிர்பாராத கல்லூரி மாணவர்கள் 5 பேரும், பரீட்சை எழுதுவதுபோல், 10 திருக்குறளை 10 முறை எழுதினர். இவர்கள் தப்பாமல் இருக்கவும், தப்பின்றி எழுதவும் ஒரு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டார். சிப்காட் போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவர்கள், தவறை உணர்ந்து ஸ்டேஷனை விட்டு வெளியேறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக