சனி, 12 அக்டோபர், 2013

திறமையை மெய்ப்பிக்க வேண்டும்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82470620131012001756.jpg
திறமையை மெய்ப்பிக்க வேண்டும்!

'நாடோடி வாழ்க்கை' எனத் தவறாக க் கிண்டலடிக்கப்படும், 'மார்க்கெட்டிங்' துறையில் சாதித்த, கீத்து வர்மா
: என் அம்மா, பள்ளி படிப்போடு நின்று விட்டதால், என்னை, 'பிசினஸ் மேனேஜ்மென்ட்' வரை படிக்க வைத்தார். எம்.பி.ஏ., முடித்திருந்தாலும், எனக்கு முதலில் கிடைத்தது, 'பீல்டு ஜாப்' எனும் களப்பணி தான். ஆனாலும், மனம் தளராமல் கடுமையாக உழைத்தேன். 'யுனிலிவர்' நிறுவனம், புதிதாக அறிமுகம் செய்த டீ துாளை, மக்களிடையே விளம்பரப்படுத்த, 40, 50 நபர்களுடன், ஊர் ஊராக, வீடு வீடாக சென்று, இலவச சாம்பிள் டீத்துாள் பாக்கெட்டுகளை கொடுத்தேன். பின், அடுத்த நாள் அதே வீடுகளுக்கு சென்று, 'டீத்துாள் எப்படி இருந்தது?' என, கருத்து கேட்டு, டீத்துாளை பணத்திற்கு விற்று, மார்க்கெட்டிங் செய்தேன்.
திருமணம் ஆன பின்னும், கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகளை பிரிந்து, வேலை நிமித்தம் தினமும், ஊர் ஊராக அலைய வேண்டியிருந்தது. எவ்வித சொந்த ஆசாபாசங்களுக்கு இடமில்லாமல், கடுமையாக உழைத்ததால், யூனிலிவர் நிறுவனத்தின், 'எக்சிக்யூட்டிவ் டைரக்டர்' பொறுப்பு கிடைத்தது. திடீரென்று ஒரு நாள், 'பெப்சிகோ' நிறுவனத்தில், மிகப் பெரிய பொறுப்புடன், வேலை கிடைத்தது. 'உன் உயரம் உனக்கே தெரியவில்லை. உன் திறமையை நிரூபிக்க, இந்த வேலை நிச்சயம் உதவும்' என, கணவரும் ஊக்கப்படுத்தினார். ஏனெனில், முன்பு பார்த்த வேலையை விட, இங்கு பன்மடங்கு உழைக்க வேண்டியிருந்தது. என் மூத்த மகள், 10ம் வகுப்பில் சரியாக படிக்கவில்லை. ஒரு தாயாக, மகளின் படிப்பில் கவனம் செலுத்த, பெப்சிகோ பணியை ராஜினாமா செய்து, மகளை நன்றாக படிக்க வைத்து, வெற்றி பெற வைத்தேன். ஆண்களை விட, பெண்களுக்கு தான் குடும்பமா, வேலையா என்ற குழப்பமான சூழ்நிலை
எழுகிறது. என் திறமையை அறிந்த யூனிலிவர், மறுபடியும் பணிக்கு அழைத்தது. ஒவ்வொரு படிகளையும் தாண்டி தான், எட்ட வேண்டிய இலக்குகளை எட்டினேன். நான் முன்னேறிய ஒவ்வொரு அடியும், பல சறுக்கல்களுக்கு பின் எடுத்து வைத்த அடிகள் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக