புதன், 31 ஜூலை, 2013

தெலுங்கானா அமைக்க ஒப்புதல்

1.    ஆந்திரத்தில் தமிழ்ப்பகுதிகளைச்சேர்க்காமல் இருந்தாலே தெலுங்கானா அமைந்திருக்கும்.
2.    ஆந்திரா, கேரளா, கருநாடக மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பகுதிகளை இணைத்துத் தனி மாநிலமாக்க வேண்டும்.
3.    ஒன்றியப் பகுதியாக விளங்கும் புதுச்சேரியைத் தனி மாநிலமாக்கக் கோரும் முறையீட்டை ஏற்றுப் புதுச்சேரியை மாநிலமாக உயர்த்த வேண்டும்.
4.    கூர்க்கா, போடா முதலான தனி இன மக்கள் கோரும் வகையில்  பிற வேண்டுகைகளையும் ஏற்று மாநிலங்கள் அமைக்க வேண்டும்.
5.    சம்மு. காசுமீர் எனத் தனித் தனி மாநிலங்களாக அமைக்க வேண்டும்.
6.    கொள்கை அளவில் அறிவித்து விட்டு நடைமுறைப்படுத்துவதாகக்  கூறி இழுத்தடித்துக்   கொண்டே போகக்கூடாது.
7.    நமக்குத்தேவை மொழிவழி மாநிலங்கள் அல்ல; தனியுரிமை உடைய மொழி வழித் தேசியக் கூட்டரசே நமக்குத் தேவை  எனத் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வலியுறுத்தியதை
8.    நடைமுறைப்படுத்தும் காலம் விரைவில் வரவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



http://img.dinamalar.com/data/gallery/gallerye_233038541_769984.jpg



புதுதில்லி : தெலுங்கானா பகுதி மக்களின், அரை நூற்றாண்டு கால கனவு, நேற்று நனவானது. நாட்டின், 29வது மாநிலமாக,தெலுங்கானா உதயமாகிறது. ஆந்திராவை உடைத்து,தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க,ஐ.மு., கூட்டணிஒருங்கிணைப்பு குழுமற்றும் காங்கிரஸ் செயற்குழு கூட்டங்களில்,நேற்று ஒப்புதல்அளிக்கப்பட்டது.

"
ஆந்திராவின், மேடக், மெகபூப் நகர், அடிலாபாத், ஐதராபாத் உள்ளிட்ட, 10 மாவட்டங்களை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என்பது, தெலுங்கானா பகுதி மக்களின், 50 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கை. இதற்காக, ஆந்திராவில், பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. தெலுங்கானா கோரிக்கைக்காகவே, சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற கட்சி உருவானது. 2009ல், தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி, சந்திரசேகர ராவ், காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார். அவரின், உண்ணாவிரதம், 10 நாட்கள் நீடித்தது. அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், தெலுங்கானா பகுதி முழுவதும், கலவரம் வெடித்தது.இதையடுத்து, தனி மாநிலம் அமைக்க, மத்திய அரசு சம்மதித்தது. ஆனால், கலவரம் கட்டுக்குள் வந்ததும், தெலுங்கானா கோரிக்கையை, மத்திய அரசு, கிடப்பில் போட்டு விட்டது. இந்நிலையில், ஆந்திராவில், அடுத்த ஆண்டு சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், தெலுங்கானா பகுதிகளில், சமீப காலமாக மீண்டும் போராட்டங்கள் துவங்கின.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மூத்த தலைவர்கள் பலர், தெலுங்கானா கோரிக்கையை, மத்திய அரசு அலட்சியப்படுத்துவதாக கூறி, வேறு கட்சிகளுக்கு தாவினர். "தெலுங்கானா தனி மாநிலம் அமைக்காவிட்டால், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறாது' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. பீதியடைந்த காங்கிரஸ் மேலிடம், தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. இதையறிந்த, ஆந்திராவின், தெலுங்கானா அல்லாத பிற பகுதிகளான, கடலோர ஆந்திரா, ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், போராட்டத்தில் இறங்கினர்.

இந்த பகுதிகளை சேர்ந்த, காங்., மூத்த தலைவர்கள், "ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமே தொடர வேண்டும். தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கூடாது. அப்படி அமைத்தால், கட்சியிலிருந்து வெளியேறுவோம்' என, காங்., மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியும், இவர்களில் குறிப்பிடத் தக்கவர்.
ஆந்திர காங்., மூத்த தலைவர்களான, பல்லம் ராஜு, புரந்தரேஸ்வரி, பனபகா லட்சுமி ஆகியோர், நேற்று, டில்லிக்கு சென்று, காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங்கை சந்தித்து, "தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கூடாது' என, வலியுறுத்தினர்.இதற்கிடையே, நேற்று மாலையிலிருந்து, டில்லியில் பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின. காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, தெலுங்கானா விவகாரம் குறித்து பேசினார். இதன்பின், காங்., மூத்த தலைவர்கள், சுஷில் குமார் ஷிண்டே, சிதம்பரம், குலாம் நபி ஆசாத், திக்விஜய் சிங், அகமது படேல் உள்ளிட்டோர், காங்., தலைவர் சோனியாவை, அவரது இல்லத்தில் சந்தித்து, தெலுங்கானா மாநிலம் அமைவதால் ஏற்படும், சாதக, பாதக அம்சங்கள் குறித்து, விரிவாக ஆலோசித்தனர்.

இதையடுத்து, தெலுங்கானா விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. காங்., தலைவர்கள், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய லோக்தளம் தலைவர் அஜித் சிங், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிப்பதாக, ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காங்., தலைவர் சோனியா தலைமையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதிலும், தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங், மீடியா பிரிவு தலைவர் அஜய் மேக்கன் ஆகியோர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:அனைத்து தரப்பினரிடமும், பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி, இறுதியாக தனி மாநிலம் அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, கடினமான முடிவு. இந்த நடவடிக்கைக்கு, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது என்பது, மிக முக்கியமான பிரச்னை. இதற்காகவே, இவ்வளவு தாமதம் ஏற்பட்டது. அரசியல் சாசன விதிகளை பின்பற்றி, தனி மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி, காங்கிரஸ் கட்சி, மத்திய அரசிடம் வலியுறுத்தும். ஆந்திர சட்டசபைக்கும், இந்த அறிவிப்பு குறித்து, முறைப்படி தெரிவிக்கப்படும்.தனி மாநிலத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக, மத்திய அமைச்சரவை குழு ஏற்படுத்தப்படும். இந்த தனி மாநில அறிவிப்பின் பின்னணியில், எந்தவிதமான அரசியலும் இல்லை.ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும், பொதுவான தலைநகராக, அடுத்த, 10 ஆண்டுகளுக்கு, ஐதராபாத் இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

காங்., மேலிடத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, தனி மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதற்கிடையே, தனி தெலுங்கானா மாநிலம் குறித்த அறிவிப்பால், தெலுங்கானா பகுதி மக்களிடம், மகிழ்ச்சி கரை புரண்டோடியது. பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா உதயமாவதை அடுத்து, அப்பகுதி மக்களின், 50 ஆண்டு கனவு, நனவாகியுள்ளது. அவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

அடுத்தது என்ன?
*
தெலுங்கானா தனி மாநிலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக தனி மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முடிவடைவதற்கு, இன்னும் ஆறு மாதங்களாகும்.
*
மத்திய அமைச்சரவை இன்று கூடி, தெலுங்கானா மாநிலம் அமைக்கும் தகவலை, ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜியிடம், முறைப்படி தெரிவிக்கும்.
*
கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெலுங்கானா ஆகிய பகுதிகளுக்கு வருவாய், நீர் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வதில், ஒருமித்த முடிவை ஏற்படுத்துவதற்காக, ஒரு குழுவை, பிரதமர் நியமிப்பார்.
*
ஆந்திர சட்டசபையிலும், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவிலும், தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்படும்.

சோனியா முடிவால்ஆந்திராவில் பதற்றம்:தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு, சோனியா தலைமையில் நடந்த காங்., செயற்குழு கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆந்திராவில், தெலுங்கானா அல்லாத, ராயலசீமா, கடலோர ஆந்திர பகுதிகளில், கடும் பதற்றம் நிலவுகிறது.அங்கு, நேற்று காலை முதலே, மக்கள் நடமாட்டம் குறைந்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து குறைந்தது. மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், மத்திய அரசுக்கு எதிராக, கோஷங்களை எழுப்பினர்.
ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. நிலைமையை சமாளிப்பதற்காக, துணை ராணுவப் படையினர் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா, தமிழக போலீசாரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில், ""ஆந்திராவில், சட்டம் - ஒழுங்கு அமைதியாக உள்ளது. அசம்பாவிதம் ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கு, கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்படுவர்,'' என்றார்.

ஐதராபாத் யாருக்கு?ஆந்திராவில், மொத்தம், 23 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், ஐதராபாத் உட்பட, 10 மாவட்டங்களை தனியாக பிரித்து தான், தற்போது தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுகிறது. ஆனால், ஐதராபாத்துக்கு, தெலுங்கானா மக்களும், ஆந்திராவின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களும், உரிமை கோருகின்றனர். இதனால், "இன்னும், ஐந்து ஆண்டுகளுக்கு, இரு பகுதிகளுக்கும் பொதுவான தலைநகராக, ஐதராபாத் இருக்கும். பின், தெலுங்கானாவுடன் சேர்க்கப்படும்' என, முதலில், தகவல் வெளியானது.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து, "ஐதராபாத், இருமாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக, 10 ஆண்டுகளுக்கு தொடரும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தெலுங்கானாவில் எத்தனை தொகுதிகள்: ஒன்றுபட்ட ஆந்திராவில், தற்போது 294 சட்டசபை தொகுதிகளும், 42 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. இந்நிலையில் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதால், 119 சட்டசபை தொகுதிகளும், 17 லோக்சபா தொகுதிகள் தெலுங்கானா மாநிலத்துக்குள் வருகிறது. ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளும், 25 லோக்சபா தொகுதிகளும் இருக்கும்.

கட்சிகளின் பலம்:ஒன்றுபட்ட ஆந்திராவில் சட்டசபை (எம்.எல்.ஏ.,), லோக்சபா (எம்.பி.,) வாரியாக கட்சிகளின் தற்போதைய பலத்தை பார்க்கலாம்.

கட்சிகள் எம்.எல்.ஏ., எம்.பி.,
காங்., 146 29
தெலுங்கு தேசம் 86 6
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 17 4
ஒய்.எஸ்.ஆர்., காங்., 17 2
மற்றவை 19 1

புதிய மாநிலம் உருவாவது எப்படி:நாட்டில் ஒரு புதிய மாநிலம் உருவாக வேண்டுமெனில், அதற்கென சட்ட நடைமுறைகள் உள்ளன. இதன்படி, இந்திய சட்ட விதி 3ன் படி, புதிதாக உருவாகும் மாநிலம், எந்த மாநிலத்திலிருந்து பிரிக்கப்படுகிறதோ, அம்மாநில சட்டசபைக்கு, ஜனாதிபதியால் பரிந்துரை (மசோதா) ஒன்று அனுப்பப்படும். இந்தப் பரிந்துரையை, மாநில அரசு, சட்டசபையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். இதன் பின், இதே மாதிரியான மசோதா, பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் தனி மாநிலம் சட்டப்படி உருவாக்கப்பட முடியும்.

தனி மாநில கோரிக்கை:இந்தியாவில் சில மாநிலங்களில் தனி மாநில கோரிக்கை தொடர்கிறது. அதில் முக்கியமானவை:மகாராஷ்டிரா (விதர்பா),உ.பி., (பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், அவாத் பிரதேசம், பச்சிம் பிரதேசம்)
மேற்கு வங்கம் (கூர்க்காலாந்து),அசாம் (போடோலேன்ட்)

கடினமான முடிவு: காங்., : காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங், மீடியா பிரிவு தலைவர் அஜய் மேக்கன் ஆகியோர் அளித்த பேட்டி:அனைத்து தரப்பினரிடமும், பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி, இறுதியாக தனி மாநிலம் அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, கடினமான முடிவு. இந்த நடவடிக்கைக்கு, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது என்பது, மிக முக்கியமான பிரச்னை. இதற்காகவே, இவ்வளவு தாமதம் ஏற்பட்டது. அரசியல் சாசன விதிகளை பின்பற்றி, தனி மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி, காங்கிரஸ் கட்சி, மத்திய அரசிடம் வலியுறுத்தும். ஆந்திர சட்டசபைக்கும், இந்த அறிவிப்பு குறித்து, முறைப்படி தெரிவிக்கப்படும்.தனி மாநிலத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக, மத்திய அமைச்சரவை குழு ஏற்படுத்தப்படும். இந்த தனி மாநில அறிவிப்பின் பின்னணியில், எந்தவிதமான அரசியலும் இல்லை.ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும், பொதுவான தலைநகராக, அடுத்த, 10 ஆண்டுகளுக்கு, ஐதராபாத் இருக்கும், என்றனர்.
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட வரலாறு: இந்தியாவில் தற்போது 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஆங்கிலேயரிடம் இருந்து 1947ல், இந்தியா சுதந்திரம் பெற்ற போது, நாட்டில் 565 சமஸ்தானங்கள் இருந்தன. இவைகள் சுதந்திர
Advertisement
பகுதிகளாக இருக்க வேண்டும், என சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர். ஆனால், அனைத்து சமஸ்தானங்களும், இந்தியாவுடன் இணைய வேண்டும் என அரசு அறிவித்தது. அதன்படி பிகானிகர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள் உடனடியாக இணைந்தன. மற்ற சமஸ்தானங்களை இணைக்கும் பொறுப்பு, அப்போதைய உள்துறை அமைச்சர் "இரும்பு மனிதர்' என அழைக்கப்பட்ட வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் முயற்சியால் 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948, மார்ச் 3ல் இணைந்தது. காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுத்தன. பின் ராணுவ நடவடிக்கைகள் மூலம் இணைக்கப்பட்டன.

1912
பீகார்
1937
உத்தரபிரதேசம்
1948
காஷ்மீர், ஒடிசா, ராஜஸ்தான்
1947
மணிப்பூர், மேற்கு வங்கம்
1956
ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், கேரளா, மத்திய பிரதேசம், திரிபுரா
1960
மகாராஷ்டிரா
1961
கோவா
1963
நாகலாந்து
1966
அரியானா, பஞ்சாப்
1970
மேகாலயா, குஜராத்
1971
இமாச்சலப்பிரதேசம்
1972
மிசோரம், அருணாச்சல பிரதேசம்
1975
சிக்கிம், அசாம்2000 சட்டீஸ்கர், உத்தரகண்ட், ஜார்க்கண்ட்
2013
தெலுங்கானா

தனி தெலுங்கானா மாநிலத்துக்காக, பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. தனி மாநிலத்துக்கான அறிவிப்பை வெளியிட்டால் மட்டும் போதாது. இதுதொடர்பான மசோதாவை, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில்,ஒருமனதாக நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
பிரகாஷ் ஜாவடேகர், பா.ஜ., செய்தி தொடர்பாளர்

""
தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவை வரவேற்கிறேன். ஆனால், இதைப் பின்பற்றி, நாட்டின் மற்ற பகுதிகளிலும், தனி மாநிலம் அமைப்பதற்கான கோரிக்கைகள் வலுக்கும். இது, அபாயகரமான போக்கு.
-
ஒமர் அப்துல்லா,காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி தலைவர்


தெலுங்கானா உருவான கதை:* புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம், இந்தியா சுதந்திரம் பெற்ற போது, ஐதராபாத் சமஸ்தானத்தில் இடம்பெற்றிருந்தது.
*1948
செப்., 17 ல், இந்தியாவுடன் ஐதராபாத் சமஸ்தானம் இணைக்கப்பட்டது. இதன் முதல்வராக எம்.கே.வெல்லோடி பதவியேற்றார்.
*1952
ல் நடந்த முதல் தேர்தலில் வெற்றி பெற்று, ஜனநாயக முறைப்படி ராமகிருஷ்ண ராவ் முதல்வரானார்.
*1953
ல், கர்னூலை தலைநகராக கொண்டு, ஆந்திரா உருவாக்கப்பட்டது.
ஐதராபாத் மாநிலத்தை, ஆந்திராவுடன் இணைக்க, அப்போதைய மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கு ஐதராபாத்தில் இருந்த தெலுங்கானா பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்தனர்.
*1956
பிப்., 20: எதிர்ப்பை மீறி, ஆந்திராவுடன், தெலுங்கானாவை உள்ளடக்கிய ஐதராபாத் மாநிலம் இணைக்கப்பட்டது.
*
மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, தெலுங்கு பேசும் மக்கள்தொகை வாரியாக, சென்னை மாகாணத்தில் இருந்து, சில பகுதிகள், ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. இறுதியாக, 1956 நவ., 1 ல், ஒன்றுபட்ட ஆந்திரா உருவாக்கப்பட்டது. தலைநகராக ஐதராபாத் உருவாக்கப்பட்டது.
* 1969
ல் தெலுங்கானா தனிமாநிலமாக உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கானா பிரஜ்ஜா சமிதி என்ற அமைப்பின் மூலம் போராட்டம் தீவிரமானது.
*1972 :
தெலுங்கானாவுக்கு எதிராக, ராயலசீமா-கடலோர ஆந்திராவை உள்ளடக்கிய பகுதியில், "ஜெய் ஆந்திரா' என்ற கோஷம் எழுப்பப்பட்டது.
*1985
மற்றும் ராமாராவ் ஆட்சிக்காலத்தில், தெலுங்குதேச மக்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
*1999
வரை, தெலுங்கானா மாநில பிரிவினை கோரப்பட வில்லை.
*1999
ல், மாநிலத்தில் தொடர்ந்து சந்தித்த சட்டபை தேர்தல் தோல்விகளால் காங்., கட்சி, தெலுங்கானா கோரிக்கையை எழுப்பியது.
*2001:
தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்குதேச கட்சியில் இருந்து விலகிய சந்திரசேகர ராவ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.
*2009
நவ., 29: சந்திரசேகர ராவ், உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். இதையடுத்து டிச., 9 ல், மத்திய அரசு,
தெலுங்கானா அமைக்க உறுதி அளித்தது. இருப்பினும், டிச., 23 ல், இதனை கிடப்பில் போட்டது.
*2010
பிப்., 3: தெலுங்கானா அமைப்பது குறித்து, மக்களின் கருத்துகளை அறிய, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா
தலைமையிலான கமிட்டி உருவாக்கப்பட்டது. இது டிச., 30ல் அறிக்கையை சமர்பித்தது.
*2011 -12:
எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.ஏ.,க்கள் தெலுங்கானாவை வலியுறுத்தி, பதவிகளை ராஜினாமா செய்தனர்.
* 2012
டிச., 28: மத்திய அரசு, சர்வ கட்சி கூட்டத்தை நடத்தியது. முடிவு எட்டப்படவில்லை.
*2013
ஜூலை 30: தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக