செவ்வாய், 8 அக்டோபர், 2013

தமிழீழத் தேசியத் கொடி ஏற்றலுடன் தொடங்கிய நெதர்லாந்து போட்டிகள்

தமிழீழத் தேசியத் கொடி ஏற்றலுடன் தொடங்கிய  நெதர்லாந்து உதைபந்தாட்ட, கரப்பந்தாட்டப் போட்டிகள்

hollend_sports_3நெதர்லாந்தில் 2013ம் ஆண்டுக்கான தமிழர் உதைபந்தாட்ட, கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் 05-10-2013 சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. தமிழீழ விடிவிற்காய் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபன் ,கேணல் சங்கர், லெப்.கேணல்குமரப்பா, லெப்.புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகள், 2ம் லெப். மாலதி மற்றும் கேணல்ராயூ ஆகியோரின் நினைவாக இடம்பெற்ற இப்போட்டியில் பொதுச்சுடரேற்றல், தேசியக்கொடியேற்றல,; ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கம் அகவணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து சுமார் 11.00மணியளவில் நெதர்லாந்திலுள்ள உதைபந்தாட்டக் கழகங்கள் பங்குபற்ற இப்போட்டிகள் வெகு விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றது. இறுதியில்
2ம் இடத்தினை ஒளடன்போஸ் தமிழர் விளையாட்டுக்கழகமும்
1ம் இடத்தினை இளம்பூக்கள் விளையாட்டுக்கழகமும் பெற்றுக் கொண்டன.
பின்னர் இடம் பெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில்
2ம் இடத்தினை ஸ்காகன் விளையாட்டுக் கழகமும்
1ம் இடத்தினை பேவர்வைக் தமிழர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் பெற்றுக்கொண்டன.
பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்ய சிறப்பாக நடைபெற்ற இப்போட்டிகள் சுமார் 7:30 மணியளவில் வெற்றி பெற்ற கழகங்களிற்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டு அனைவரின் கைதட்டலுடன் இனிதே நிறைவுற்றது.
hollend_sports_1
hollend_sports_4 hollend_sports_6 hollend_sports_10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக